மீஸு ப்ரோ 7 & மீஸு ப்ரோ 7 பிளஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன?

By Prakash
|

சீன நிறுவனமான மீஸு தற்போது இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் மீஸு ப்ரோ 7 சீனாவில் ஆகஸ்ட் 5 முதல் விற்பனை துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீஸு ப்ரோ 7 மற்றும் மீஸு ப்ரோ 7 பிளஸ் பொதுவாக மீடியாடெக் செயலி கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மீஸு ப்ரோ 7 பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் மீஸு ப்ரோ 7 பிளஸ் 5.7-இன்ச் முழு டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, இதன் பிக்சல் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

மீஸு ப்ரோ 7 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி திறனைக் கொண்டுள்ளது, மேலும் மீடியாடெக் ஹெலியோ பி 25 சிப்செட் இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் மீஸு ப்ரோ 7 பிளஸ் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி திறனைக் கொண்டுள்ளது. இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

மீஸு ப்ரோ 7 மற்றும் மீஸு ப்ரோ 7 பிளஸ் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளதா இருக்கிறது. மேலும் பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவறறில் இடம்பெற்றுள்ளன.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ரியர் கேமரா 12எம்பி மெகாபிக்சல் கொண்டுள்ளது. அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த மீஸு ப்ரோ 7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு மீஸு ப்ரோ 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu Pro 7 and Pro 7 Plus unveiled specs features and pricing ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X