Home
News

அடுத்த ஆப்பு.. இனி காசு கொடுத்தால் தான் வெரிஃபைட் பேட்ஜ்: ஷாக் ஆன இன்ஸ்டாகிராம் பயனர்கள்!

எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் புளூ சந்தா முறையை அறிவித்தார். இந்நிலையில் எலான் மஸ்க் வழியைப் பின்பற்றி மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க் பயணிப்பதாகத் தெரிகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெரிஃபைட் பேட்ஜ் (Verified Badge) வழங்குவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மார்க் ஜூக்கர்பர்க் கூறியுள்ளார்.

மெட்டா நிறுவனம்

குறிப்பாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் இந்த மெட்டா. தற்போது இந்த மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக இதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பிரபலங்களுக்கு வெரிஃபைட் பேட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆப்பு..  இனி காசு கொடுத்தால் தான் வெரிஃபைட் பேட்ஜ்.!

இந்த நிலையில் தான் இந்த வெரிஃபைட் பேட்ஜ்களை வழங்க இனிமேல் கட்டணம் வசூலிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது இந்த திட்டத்தை தற்போது சோதனை அடிப்படையில் தொடங்குவதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு கட்டணம்

அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களுக்கு மாதம் webக்கு 11.99 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.990) கட்டணமும், மொபைல் போனுக்கு மாதம் 14.99 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1240) கட்டணமும் வசூலிக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வெரிஃபைட் பேட்ஜ் பெறுவோருக்கு சில கூடுதல் சலுகைகள் மற்றும் பல புதிய வசதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆப்பு..  இனி காசு கொடுத்தால் தான் வெரிஃபைட் பேட்ஜ்.!

குறிப்பாக மெட்டா வெரிஃபைடு பேட்ஜ் கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த கட்டண முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்துள்ள இந்த கட்டண முறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் கடந்த ஆண்டு எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கினார். அதன்பின்பு ட்விட்டரில் ப்ளூ டிக் (Twitter Blue Tick) பெறுவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆப்பு..  இனி காசு கொடுத்தால் தான் வெரிஃபைட் பேட்ஜ்.!

தற்போது எலான் மஸ்க் வழியை அப்படியே மார்க் ஜூக்கர்பர்க் கடைப்பிடித்து வருகிறார். இதனால் மெட்டா நிறுவனம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகைகளைக் கண்டறிந்து வருகிறது என்பது தான் உண்மை.

அடுத்த ஆப்பு..  இனி காசு கொடுத்தால் தான் வெரிஃபைட் பேட்ஜ்.!

நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் எலான் மஸ்க்

மேலும் எலான் மஸ்க் சமீபகாலமாகப் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். டெஸ்லா பங்கு வீழ்ச்சி, சொத்து மதிப்பு வீழ்ச்சி, ட்வீட்டரை வாங்கிய பின் அவருக்குச் சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பிற நிறுவனங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் என பல நெருக்கடிகளை எலான் மஸ்க் சந்தித்து வருகிறார்.

இதைச் சரி செய்வதற்கு என ப்ளூ சந்தா சேவை, செலவுகளைக் குறைக்க ஊழியர்கள் பணி நீக்கம் என தொடர்ந்து மறுபுறம் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அதேபோல் ட்விட்டர் தளத்தில் பல்வேறு அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Meta Company Announces Paid Blue Verification tick on Facebook and Instagram: Full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X