Home
News

உஷார் மக்களே: ராணுவ அதிகாரிகள் போல் நடித்து இணையத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல்.!

ராணுவ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஓ.எல்.எக்ஸ் தளத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல் ஒன்று, பல ஊர்களில் பல பேரிடம் பண மோசடி செய்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ராணுவ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஓ.எல்.எக்ஸ் தளத்தில் கொள்ளை அடிக்கும் கும்பல் ஒன்று, பல ஊர்களில் பல பேரிடம் பண மோசடி செய்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஓ.எல்.எக்ஸ் நிறுவனம், பழைய பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு தளம். இந்த ஓ.எல்.எக்ஸ் தலத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், நன்கு சக்கர வாகனம், அதுமட்டுமில்லாமல் நாய்க் குட்டி, புனை குட்டி, பறவைகள் என அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஓ.எல்.எக்ஸ்

ஓ.எல்.எக்ஸ்

தன்னிடம் இருக்கும் பொருளுக்கு சொந்தக்காரர், ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் அவருக்கென்று ஒரு அக்கௌன்ட் விபரத்தை உருவாக்கி, தன்னை பற்றிய விபரம், தன்னிடம் உள்ள பொருளின் விபரம் மற்றும் புகைப்படம் மற்றும் அவர் விற்பனை செய்ய விரும்பும் விலை என அனைத்துத் தகவலையும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்.

இணைய பரிவர்த்தனை

இணைய பரிவர்த்தனை

விளம்பரம் பிடித்த நபர்கள், பொருளின் விபரங்களைக் கேட்டு அதற்கான விலையையும் கேட்டு பேரம் பேசி இறுதியாய் ஒரு தொகைக்கு அந்தப் பொருளை வாங்கிக்கொள்ளலாம். இந்த விற்பனை முறையில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையம் மூலம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றிற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்

நூற்றிற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்

இணையம் மூலம் பயனர்களை நம்ப வைத்து மோசடி செய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதினால், ஹேக்கர்கள் மற்றும் வலைத்தள கொள்ளையர்கள் அப்பாவி மக்களைக் குறி வைத்து ஏமாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் நூற்றிற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதார் அடையாளம்

ஆதார் அடையாளம்

பொருட்களை வாங்கும் நபர்களை நம்பவைப்பதற்காக இந்தக் கும்பல் ஆதார் அடையாளம், தனி நபர் அடையாள ஆவணங்கள் என அனைத்தையும் பயனர்களுக்கு புகைப்படமாக அனுப்பி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை ஏமாற்றிவந்துள்ளது தற்பொழுது தெரியவந்துள்ளது.

ராணுவ அடையாள அட்டைகள்

ராணுவ அடையாள அட்டைகள்

அதுமட்டுமில்லாமல் ராணுவத்தில் பணிபுரிவது போலப் புகைப்படங்கள், ராணுவ அடையாள அட்டைகள் என அனைத்தையும் போலியாக தயார் செய்து நம்ப வைத்து ஏமாற்றி வந்துள்ளனர். பொருட்களை வாங்கும் பயனர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு, போலி அஞ்சல் பார்சல் பில்களையும் உருவாக்கி அதையும் புகைப்படமாக அனுப்பி பணத்தை இணையத்தில் அனுப்பச் செய்து ஏமாற்றியுள்ளார்.

ஜி.எஸ்.டி உடன் ஏமாற்றம்

ஜி.எஸ்.டி உடன் ஏமாற்றம்

அருண் குமார் என்பவர் ஓ.எல்.எக்ஸ் தளத்தில் ஐபோன் 6 போனை வாங்க முற்பட்டு ரூ.20,000 வரை ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஐபோன் 6 மாடல் போனை வெறும் ரூ.12,500 விலைக்கு ஆசைப்பட்டு பார்சல் சார்ஜ் தொகையாக ஜி.எஸ்.டி-யுடன் ரூ.5,000 இணையத்தில் பண பரிவர்த்தனை செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். இவரைப் போல இன்னும் பலர் இப்படி ஓ.எல்.எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவருகின்றனர்.

இனியும் ஏமாற வேண்டாம்

இனியும் ஏமாற வேண்டாம்

இது தனிநபரின் கைவரிசையை அல்லது நூதன முறையில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் மர்ம கும்பலை என்று சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். குறைந்த விலையில் பொருட்கள் வாங்க ஆசைப்பட்டு, போலியானவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Men pose as army BSF personnel to cheat people on OLX in Chandigarh : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X