கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?

|

கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் பணி நீக்கம் (Job Cuts).. அதுவும் 100 பேர், 200 பேர் அல்ல.. ஆயிரக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர்!

குறிப்பாக 7 தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவிலான எண்ணிக்கையில் பணி நீக்கங்களை நிகழ்த்தி உள்ளது! அதென்ன நிறுவனங்கள்? எந்த நிறுவனம் எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளது? இருப்பதிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம் எது? இதோ லிஸ்ட்!

07. சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce)

07. சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce)

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸும் கூட இந்த மாத தொடக்கத்திலேயே பணி நீக்கங்களை அறிவித்தது.

இந்நிறுவனம் 2500 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

06. சீகேட் (Seagate)

06. சீகேட் (Seagate)

ஹார்ட் டிரைவ் தயாரிப்பாளரான சீகேட் டெக்னாலஜி கடந்த மாதம், தனது மொத்த பணியாளர்களில் 8% பேரை, அதாவது சுமார் 3,000 பேரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

இதற்காக, இந்நிறுவனம் நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் குறைந்து வரும் தேவைகள் போன்ற காரணங்களை முன்வைகிறது!

05. சிஸ்கோ (CISCO)

05. சிஸ்கோ (CISCO)

ஒரு ஆன்லைன் அறிக்கையின்படி, சிஸ்கோ நிறுவனம் 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர் வேலை இழந்து உள்ளனர்.

இருப்பினும் சரியான எண்ணிக்கை குறித்த எந்த விவரங்களையும் சிஸ்கோ தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சக் ராபின்ஸ் வெளியிடவில்லை!

யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?யாராச்சும் சொன்னா தானே தெரியும்! பெரும்பாலான SBI பயனர்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட் சர்வீஸ்! என்னது அது?

04. இன்டெல் (Intel)

04. இன்டெல் (Intel)

இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பாட் கெல்சிங்கர், நிறுவனத்தின் ​​செலவினங்களைக் குறைக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளதாக கூறி 1000 பேரை பணி நீக்கம் செய்துள்ளார்!

ப்ளூம்பெர்க் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, இன்டெல் நிறுவனத்தின் இந்த பணிநீக்கம் இன்டெல்லின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்களை பெரிதும் பாதிக்கும்.

03. அமேசான் (Amazon)

03. அமேசான் (Amazon)

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் - அமேசான் நிறுவனத்தின் இந்த பணி நீக்கம் வருகிற 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்க உள்ளது, அதை அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியே உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

02. மெட்டா (Meta)

02. மெட்டா (Meta)

இதுவரை இல்லாத அளவில், மிகப்பெரிய எண்ணிக்கையிலான பணி நீக்கத்தை செய்துள்ள நிறுவனம் - முன்னதாக பேஸ்புக் என்று அழைக்கப்பட்ட - மெட்டா நிறுவனமே ஆகும்.

இந்நிறுவனம் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது மெட்டா நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 13 சதவீதம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்!

01. ட்விட்டர் (Twitter)

01. ட்விட்டர் (Twitter)

சரியான எண்ணிக்கை தெரியவில்லை ஆனால் - கிடைக்கப்பெற்ற தகவலின்படி - ட்விட்டர் நிறுவனம் கிட்டத்தட்ட அதன் பாதி பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்காக, விளம்பரதாரர்கள் பின்வாங்குதல், வருமானத்தில் பெரிய அளவிலான வீழ்ச்சி போன்ற காரணங்களை முன் வைக்கிறார் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆன எலான் மஸ்க்!

Best Mobiles in India

English summary
Meta Twitter Or Amazon Which tech company fired most numbers of employees in the name of job cuts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X