இன்ஸ்டாவில் டீன் ஏஜ்களுக்கு செக்.. நைட்-டைம் ரீல்ஸ், மேசேஜ் கட்டுப்பாடு.. மெட்டாவின் புது ரூல்ஸ்!
நள்ளிரவின்போது பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆப்களில் ரீல்ஸ் மற்றும் மெசேஜ்களில் மூழ்கி கிடக்கும் டீன் ஏஜ்களை (Teen Age) கட்டுப்படுத்தும் விதமாக மெட்டா (Meta) நிறுவனம், நைட் டைம் நட்ஜ் (Night time Nudge) என்னும் பீச்சரை அறிமுகம் செய்துள்ளது.
தூங்கி எழுந்து போனை எடுத்தால் போதும், நம்மில் பலருக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்களை திறக்கவே கைகள் சென்று விடுகின்றன. அதிலும், டீன் ஏஜ் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத பொழுதுப்போக்காக அவை மாறிவிட்டன.

என்னதான், பொழுதுப்போக்காக இருந்தாலும் ஒரு லிமிட் வேண்டாமா? என்று பெற்றோர்கள் கேட்கும் அளவுக்கு அவற்றின் பயன்பாடு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக, இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளை முற்றிலும் குறை சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால், கடந்த காலங்களை போலல்லாமல், எளிதாக எட்டும் இடத்தில் அந்த ஆப்கள் இருக்கின்றன.
ஆகவே, அவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டு செல்ல முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சூழலில் அவர்கள் அதிலேயே மூழ்கிவிடமால் இருப்பதை மட்டுமே பெற்றோர்கள் பார்த்துகொண்டால் போதும். இதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்களின் தாய் நிறுவனமான மெட்டாவே பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், நைட் டைம் நட்ஜ் என்னும் புதிய பீச்சரை அறிமுகம் செய்துள்ளது. இந்த பீச்சரை பற்றி தெரிந்து கொண்டால், இந்திய பெற்றோர்களுக்கும் அதற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல கூட டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தோன்ற வாய்ப்புள்ளது. அதாவது, நள்ளிரவில் தங்களின் பிள்ளைகள் தூங்கிவிட்டதா?
அல்லது ஸ்மார்ட்போனை நோண்டிக்கொண்டிருக்கிறதா? என்று 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வந்து பார்க்கும் பழக்கம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது. சரியான நேரத்தில் தூங்க வேண்டும், உடன் நலத்தில் கவனம் வேண்டும் என்பதே அதற்கு காரணமாகவும் இருக்கிறது. இதைத்தான், இந்த நைட் டைம் நட்ஜ் பீச்சர் செய்யப்போகிறது.
இந்த பீச்சரானது, நள்ளிரவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்களில் ரீல்ஸ் மற்றும் மேசேஜ்களை பார்க்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை லாக் ஆஃப் (Log Off) செய்யுமாறு ரீமைண்ட் செய்யும். இந்த ரீமைண்ட் லாக் ஆஃப் செய்யும் வரையில் வந்துகொண்டே இருக்கும்.
இதுமட்டுமல்ல, மெசென்ஜருக்கும் பேரன்டல் சூப்பர்விஷன் (Parental Supervision) என்னும் டூல் (Tool) இருக்கிறது. இந்த டூல் மூலம், பெற்றோர்கள் தங்களது டீன் ஏஜ் பிள்ளைகளின் மெசென்ஜர் ஆக்டிவிட்டியை (Messenger Activity) தெரிந்து கொள்ளலாம். அவர்கள் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறார்கள் என்பதை கண்காணிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், யாரிடம் இருந்து மெசேஜ் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு யார் அனுப்பும் மெசேஜ்கள் உங்களது பிள்ளைகளுக்கு வர வேண்டும், வர கூடாது என்பதையும் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். அதேபோல யாருடன் அதிகப்படியாக மெசேஜ் பகிரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், பிள்ளைகளின் மெசென்ஜர் ஸ்டோரிக்களை (Messenger Stories) யார் பார்க்க வேண்டும், பார்க்க கூடாது என்பதையும் பெற்றோர் தீர்மானித்து கொள்ளலாம். இப்படி பல்வேறு கன்ட்ரோல்களை இந்த பேரன்டல் சூப்பர்விஷன் டூல் வழங்குகிறது. இவை அனைத்தும் 18 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மட்டுமே.
இந்த வயதை உறுதி செய்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தும் யூசர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். மெட்டா நிறுவனம், இதுபோன்ற பல்வேறு பீச்சர்களை கொண்டுவர இருக்கிறது. குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் வகையில் தங்களது கொள்கைகளை மாற்றி வருகிறது. இதுபோன்ற செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








