iPad யூசர்கள் பெருமூச்சு.. இனிமே பெரிய ஸ்கிரீனில் WhatsApp.. மெட்டா இறக்கிய பெரிய அப்டேட்.. iOS யூசர்கள் குஷி!
ஆப்பிள் (Apple) யூசர்கள் பல வருடங்களாக கேட்டுவந்த அப்டேட்டை மெட்டா (Meta) நிறுவனம் கொண்டு வந்துவிட்டது. இனிமேல் ஐபாட் வைத்திருக்கும் யூசர்கள் அதில் வாட்ஸ்அப்-ஐ (WhatsApp) பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் மல்டி-டிவைஸ் டெக்னாலஜி (Multi-device Technology) மூலம் ஐபோன், மேக் மற்றும் மற்ற டிவைஸ்களுடன் சிங்க் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புதிய ஆப்-ஐ எப்படி பெறுவது? எந்த ஐபாட் வெர்ஷனில் (iPad Version) பயன்படுத்த கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஆண்ட்ராய்டு யூசர்கள் மட்டுமல்லாமல், ஐஓஎஸ் யூசர்களுக்கு மத்தியிலும் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்-ஆக மாறிவிட்டது. ஸ்டேட்டஸ் மூலம் டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ போன்றவற்றை பகிர முடிவதால், கிட்டத்தட்ட சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மாகவும் உருவெடுத்து வருகிறது. இதனால், ஐபாட்ஓஎஸ் யூசர்களுக்கும் அதன் தேவை ஏற்பட்டது.

ஆனால், மெட்டா நிறுவனம், ஐபாட்ஓஸ் யூசர்களும் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும்படியான அப்டேட்டை பல வருடங்களாக கொண்டுவராமல் இருந்தது. இருப்பினும், ஐபாட்ஓஎஸ் யூசர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்த கோரிக்கைகளின் அடிப்படையில், மெட்டா நிறுவனம் அதை செய்துள்ளது. ஐபாட்ஓஎஸ் 1.51 (iPadOS 15.1) அல்லது அதற்கு பிறகான ஓஎஸ்களில் இனி வாட்ஸ்அப் கிடைக்க இருக்கிறது.
இந்த ஓஎஸ்களை கொண்ட ஐபாட்களை வைத்திருக்கும் யூசர்களுக்கு இப்போது வாட்ஸ்அப் ஆப் டவுன்லோட் செய்யவும் கிடைக்கிறது. இதற்கான லிங்கை மெட்டா நிறுவனம், அதனுடையை சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இதனால், ஐபாட் யூசர்கள் குஷியாகிவிட்டனர். ஆகவே, ஐபோனில் பயன்படுத்திய வாட்ஸ்அப் பீச்சர்கள் இனிமேல் பெரிய ஸ்க்ரீனில் கிடைக்க இருக்கிறது.
இதுபோக ஐபாட்ஓஎஸ் மூலம் கிடைக்கும் ஸ்டேஜ் மேனஜர் பீச்சர் மூலமாக ஸ்பில்ட் வியூ மற்றும் ஸ்லைட் ஓவர் டூ வியூ போன்ற ஆப்ஷன்களையும் இதில் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், ஐபாட் யூசர்களுக்கான வாட்ஸ்அப்-பில் மல்டி டிவைஸ் டெக்னாலஜி (Multi-device Technology) சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே ஐடி மூலம் மல்டி டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதாவது, ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஐபோன், ஐபாட் மற்றும் ஐமேக் டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கான சின்ங் சப்போர்ட் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், உங்களது அக்கவுண்ட்டை தொடர்ந்து கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் முடியும். இதுபோன்ற பல அப்டேட்களை ஐபாட்ஓஎஸ் யூசர்களுக்கு மெட்டா நிறுவனம் கொடுக்க இருக்கிறது.
ஸ்டேஜ் மேனஜர் கிடைக்கும் ஐபாட்கள் என்னென்ன? எம்4 சிப் (M4 Chip) கொண்ட ஐபாட் ப்ரோ (iPad Pro) மாடல், 3ஆவது ஜெனரேஷன் ஐபாட் ப்ரோ (12.9 இன்ச்) அல்லது அதற்கு மேலான ஜெனரேஷன் மாடல்கள், 1ஆவது ஜெனரேஷன் ஐபாட் ப்ரோ (11 இன்ச்) மாடல்கள், 5ஆவது ஜெனரேஷன் ஐபாட் ஏர் (iPad Air) மாடல்கள், ஐபாட் ஏர் (11 இன்ச்) மாடல்களில் கிடைக்கிறது.
எப்படி டவுன்லோன் செய்வது? உங்களது ஐபாடில் இருக்கும் ஆப் ஸ்டோருக்கு செல்லுங்கள். வழக்கமாக செய்வதை போலவே வாட்ஸ்அப் என டைப் செய்து மெட்டாவின் வாட்ஸ்அப் ஆப்-ஐ தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு ஆப்-ஐ ஓப்பன் செய்து லிங்க்ட் டிவைஸ் (Linked Device) ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.
இப்போது, உங்களது ஐபோனில் பயன்படுத்திவரும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை லிங்க் செய்யும் படிகள் இருக்கும். இதை முடித்துவிட்டால் போதும், ஐபாடிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக யுஐ கிடைக்கும். ஏனென்றால், பெரிய ஸ்கிரீனில் பயன்படுத்துவதால், ஈஸியாக இருக்கும். அதே நேரத்தில் புதுவிதமாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








