Future-க்கு டிக்கெட்.. மொத்த உலகமே மிரளுது.. Orion ஏஆர் கிளாஸ்சஸ்.. Meta இறக்கிய விர்ச்சுவல் வேல்ர்டு!
மெட்டா கனெக்ட் 2024 (Meta Connect 2024) நிகழ்வில் ஒட்டுமொத்த உலகமே மூக்கில் விரல் வைக்கும்படியான டெக்னாலஜிகளுடன் ஓரியன் ஏஆர் கிளாஸ்சஸ் (Orion AR Glasses) களமிறங்கி இருக்கிறது. நிஜ உலகையும், விர்ச்சுவல் உலகையும் இணைக்கும் அதிநவீன பீச்சர்கள் மற்றும் கன்ட்ரோல்களுடன் உங்களை எதிர்காலத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறது. ஒரு சாதாரண கண்ணாடி போல தெரிந்தாலும், ஹியூமன்-ஓரியன்டெட் கம்பியூட்டிங் (Human-oriented Computing) டெக்னாலஜியில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. இந்த ஓரியன் ஏஆர் கிளாஸ்சஸின் விவரங்கள் இதோ.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) மெட்டா நிறுவனமானது, ஆக்மென்டெட் ரியாலிட்டி கிளாஸ்சஸ் (Augmented Reality Glasses) உருவாக்கத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்போன் மூலம் செய்யக்கூடிய விஷயங்களை கண்களில் மாட்டக்கூடிய ஏஆர் கிளாஸ் மூலம் விர்ச்சுவலாகவும், அதே நேரத்தில் ஃபிங்கர்டிப்பிலும் செய்வதற்கான டெக்னாலஜிகளை உருவாக்கி வருகிறது.

இப்போது, ஓரியன் ஏஆர் கிளாஸ்சஸ் மூலம் அதை செய்து முடித்து, உலகுக்கு எதிர்கால டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஏஆர் கிளாஸ் மூலம் 2டி மற்றும் 3டி கன்டென்ட்களை ஹாலோகிராபிக் காட்சிகள் மூலம் பார்த்து கொள்ள முடியும். அதேநேரத்தில் அதை கன்ட்ரோல் செய்யவும் முடியும். இது கிட்டத்தட்ட விர்ச்சுவல் வேர்ல்டு அனுபவத்தை கொடுக்கும்.
அதாவது, இந்த ஓரியன் ஏஆர் கிளாஸை கண்களில் மாட்டிய பிறகு, நீங்கள் பார்க்கும் இடத்தில் ஹாலோகிராபிக் காட்சிகளை உருவாக்கி கொள்ள முடியும். அதேபோல பார்க்கும் பொருட்களின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். உங்களது ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனில் ஸ்வைப், ஸ்க்ரோல் செய்வது போல, இதில் அந்தரத்தில் ஃபிங்கர்டிப் கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும்.
ஆனால், ஸ்மார்ட்போனை விட மிகப்பெரிய டிஸ்பிளே போல தெரியும். அதுவும் விர்ச்சுவலாக உங்களது கண் முன்னே திரும்பும் பக்கமெல்லாம் தெரியும். இது இன்டோர் மற்றும் அவுட்டோருக்கும் பொருந்தக் கூடிய ஏஆர் கிளாஸ் மாடலாகும். இது கிட்டத்தட்ட விஆர் ஹெட்செட் போன்றதுதான். ஆனால், அதைவிட லைட்வெயிட் மற்றும் எளிதாக பயன்படுத்தக் கூடியது.
அதேபோல விலையிலும் விஆர் ஹெட்செட் மாடல்களைவிட மலிவாக இருக்கும். குறிப்பாக விஆர் ஹெட்செட் மாடல்களை போலல்லாமல் டிரான்ஸ்பரன்ட் கிளாஸ்சஸ் வருவதால், இதை எங்கு சென்றாலும் எளிதாக எடுத்து செல்லவும் முடியும். ஆன்/ஆன் செய்வதும் மிகப்பெரிய காரியமல்ல. எந்த இடத்திலும் நொடியில் அதை செய்து கொள்ளலாம்.

ஓரியன் ஏஆர் கிளாஸ்சஸ் அம்சங்கள் (Orion AR Glasses Specifications): இந்த மாடலில் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistance) வருகிறது. கன்ட்ரோல்களுக்காக ஹேண்ட்-டிராக்கிங் (Hand Tracking) வருகிறது. அதேபோல கண்கள் பார்க்கும் இடத்தில் கன்டென்ட்களை கொடுக்க ஐ-டிராக்கிங் (Eye-Tracking) வருகிறது. விரஸ்ட் பேஸ்டு நியூரல் இன்டர்பேஸ் (Wrist-based Neural Interface) உள்ளது.
அதாவது, இந்த ஓரியன் ஏஆர் கிளாஸின் கன்ட்ரோல்களுகாக கையில் மாட்டிக்கொள்ள விரஸ்ட் கொடுக்கப்படும். இதன் மூலம் உங்களது கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். ஹாலோகிராம் வருவதால், ரியல் வேல்ர்டு சைஸ்களில் வீடியோகள் மற்றும் போட்டோக்களை பார்த்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யலாம்.
ஆனால், விர்ச்சுவலாக, பெரிய ஸ்கிரீனில் செய்வதை போலத்தான் இந்த ஓரியன் ஏஆர் கிளாஸ்சஸ் உங்களுக்கு அந்த அனுபவத்தை கொடுக்கும். இவ்வளவு பீச்சர்களை கொண்டிருப்பதால், இதுவொரு புரொடோடைப் மாடாகவே இருக்கிறது. டெமோ மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 2027 ஆண்டு வாக்கில் கஸ்டமர்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications