மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?

|

தினம் ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனில் பேசும் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் குறைவதற்க்கான வாய்ப்பு மிக அதிகம் என்று கூறியது மட்டுமின்றி மேலும் பல மொபைல் போன் பயன்பாடு மற்றும் விந்தணுக்கள் சார்ந்த பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று..!

ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் :

ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் :

தங்களின் மொபைல் போன்களை பெரும்பாலும் பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு இருக்கும் அல்லது மற்றும் தினம் ஒரு மணி நேரம் மொபைலில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது பிறருடன் ஒப்பிடும் போது, தினம் ஒரு மணி நேரம் மொபைலில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

விந்தணுக்களின் தரம் :

விந்தணுக்களின் தரம் :

மேலும் போனை சார்ஜ் செய்து கொண்டே பேசினாலும் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படும், அதனால் விந்தணுக்களின் தரம் கோரியும் என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெகடிவ் இம்பாக்ட் :

நெகடிவ் இம்பாக்ட் :

உறங்கும்போது மொபைல் போனை அருகாமையிலேயே அல்லது கட்டிலின் அருகே உள்ள மேசை மீதோ வைத்திருந்தால் கூட, அதனுள் இருந்து வெளிப்படும் 'நெகடிவ் இம்பாக்ட்' (Negative Impact) மூலம் விந்தணுக்கள் சார்ந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறர்கள் ஆய்வாளர்கள்.

குழந்தை கருவுறும் சிரமம் :

குழந்தை கருவுறும் சிரமம் :

மேற்கத்திய நாடுகளில் படிப்படியாக குழந்தை கருவுறும் சிரமம் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு 40 சதவீதம் காரணியாக மொபைல்போன் பயன்பாடு தான் என்று கருதப்படுகிறது.

விந்தணு மரணம் :

விந்தணு மரணம் :

மொபைல்போன்களில் இருந்து வெளிவரும் வெப்பம் மற்றும் மின்காந்த நடவடிக்கைகள் ஆனது ஆண்களின் விந்தணுக்களை மெல்ல மெல்ல பாதித்து அவைகளை முற்றலுமாக இறந்து போக வைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

20 இன்ச் அருகாமை :

20 இன்ச் அருகாமை :

47% ஆண்கள் மொபைல்போன்களை தங்களின் இடுப்பு பகுதிக்கு 20 இன்ச் அருகாமையில் வைத்திருப்பதாலேயே விந்தணுக்கள் மோசமாக பாதிக்கப்படுகிறதாம்.

உயிரி மருத்துவ துறை :

உயிரி மருத்துவ துறை :

ஆண் இனப்பெருக்க விகிதங்கள் மற்றும் மொபைல் போன்கள் நோய்த்தாக்கம் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான இந்த ஆய்வு இனப்பெருக்க உயிரி மருத்துவ துறையால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போதை :

போதை :

விந்தணுக்களின் நிலை குறைய குறைய குழந்தை பெற்று கொள்வதற்க்கான வாய்ப்பு கடினமாகி கொண்டே போகும் ஆகையால் மொபைல்போன் மீதான போதையில் இருந்து ஆண்கள் மீண்டு வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிததுள்ளனர்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!


தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படம் : கெட்டி இமேஜஸ்

Best Mobiles in India

English summary
Men who talk on their cell phones for an hour a day 'are twice as likely to have low sperm quality. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X