பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா.. இதுல எது இருந்தாலும்.. இனிமே ஸ்கேம்ல மாட்ட மாட்டீங்க.. ஆன்டி-ஸ்கேம் டூல்கள்!
பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் மெசன்ஜர் (Messenger) ஆகிய ஆப்களில் ஆன்டி-ஸ்கேம் டூல்களை (Anti-scam Tools) மெட்டா நிறுவனம் சேர்த்துள்ளது. வார்னிங் கொடுப்பது முதல் ஸ்கேமை டிடெக்ட் செய்வது வரையில் பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன. ஏற்கனவே, இருக்கும் பாஸ்வேர்ட், பாஸ்கீகள், பின் நம்பர் ஆதன்டிகேஷன் போன்ற சேப்டி பீச்சர்கள் என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த ஆப்களை வைத்திருக்கும் யூசர்கள் மெட்டாவின் இந்த ஆன்டி-ஸ்கேம் டூல்களை பற்றி கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சோஷியல் மீடியா ஆப்களில் தவிர்க்க முடியாத ஆப்களாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மாறிவிட்டன. கோடிக்கணக்கான யூசர்கள் அதில் நாள்தோறும் தங்களது நேரத்தை செலவிடுவதால், அதில் ஸ்கேம்களும் நடக்கின்றன. இதை தடுக்க அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) பல்வேறு சேப்டி பீச்சர்களை தொடர்ந்து அப்கிரேட் செய்கிறது.

* வாட்ஸ்அப் வார்னிங்ஸ் (WhatsApp Warnings)
* மெசன்ஜர் ஸ்கேம் டிடெக்சன் (Messenger Scam Detection)
* பாஸ்கீகள் (Passkeys)
* செக்யூரிட்டி & பிரைவசி செக்கப் (Security & Privacy Checkup)
வாட்ஸ்அப் வார்னிங்ஸ்:
வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால்களின் சேவை கொடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கஸ்டமர் சேவையை கொடுப்பது போல வாட்ஸ்அப் யூசர்களுக்கு கால்கள் வருகின்றன. அப்படி வரும்போது, உங்களது ஸ்கிரீனை ஷேர் செய்ய முயற்சி செய்து, பேங்க் விவரங்கள், வெரிபிகேஷன் கோட்கள் போன்றவற்றை அனுமதி இல்லாமல் பெற்று கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
இதை தடுப்பதற்காக வாட்ஸ்அப் வார்னிங்ஸ் பீச்சர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பீச்சர் மூலம் தெரிய நபர்கள் உங்களுக்கு வீடியோ கால் செய்து, உங்களது ஸ்க்ரீனை ஷேர் செய்ய முயற்சித்தால், உடனே உங்களுக்கு வார்னிங் கொடுக்கப்படும். இதை பார்த்த உடனேயே உங்களால் ஏதோ தவறு நடப்பதை யூகிக்க முடியும். அதேபோல ஸ்கிரீன் ஷேர் தவிர்த்து கொள்ளலாம்.

மெசன்ஜர் ஸ்கேம் டிடெக்சன்:
உங்களது கான்டாக்ட்டில் இல்லாத நபர்கள் உங்களுக்கு மேசேஜ் அனுப்பும்போது, அது ஸ்கேம் மேசேஜா அல்லது நர்மலாக யாரோ அனுப்பிய மேசேஜா என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால், இந்த ஸ்கேம் டிடெக்சன் டூல் மூலம் ஏஐ ஸ்கேம் ரிவ்யூ (AI Scam Review) செய்யப்படுகிறது. இதில் உங்களுக்கு மேசேஜ் அனுப்பி அக்கவுண்ட் ரிவ்யூ செய்யப்படும்.
அந்த அக்கவுண்ட் விவரங்கள் முழுவதும் ரிவ்யூ செய்யப்பட்ட பிறகு அது சந்தேகத்திற்கிடமாக இருந்தால் உங்களுக்கு ஸ்கேம் டிடெக்டெட் (Scam Detected) என்று வார்னிங் கொடுக்கப்படும். அதோடு அந்த அக்கவுண்ட் குறித்து புகார் அளிக்கவும் ஆப்ஷன்கள் இடம்பெறும். இதன் மூலம் நீங்களும் ஸ்கேமில் இருந்து தப்பிக்கலாம். அதேபோல அந்த அக்கவுண்ட்டை சுட்டிக்காட்டலாம்.

பாஸ்கீகள்
ஜிமெயில், பேங்கிங் போன்ற ஆப்களில் பாஸ்கீகள் கிடைக்கின்றன. அதேபோல பேஸ்புக், மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பாஸ்கீகள் கொண்டுவரப்படுகிறது. இதை ஃபிங்கர்பிரிண்ட், பேஸ் மற்றும் பின் நம்பர் போன்று வழக்கமாக பயன்படுத்தும் செக்யூரிட்டி பீச்சர்களை வைத்து செட் செய்து கொள்ளலாம். ஆகவே, கூடுதல் செக்யூரிட்டி கொடுக்கப்படும்.
செக்யூரிட்டி & பிரைவசி செக்கப்
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய ஆப்களில் செக்யூரிட்டி செக்கப் செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களது செக்யூரிட்டி செட்டிங்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்கள் உள்ளிட்டவை செக் செய்யப்படும். அதில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டுமானால், உங்களுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல வாட்ஸ்அப் மூலம் பிரைவசி செக்கப் செய்து கொள்ளலாம்.

இதில் உங்களது நம்பரை யாரெல்லாம் அணுக முடியும். அந்த நம்பரை வைத்து யாரெல்லாம் குரூப் ஓப்பன் செய்ய முடியும் போன்றவற்றை நீங்களே முடிவு செய்யலாம். இது கிட்டத்தட்ட உங்களது அனுமதி பெற்ற பிறகே உங்களது நம்பர் மற்றும் அக்கவுண்ட்டை அணுக முடிவதை உறுதி செய்கிறது. இந்த பீச்சர்கள் அடுத்தடுத்த அப்டேட்டில் யூசர்களுக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








