எழுந்தா பேஸ்புக்.. அப்புறத்தான் எல்லாம்.. இப்படிப்பட்ட யூசர்களை விட்டுக்கொடுக்காத பேஸ்புக் ஓனர்!
தூங்கி எழுந்தவுடன் கையில் போனை எடுத்தால் போதும், பலருக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆப்களை திறப்பதென்பது வழக்கமாக மாறிவிட்டது. காபி, டீ, பேப்பர் படிப்பது போன்றவற்றுக்கு அடுத்தப்படியாக இந்த ஆப்களும் லிஸ்டில் சேர்ந்துவிட்டன. இப்படிப்பட்ட காலை நேரமானது, பேஸ்புக் ஓனருக்கு எப்படி இருக்கும்?
பேஸ்புக் (Facebook) ஆப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. பேங்க் அக்கவுண்ட் இல்லாவர்களை கூட பார்க்க முடியும். ஆனால், பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களை பார்ப்பது குதிரை கொம்பாக இருக்கலாம். இப்படிப்பட்ட பேஸ்புக்கை கட்டியெழுப்பிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்.

இவரது ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தாலே மூக்கில் விரல் வைத்து விடுவோம். வழக்கமான விடுமுறையை கழிக்கவே, ஹவாயில் 1400 ஏக்கர் தீவை வாங்கி அதில் 5000 சதுர அடியில் அண்டர் கிரவுண்ட் பங்கர் கட்டி வைத்திருக்கிறார் என்றால் யோசித்து கொள்ளுங்கள். இதனாலேயே அவரை பற்றிய செய்திகள் உலகளவில் டிரெண்ட் செய்யப்படுகின்றன.
இப்போது, அவரது காலை பழக்கங்கள் (Morning Habits) டிரெண்டாகி வருகிறது. ஏனென்றால், தூங்கி எழுந்து பேஸ்புக் பார்க்கும் யூசர்களுக்கு இந்த பழக்கங்களில் ஒன்று குஷியை தந்துள்ளது. பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், விவாதங்கள், மீம்ஸ், நியூஸ் அப்டேட்கள் போன்ற பலதரப்பட்டக்காக பேஸ்புக் புகழ் பெற்றுள்ளது.
இதனால், அதனை தவிர்த்துவிட்டு காலை பொழுதை கடப்பது பலருக்கும் சற்று சிரமமான காரியமாகவே இருக்கும். இதையேத்தான் பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்க்கும் வெளிப்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கான ஃபாலோயர்களை மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வைத்திருக்கிறார். அவ்வப்போது, லைவ்வில் உரையாடுவது அவரது வழக்கமாக இருக்கிறது.

சமீபத்திய லைவ்வின் போது, காலை 8 மணிக்கு எழுத பின்பு என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். முதலில் அவரது ஸ்மார்ட்போனை எடுத்து, அதில் பேஸ்புக், மெசென்ஜர் (Messenger), வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்கள் மூலம் உலக நிகழ்வுகளை தெரிந்துகொள்வேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால், அவரது ஃபாலோயர்களும் பேஸ்புக் யூசர்களும் குஷியாகிவிட்டனர்.
இதை தவிர மார்க் ஜுக்கர்பெர்க் பல்வேறு காலை பழக்கங்களை வைத்திருக்கிறார். இதை பல முறை தெரிவித்தும் இருக்கிறார். பிரபல அமெரிக்க பாடகியும், பாடலாசிரியருமான டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) பாடல்களை தனது மூன்று மகள்களுடன் சேர்ந்து கேட்பது அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. அதேபோல கலப்பு தற்காப்பு கலைகள் (Mixed Martial Arts) பயற்சி செய்வதும் அவரது காலை பட்டியலில் இருக்கிறது.
அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். இது அவரது தினசரி கலோரிகளை சமநிலையில் வைத்திருக்க செய்து வருகிறார். இப்படி மார்க் ஜுக்கர்பெர்க்கின் முதன்மையான காலை பழக்கங்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்கின்றன. இந்த பழக்கங்கள் அவரது கோடிக்கணக்கான ஃபாலோயர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏனென்றால், உடல்நிலையில் கவனம், குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குதல், உலக நடப்புகளை தெரிந்து கொள்வது போன்றவை பொதுவான மற்றும் தேவைப்படும் பழக்கங்களாகும். இதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் செய்வது, கவனம் பெறுவது மட்டுமல்லாமல், விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications