Home
News

கேமரா, ஸ்பீக்கர், AI, வாட்ஸ்அப்.. ஸ்மார்ட்போன் விலைக்கு Meta Ray Ban ஸ்மார்ட் கிளாஸ்.. இந்திய அறிமுகம் உறுதி!

மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு சொந்தமான மெட்டா (Meta) நிறுவனம், அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட் கிளாஸ்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது ரே-பான் மெட்டா ஏஐ கிளாஸ்கள் (Meta Ray Ban AI smart glasses) ஆகும்!

எசிலோர் லக்சோட்டிகாவுடன் (Essilor Luxottica) இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ரே-பான் மெட்டா கிளாஸ்கள், மெட்டாவின் ஏஐ (Meta AI) ஆல் இயக்கப்படுகின்றன, மேலும் அவை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வாங்க கிடைக்கின்றன. இதற்கிடையில் இது இந்தியா, மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தைகளுக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் விலைக்கு Meta Ray Ban ஸ்மார்ட் கிளாஸ்!

மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்களின் முக்கிய அம்சங்கள் (Meta Ray-Ban smart glasses Specifications Features): செப்டம்பர் 2023 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்கள் குரல் சார்ந்த ஏஐ அம்சங்களுடன், ரே-பான் நிறுவனத்தின் சிக்னேச்சர் டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்களின் மூலம் பயனர்கள் கேள்விகள் கேட்கலாம், இசை இயக்கத்தை கட்டுப்படுத்தலாம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிடிக்கலாம் மற்றும் மெசேஜ்களை அனுப்பலாம். இவை அனைத்தும் "ஹே மெட்டா" என்று கூறுவதன் மூலம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ (Hands Free) ஆக செய்ய முடியும்

மேலும் மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்கள் ஆனது வாட்ஸ்அப் (WhatsApp), மெசஞ்சர் (Messenger) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) வழியாக ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் (Audio and Video Call) ஆதரிக்கின்றன. மேலும் இப்போது இன்ஸ்டாகிராம் வழியாக டைரக்ட் மெசேஜ்களை (Direct Message) அனுப்பும் திறனையும் பெற்றுள்ளது.

மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்கள் ஆனது 1080பி வீடியோக்களை (1080p Videos) படமாக்கக்கூடிய 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளன. இது ஓப்பன் இயர் ஸ்பீக்கர்களையும் (Open Ear Speakers) கொண்டுள்ளது. இது பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங்கையும் (Live Streaming) ஆதரிக்கிறது.

இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று - புதிய லைவ் டிரான்ஸ்லேஷன் டூல் (Live Translation Tool), இது ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 32 மொழிகளை ஆதரிக்கிறது. தேவையான லேங்குவேஜ் பேக்ஸ் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் இந்த டூல் ஆஃப்லைனிலும் (Offline) செயல்படும். இந்த கிளாஸ்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ள சந்தைகளில், பயனர்கள் சோதனை ரீதியாக "நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்" என்கிற மோட்-ஐயும் (see-what-you-see mode) சோதித்து வருகின்றனர் - இது சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப பதிலளிக்கும் ஒரு ஏஐ விஷன் அம்சமாகும்.

மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்களின் இந்திய விலை நிர்ணயம் (Meta Ray-Ban smart glasses Price in India Expected) எப்படி இருக்கும்? மெட்டா நிறுவனம் அதன் மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்களின் சரியான வெளியீட்டு தேதி அல்லது விலையை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இதன் அமெரிக்க விலை - இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,600 ஆக உள்ளது. ஆக இதன் இந்திய விலை ரூ.35,000 முதல் 40,000 க்குள் தொடங்கலாம்.

இந்தியாவிற்கு வரும் போது மெட்டா ரே-பான் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்கள் ஆனது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் , வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் Sஸ்பாட்டிஃபை, அமேசான் மியூசிக் மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற பிரபலமான மியூசிக் தளங்கள் உடனான இணக்கத்தன்மை உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடனும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் கூகுள் மற்றும் சாம்சங் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் ஸ்மார்ட் கிளாஸ்களை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான வேகத்தில் மெட்டாவிடம் இருந்து இந்த அப்டேட் வந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கொரியன் எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு வாக்கில், கூகுள்-சாம்சங் கூட்டணியிலான ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் ஸ்மார்ட் கிளாஸ் வெளியீடு நடக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meta Ray Ban AI Smart Glasses India Launch Confirmed Check Out Specifications Expected Price Range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X