Just In
- 27 min ago
பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு?
- 1 hr ago
ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
- 16 hrs ago
மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
Don't Miss
- News
அனல் பறக்கும் களம்.. "யாவாரம்" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்!
- Automobiles
எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…
- Finance
கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..!
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்ச் 31 முதல் சில ஆண்ட்ராய்டு போன்களில் Messages App வேலை செய்யாது.! காரணம் என்ன?
கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அதிகமான பயனர்கள் ஒவ்வொரு நாளும் கூகுள் நிறுவனத்தின் ஒரு பயன்பாட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் -அது கூகுள் நிறுவனத்தின் பிரபலமான ஆப்களில் ஒன்றான கூகுள் மெசேஜஸ் (Google Messages) ஆகும்.

இது அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான ஆப் ஆகும். மேலும் இது பல போன்களில் டீபால்ட் (இயல்புநிலை) எஸ்எம்எஸ் மற்றும் ஆர்சிஎஸ் கிளையண்டாக ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான பயனர்கள் கூகுள் மெசேஜஸ் ஆப் வழங்கும் செயல்பாடுகளில் திருப்தி அடைவதால், மாற்று வழிகளை (மாற்று ஆப்களை)
தேட வேண்டி சூழ்நிலை உருவாகவில்லை என்று தான் கூறவேண்டும்.
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!

இருந்தபோதிலும் இனி வரவிருக்கும் நாட்களில் பயனர்கள் கூகுள் மெசேஜஸ் ஆப்பிற்கான மாற்றத்தை தேட வேண்டியிருக்கலாம். ஏனெனில் கூகுள் மெசேஜஸ் ஆப்பில் உள்ள புதிய ஸ்ட்ரிங்ஸ் (strings) ஆனது, வருகிற ஏப்ரல் 2021-இல் கூகுள் மெசேஜஸ் ஆப் ஆனது "உறுதிப்படுத்தப்படாத" ஆண்ட்ராய்டு போன்களில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி கூகுள் மெசேஜஸ் 7.2.203-இல் காணப்பட்ட புதிய strings ஆனது மிகவும் தெளிவாக மார்ச் 31, 2021 முதல் உறுதிப்படுத்தப்படாத Android சாதனங்களில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று கூறுகிறது.

மேலும் இங்கே உறுதிப்படுத்தப்படாத ஆண்ட்ராய்டு சாதனங்கள் என்று கூறப்படுவது ஆண்ட்ராய்டு-ல் இயங்கும் ஆனால் கூகுள் மொபைல் சேவைகளுக்கான (GMS) Google-இன் அதிகாரப்பூர்வ சான்றிதழ் செயல்முறையைத் தவிர்த்த அல்லது தோல்வியுற்ற போன்கள் ஆகும்.

இருந்தபோதிலும் உறுதிப்படுத்தப்படாத ஆண்ட்ராய்டு சாதனங்களை உருவாக்கும் விற்பனையாளர்கள், அந்தந்த சாதனங்களில் கட்டயாமான கூகுள் ஆப்களை கொண்டிருக்கவில்லை என்றாலும் கூட, கூகுள் ஆப்ஸ் மற்றும் சேவை கட்டமைப்பை எவ்வாறு இன்ஸ்டால் செய்யலாம் என்ற வழிகளை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வரையில் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும் கூட ஒருவர் கூகுள் மெசேஜஸ் ஆப்பை மிகவும் எளிதாக இன்ஸ்டால் செய்யமுடியும். பின்பு இதற்கு கூகுள் சைன்-இன்களுக்கும் வேலை இருக்காது. ஆனால் இந்த செயல்முறை விரைவில் மாறப்போகிறது.

அதாவது உங்களிடம் உறுதிப்படுத்தப்படாத ஆண்ட்ராய்டு சாதனம் இருந்தால் குறிப்பிட்ட ஆப் இயங்காமல் போகலாம். ஏனெனில் உறுதிப்படுத்தப்படாத சாதனம் கூகுள் மொபைல் சேவைகளை சமரசம் செய்யவிட்டால் கூகுளால் அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது. அதன் வழியாக, குறிப்பிட்ட சாதனங்களின் வழியாக நடக்கும் உரையாடல் எந்த வகையிலும் திருடப்படாது.

அதேபோல் GMS (கூகுள் மொபைல் சர்வீஸ்) உடன் ஆக்டிவ் ஆக உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களை கொண்ட பயனர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரை இது மிகவும் சிறிய வேலையே ஆகும். மேலும் இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190