"அடிச்சிப்பாப்போமா" எலான் மஸ்க்.. "லொகேஷன் அனுப்பு" மார்க் ஜூக்கர்பெர்க்.. வெடித்தது கோடீஸ்வர சண்டை!
"வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்டது போல" என்று ஒரு பழமொழி உண்டு, அதுபோல எலான் மஸ்க் (Elon Musk) போட்ட ஒரு ட்வீட் காரணமாக மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் ( Mark Zuckerberg) உடன் கேஜ் மேட்ச் (Cage Match) போடும் லெவலுக்கு சர்ச்சை வெடித்துள்ளது.
பொதுவாகவே, மிகப்பெரும் டெக் நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் பனிப்போர் நடந்துவரும். இருப்பினும், அது வெளியே தெரியாதபடி அந்தந்த நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். ஆனால், எலான் மஸ்க், அதைப்பற்றி துளியும் கவலைப்படுவது கிடையாது. யார் பற்றி வேண்டுமானாலும், எந்த நிறுவனத்தை பற்றி வேண்டுமானாலும், பொதுவெளியில் விமர்சனம் செய்துவிடுவார்.

அப்படி, மிகப்பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் பற்றி விமர்சனம் செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனம், இவரது கைக்கு வரும் முன், அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இப்படி பல சம்பவங்கள், அவரது ஒரேவொரு ட்வீட்டால் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த வரிசையில், மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் குறித்து, அவர் பதிவிட்ட ட்வீட், இப்போது அவர்களிடையே மிகப்பெரும் மோதலுக்கு வித்திட்டுள்ளது.
இருவருக்கும் இடையே கேஜ் மேட்ச் (கூண்டு சட்டை) நடத்த இடமும் நேரமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எலான் மஸ்க், கேஜ் மேட்ச்சுக்கு ரெடியா என்று கேட்க, லொகேஷன் அனுப்பு என்று மார்க் ஜூக்கர்பெர்க் சொல்ல, சமூக வலைதளங்களில் இவர்களின் பணக்கார சண்டையே மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த சண்டை எப்படி வெடித்தது என்பது குறித்து இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டும்.
சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மெட்டா நிறுவனம் ட்விட்டர் போலவே ஒரு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இதனிடையே, ட்விட்டர் யூசர்களின் நிலைமை குறித்து, மார்க் ஸூகர்பெர்க் கருத்து தெரிவித்திருந்தார். இதை கிண்டல் செய்யும் விதமாக எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் "வேறு வழியின்றி எடுக்கும் முடிவுகளுக்கு உலகம் காத்திருக்காது.
இதுவாவது, புத்திசாலிதனமான முடிவாக இருக்குமா? என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ட்விட்டரில் இருக்கும் மார்க் ஸூகர்பெர்க் ஆதரவாளர்கள், "அவருக்கு ஜுஜுட்சு (Jujutsu) தற்காப்பு கலை தெரியும், ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்" என்று எலான் மஸ்கிடம் வாதம் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "மார்க் உடன் கேஜ் மேட்ச் நடத்த தயாராக உள்ளேன்" என சவால் விட்டுள்ளார்.
இதையறிந்த மார்க் ஜூக்கர்பெர்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லேகேஷனை அனுப்பு (Send Me Location) என்று பதிவிட்டுள்ளார். இதற்கு இப்போது, எலான் மஸ்க், அமெரிக்காவில் உள்ள வேகாஸ் அக்டகான் (Vegas Octagon) என்னும் இடத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் பூதாகரமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே 51 வயதான எலான் மஸ்க், 39 வயதான மார்க் ஸூகர்பெர்க் இருவரும் போட்டி போட்டால் எப்படி இருக்கும் என்று மீம்ஸ்களை உருவாக்கி பலர் பதிவிட தொடங்கிவிட்டனர். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications