அதிகாலை 4 மணிக்கு வந்த மெயில்.. பணிநீக்கம் செய்ய ஒரு நேரம் காலம் வேணாமா Meta?
மெட்டா நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருக்கு அதிகாலை 4 மணிக்கு இமெயில் மூலம் பணிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இன்று தான் உங்களுக்கு கடைசி பணி நாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது அந்த பெண் ஊழியருக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மை காலமாக பல்வேறு பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன. மைக்ரோசாப்ட் ( Microsoft ), ட்விட்டர் ( Twitter ), ஃபேஸ்புக் (Facebook ), அமேசான் (Amazon ) போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக நீக்கி வருகிறது.

குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ( WhatsApp ) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆப்ஸ்களின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) பணிநீக்க நடிவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 10,000 பேரை பணிநீக்கம் செய்தது. அதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,000 பேரை பணிநீக்கம் செய்திருந்தது.
அப்படி சுமார் 16 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிதி நெருக்கடி காரணமாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொழில்நுட்ப ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழலில் மெட்டா நிறுவனம் அதிகாலை 4 மணிக்கு பெண் ஊழியர் ஒருவருக்கு பணிநீக்க நோட்டீஸை இமெயில் (Email) மூலம் அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மெட்டா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்த வந்த ஸ்டீரியோஃப் (Sterioff) என்ற பெண் ஊழியரே அதிகாலையில் பணிநீக்க இமெயிலை பெற்றுள்ளார். இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மெட்டாவில் பணிபுரிந்து வந்த நான் அதிகாலை 4 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு மிகுந்த வருத்தம் அடைகிறேன். இன்று, எனக்கு கடைசி பணி நாளாக இருக்கும். இப்போது நான் ஓப்பன் டூ வொர்க் (OpenToWork) ஆக இருக்கிறேன். மெட்டாவால் எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எப்போதும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.
இங்கு நிறைய கற்றுக்கொண்டேன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற எனக்கு மெட்டாவில் புதிய அனுபவம் கிடைத்தது. இதுபோன்று வேறொரு அனுபவத்திற்காக நான் காத்திருக்கிறேன். என்னுடன் பணி புரிந்தவர்கள் தைரியமாக இருங்கள். திறந்த மனபான்மை உடன் இருங்கள்.
புதிய சாதனைகளை செய்யுங்கள். உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். நமது பாதை மீண்டும் ஒரு இடத்தில் சேரும் என்று நம்புகிறேன். இது ஒரு சிறிய தொழில்நுட்ப உலகம். நீங்கள் ஒவ்வொருவரும் புதுமையை காண்பீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் பணியில் இருந்தபோதும், மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கை எடுத்திருந்தது. அப்போதும் இவர் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
சக பணியாளர்கள் வேலை இழப்பதை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. திறமையான பல பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது செய்தி அல்ல தாக்கம் என்று தெரிவிருந்தார். இப்பது அவரும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications








