Home
News

புது Facebook ரூல்ஸ்.. இனிமே அடுத்தவங்க கன்டென்ட போடாதீங்க.. அப்புறம் மொத்தமா போயிரும்.. மெட்டா எடுத்த முடிவு!

பேஸ்புக் (Facebook) ஆப் மூலம் வேறொருவரின் வீடியோக்கள், போட்டோக்கள் அல்லது டெக்ஸ்ட் போஸ்ட்களை அப்படியே காப்பி அடித்து மீண்டும் பயன்படுத்தும் அக்கவுண்ட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மானிடைசேஷன் அணுகலை இழப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பகிரும் அனைத்திற்கும் குறைவான விநியோகம் மட்டுமே பெறும்படி மெட்டா (Meta) நிறுவனம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

பேஸ்புக் போஸ்ட் மட்டுமல்ல, வீடியோக்கள், ரீல்ஸ்கள் போன்ற ஒட்டுமொத்தத்திலும் கன்டன்ட் கிரியேட்டர்கள் என்னும் பெயரில் அடுத்தவர்களின் உழைப்பை காப்பி அடிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், ஒரிஜினல் கன்டென்ட்களைவிட அதை காப்பி அடித்து போஸ்ட் செய்யப்பட்ட கன்டென்ட்கள் அதிக லைக்குகள், வியூகளை பெறுகின்றன.

புது Facebook ரூல்ஸ்.. இனிமே அடுத்தவங்க கன்டென்ட போடாதீங்க.. அப்புறம்?

இதனால், மெட்டா நிறுவனம் அன்ஒரிஜினல் கன்டென்ட் (Unoriginal Content) விதிமுறைகள் மூலம் அதை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரிஜினல் கன்டென்ட்களை கொடுக்கும் கிரேயேட்டர்களின் தனித்துவத்தையும், சிந்தனைகளையும் பாதுகாக்கவும் மெட்டா நிறுவனம் முயற்சி செய்துள்ளது. காப்பி அடிப்பவர்களுக்கு இனிமேல் கஷ்டமாக இருக்கப்போகிறது.

அன்ஒரிஜினல் கன்டென்ட் என்றால் என்ன?
மற்றொருவரின் படைப்பை (போஸ்ட், வீடியோ, போட்டோ) பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்திய கன்டென்ட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது என்பது அன்ஒரிஜினல் கன்டென்ட்டாக எடுத்து கொள்ளப்படும். இது ஒரிஜினல் கிரியேட்டரின் உழைப்பு மற்றும் படைப்பாற்றலை திருடுவதாகும். இதையே மெட்டா அன்ஒரிஜினல் கன்டென்ட் என்கிறது.

அப்படி பயன்படுத்தும்போது, கிரியேட்டர்கள், அதில் கமெண்ட்கள், ரீயாக்சன்கள் மற்றும் புதிய வீடியோ அல்லது டிரெண்ட் அடிப்படை போன்ற தனித்துவமான சேர்ப்பு இருக்க வேண்டும். அதேபோல அனுமதி இன்றி இதுபோன்ற ரீப்பிட் கன்டென்ட்கள் மற்றும் ரீபோஸ்ட்களை போடுவதும் அன்ஒரிஜினல் கன்டென்ட் என்று எடுத்து கொள்ளப்பட இருக்கிறது.

அன்ஒரிஜினல் கன்டென்ட் என்ன செய்யப்படும்?
இதுபோன்ற கன்டென்ட்களுக்கு எதிராக மெட்டா கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அதாவது, மேற்கண்ட அன்ஒரிஜினல் கன்டென்ட் அடிப்படையில் சிக்கும் பேஸ்புக் அக்கவுண்ட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மானிடைசேஷன் அணுகலை இழக்க செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு கிடைக்கும் ரீச் குறைக்கப்படும்.

ஆகவே, இதுபோன்ற அக்கவுண்ட்கள் மூலம் பகிரப்படும் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் போஸ்ட்களுக்கு குறைந்த அளவிலான ரீச் மட்டுமே கிடைக்கும். இதனால், அன்ஒரிஜினல் கன்டென்ட்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம். அதேபோல இது தொடர்ந்தால், அந்த அக்கவுண்ட் நிரந்தமாக நீக்கம் செய்யப்படலாம்.

மேலும், பேஸ்புக் மூலம் டூப்லிகெட் வீடியோக்கள் கண்டறியப்பட்டால், அதன் ரீச் அப்படியே குறைக்கப்படும். இதுமட்டுமல்லாமல், டூப்லிகெட் வீடியோக்களில் ஒரிஜினல் கிரியேட்டரின் லிங்குகளை சேர்க்கவும் மெட்டா நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. இந்த லிங்குகள் சேர்ப்பு விரைவில் அமல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்போது என்னதான் செய்வது?

இனிமேல் என்ன செய்ய வேண்டும்?
பேஸ்புக்கில் ஒரிஜினல் கன்டென்ட்களை மட்டுமே போஸ்ட் செய்ய வேண்டும். அப்படியான அக்கவுண்ட்களுக்கு மட்டுமே அதிக மானிடைசேஷன் சலுகைகள் கொடுக்கப்பட இருக்கிறது. மற்றவர்களின் கன்டென்ட்களை பயன்படுத்த வேண்டுமானால், அதை அப்படியே ஷேர் செய்து கொள்ளலாம். எடுத்து தனியாக போஸ்ட் செய்ய கூடாது.

ஒரு வீடியோவில் வாய்ஸ் ஓவர், கமெண்டரி அல்லது புதிய சோர்ஸ்கள் போன்றவற்றை ஆட் செய்து பயன்படுத்த முடியும். அதுவே ஒரே வீடியோவின் பல கிளிப்களை ஒன்றாக சேர்த்து புது வீடியோவை உருவாக்கி பயன்படுத்த கூடாது. இப்படி பல்வேறு புதிய விதிமுறைகளை மெட்டா நிறுவனம் கொண்டுவந்து இருக்கிறது. ஆகவே, ஒரிஜினல் கன்டென்ட் முக்கியம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meta Introducing Stronger Measures To Reduce Unoriginal Content on Facebook
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X