Home
News

பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பு: பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை.! என்ன தெரியுமா?

பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் பேஸ்புக் ரீல்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பாக இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ்

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை ஆனது இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் இந்த பேஸ்புக் ரீல்ஸ் சேவை அறிமுகம்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

னர் மார்க் ஜுக்கர்பெர்க் இதுகுறித்து

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இதுகுறித்து கூறுகையில், ரீல்ஸ் வகை வீடியோக்கள் இன்று உலகம் முழுவதும் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதைதொடர்நது தான் ரீலஸ் சேவை பேஸ்புக்கிலும் கிடைக்கும் என்று கூறினார்.

முக்கியமான விஷயம்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மெட்டா நிறுவனம் ரீல்ஸ் வீடியோவை உருவாக்கும் பயனர்களுக்கு தகுந்தபடி புதியஎடிட்டிங் சேவையும் வழங்குகிறது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

 ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்க

குறிப்பாக ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராப்ட் அம்சத்தின் மூலம் ரீல்

அதேபோல் டிராப்ட் அம்சத்தின் மூலம் ரீல் வீடியோக்களை பயனர்கள் சேகரித்து வைக்கலாம். பின்பு வீடியோ கிளிப்பிங் அம்சத்தில் நீளமான வீடியோக்களை உருவாக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேஸ்புக் தளத்தில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், நியூஸ் ஃபீட், வாட்ச் போன்ற இடங்களில் இந்த ரீல்ஸ் சேவை காண கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதில் மிக முக்கியமான அம்சம்

குறிப்பாக இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பேஸ்புக் ரீல் வீடியோவை உருவாக்கும் பயனர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. எனவே இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் வருமானமும் பெறமுடியும். அதேபோல் ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

 கூறவேண்டும் ரீல்ஸ்

சுருக்கமாக கூறவேண்டும் ரீல்ஸ் சேவையை பேஸபுக் அறிமுகம் செய்தவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என கூறப்படுகிறது. குறிப்பாக பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக டிக்டாக் நிறுவனம் பல அருமையான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பின்பு டிக்டாக் தளத்தில் தினசரி அதிக பயனர்கள் இணைந்து வருகின்றனர். எனவே பேஸ்புக் தளத்தில் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சேவை மூலம் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என மெட்டா நிறுவனம் நம்புகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Meta Introduces Facebook Reels to All Users: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X