Subscribe to Gizbot

பிரமிக்க வைக்கும் மெசஜிங் வரலாறு: இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

By: Meganathan S

டெலிபோன் மற்றும் கம்ப்யூட்டர் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? அந்த காலத்துல வாழ்ந்தவங்க தூரத்தல இருந்தவங்க கிட்ட எப்படி பேசினாங்க? கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன்கள் இல்லாத காலத்தை நினைத்து பாக்கவே முடியல, ஆனாலும் உலகத்தோட இன்னொரு பகுதியில் வாழ்ந்தவங்க கிட்ட பேசிட்டு தான் இருந்தாங்க.

பிரமிக்க வைக்கும் மெசஜிங் வரலாறு: இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

ஆனாலும் இன்னைக்கு நாம பயன்படுத்தும் தகவல் பிரமாற்ற முறை மட்டும் தான் மாறியிருக்கு. அந்த காலத்துல வாழ்ந்தவங்க அப்போதிருந்த பொருட்கள், பறவைகள் மற்றும் பல்வேறு வழிமுறைகளை கொண்டு உலகின் மற்றொரு மூலையில் இருந்தவங்க கிட்ட பேசினாங்க. தொழில்நுட்பம் வளர்ச்சியடை மக்கள் தற்சமயம் கிடைக்குற பொருட்களை பயன்படுத்த துவங்கிட்டாங்க.

மெசேஜிங் துறையின் துவக்கத்திற்கு சென்று இந்த துறையின் பல்வேறு சுவாரஸ்ய மற்றும் வரலாற்று முறைகளில் நம்மவங்க எப்படி தகவல் பரிமாற்றம் செய்தாங்கனு பார்ப்போம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தொழில்நுட்பத்திற்கு முந்தைய காலம்

தொழில்நுட்பத்திற்கு முந்தைய காலம்

புகையை கொண்டு அந்த காலத்துல தகவல் பரிமாற்றம் செஞ்சாங்க. விஷுவல் முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய புகையை பயன்படுத்தினாங்க.

எதிரி தாக்குதல் போன்றவற்றிற்கு எச்சரிக்கை செய்ய மக்கள் புகையை பயன்படுத்தினாங்க. அப்புறம் மக்கள் புறாக்களை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ய ஆரம்பிச்சாங்க.

சிறிய காகிதத்துல தகவல் எழுதி அதை புறாவின் காலில் கட்டினா அது நேரடியா தகவல் அனுப்ப வேண்டியவங்க கிட்ட கொண்டு போய் கொடுத்திட்டு திரும்ப வரும். 16-ம் நூற்றாண்டில் ராணுவ படைகளில் தகவல் பரிமாற்றம் செய்ய பாட்டில்களை பயன்படுத்தினாங்க.

காகித்துல தகவல் எழுதி அதை கடலில் தூக்கி வீசுவாங்க. இதே போல நம்மவர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய பல்வேறு யுக்திகளை கையாண்டிருக்காங்க..

டெலிகிராம் மற்றும் டெலிபோன்களின் வரவு

டெலிகிராம் மற்றும் டெலிபோன்களின் வரவு

இந்த இரு தொழில்நுட்பங்களும் வரும் முன்னரே மக்கள் போனி எக்ஸ்பிரஸ் மற்றும் பலூன் மெயில்களை கொண்டு தகவல் அனுப்பினாங்க. போனி எக்ஸ்பிரஸ் மூலம் தகவல் அனுப்ப பத்து நாள் ஆனால் பலூன் மெயில் மூலம் அருகாமையில் இருக்கும் சமூகத்திற்கு மட்டும் தகவல் அனுப்பினாங்க.

தொழில்நுட்பம் மெல்ல வளரும்போது எல்லோருக்கும் அப்போதைய வளர்ச்சியுடன் இணைந்திருக்க விரும்பினாங்க, அப்படியே மக்கள் டெலிகிராம் மற்றும் டெலிபோன்களை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இந்த வேகம் நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

ஃபேக்ஸ் மெஷின் மற்றும் பேஜர்கள்

ஃபேக்ஸ் மெஷின் மற்றும் பேஜர்கள்

1880களில் மக்கள் ஃபேக்ஸ் மெஷின் மூலம் டிஜிட்டல் வடிவம் கொண்ட தரவுகளை போன் லைன் மூலமாக அனுப்பினாங்க. இதற்கு ஒரே நிமிடம் தான் ஆனது. இந்த வசதி கொரியர் மெயில் மற்றும் டெலிகிராம்களை முற்றிலும் மாற்றிடுச்சி.

பின்னாளில் பேஜர் அறிமுகமானது, பீப்பர் என்றும் இது அழைக்கப்பட்டது. வடிவத்துல சின்னதாய் இருந்த பேஜரை மக்கள் தங்களது இடுப்பு பகுதியில் அணிந்து கொண்டார்கள். யாரேனும் தகவல் அனுப்பினால் பேஜர் பீப் சத்தம் கொடுக்கும்.

எஸ்எம்எஸ் மற்றும் செல்போன்கள்

எஸ்எம்எஸ் மற்றும் செல்போன்கள்

உலகின் முதல் டெக்ஸ்ட் மெசேஜ் டிசம்பர் 3, 1992-ம் ஆண்டு அனுப்பப்பட்டது. செமா க்ரூப் டெலிகாம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் டெவலப்பரான நெயில் பேப்வொர்த் இதனை அனுப்பினார்.

கீபோர்டு வசதி கொண்ட செல்போன்கள் அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்படாததால் பேப்வொர்த் கம்ப்யூட்டர் உதவியோடு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை டைப் செய்து தனது நண்பரான ரிச்சார்ட் ஜார்விஸ் என்பவருக்கு அனுப்பினார். பின் 1993 ஆம் ஆண்டு நோக்கியா முதல் மொபைல் போனினை தயாரித்தது. இதில் எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்பட்டது.

நோக்கியா பின்பு முதல் செல்போனினையும் அறிமுகம் செய்தது. நோக்கியா 9000i கம்யூனிகேட்டர் என அழைக்கப்பட்ட செல்போன் முழுமையான கீப்ரோடு வசதி கொண்டு 1997-இல் விற்பனைக்கு வந்தது.

ஐம் மற்றும் டெக்ஸ்டிங்

ஐம் மற்றும் டெக்ஸ்டிங்

இண்டர்நெட் வளர்ச்சி உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் மக்கள் அதில் அடிமையாக ஆரம்பிச்சாங்க. அப்போ மக்கள் இண்ஸ்டண்ட் மெசேஜிங் செய்ய ஆரம்பிச்சாங்க, இவை நண்பர்களுக்கு உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்தது.

முதல் தனித்துவம் வாய்ந்த இண்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற பெருமையை ICQ பெற்றிருந்தாலும், இதில் AOL அதிக பிரபலமாக ஆரம்பிச்சது. 1997-களில் AIM புகழின் உச்சியில் இருந்தது.

இண்ஸ்டண்ட் மெசேஜிங் உடன் மக்கள் மொபைல் ஆப்ஸ் கொண்டு டெக்ஸ்ட் செய்ய ஆரம்பிச்சாங்க. மக்கள் போனில் அதிக நேரம் பேசாமல் டெக்ஸ்ட் செய்ய அதிக நேரம் செலவிட்டார்கள். மேலும் எஸ்எம்எஸ் செயலிகள் இலவசமாய் கிடைக்க ஆரம்பிச்சதும் எல்லோரும் ஸ்மார்ட்போன்களின் டச் ஸ்கிரீன்களில் எந்நேரமும் இதையே செய்திட்டு இருக்காங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
From smokes to pigeons, from SMS to IM's, people have strongly adopted themselves to the changes in the current trend.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot