Home
News

பிரம்மாண்டமே உருவாக்கிய பிரம்மாண்டம்.. 8 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா.. 50W வயர்லெஸ் சார்ஜிங்..

பிரபல ஹை-டெக் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மெய்சு (Meizu) பிராண்ட், இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் ஒரு புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில், தனக்கென்ற ஒரு தனி இடத்தை பிடித்த மெய்சு நிறுவனம் இப்போது வரை பல வியக்கத்தகு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் கூட, மெய்சு நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், மெய்சு 21 (Meizu 21) என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. விற்பனைக்கு வந்த சில நொடிகளிலேயே 25,000 மெய்சு 21 யூனிட்கள் விற்று தீர்ந்தன.

பிரம்மாண்டமே உருவாக்கிய பிரம்மாண்டம்.. 8 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா

ஒரு சாதனை விற்பனையை நிறுவனம் செய்து முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, மெய்சு (Meizu) நிறுவனம் அடுத்தபடியாக, அதன் ஸ்மார்ட்போன் (Smartphone) வரிசையில் முதல் முறையாக ஒரு போல்டபில் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக போல்டபில் ஸ்மார்ட்போன்கள் திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்சுவின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் (Meizu's first foldable smartphone device):

ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) என்ற பிரபல டிப்ஸ்டர் வெய்போ (Weibo) பக்கத்தில் பதிவிட்ட தகவலின் படி, மெய்சு நிறுவனம் அதன் முதல் போல்டப்பில் ஸ்மார்ட்போன் (Meizu's first foldable smartphone device) சாதனத்தை வெளியிடவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை நிறுவன இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் கால் பாதிக்கு முன்பு சந்தைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது.

மெய்சு அறிமுகம் செய்யவிருக்கும் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம், புக் ஸ்டைல் தோற்றத்தை கொண்ட 8" இன்ச் டிஸ்பிளே சாதனமாக வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் குறிப்பாக, பிசினஸ் சந்தை வடிகளர்களை குறிவைத்து வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் பற்றிய மற்ற விபரங்கள் அனைத்தையும் நிறுவனம் மர்மமாக வைத்துள்ளது.

இதற்கிடையில், மெய்சு நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலான மெய்சு 21 வரிசையில் புதிய ப்ரோ வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. மெய்சு நிறுவனம் அதன் புதிய மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 2K டிஸ்பிளேவுடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமே உருவாக்கிய பிரம்மாண்டம்.. 8 இன்ச் டிஸ்பிளே.. 200MP கேமரா

மெய்சு 21 ப்ரோ ஸ்மார்ட்போன் (Meizu 21 Pro Smartphone):

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5,020mAh பேட்டரி அம்சத்தை பேக் செய்யுமென்று லீக் தகவல் கூறுகிறது. அதேபோல், இந்த மெய்சு 21 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், 200MP பிரைமரி கேமராவுடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அறிமுகம், இந்த மாதம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெரியாதவர்களுக்கு, கீளி ஆட்டோமொபைல் (Geely Automobile) என்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பு ஜாம்பவான் கையாளும் நிறுவனம் தான் மெய்சு (Meizu) பிராண்ட். கீளி ஆட்டோமொபைல்ஸ் வோல்வோ (Volvo) கார்களுக்கான உரிமையை கொண்டுள்ளது. வோல்வோ கார்கள் சுவீடன் (Sweden) நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், இதன் உரிமையை சீனாவை (China) தலமாக கொண்ட கீளி ஆட்டோமொபைல்ஸ் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்வோ கார்கள் மட்டுமின்றி, இந்த கீளி ஆட்டோமொபைல் நிறுவனம் உலகின் தலைசிறந்த எலெக்ட்ரிக் கார் பிராண்டுகளான லிங்க் & கோ 08 (Lynk & Co 08), ஸ்மார்ட் (Smart), போல்ஸ்டார் (Polestar), லோட்டஸ் (Lotus) போன்ற எலக்ட்ரிக் கார் பிராண்டுகளையும் சொந்தம் கொண்டாடுகிறது. இத்தகைய பெரிய நிறுவனத்திடம் இருந்து வெளி வரும் ஸ்மார்ட்போனிற்கு டிமாண்ட் இருக்க தானே செய்யும்.

Best Mobiles in India

English summary
Meizu Planning To Launch Its First Foldable Smartphone and Upcoming Meizu 21 Pro Mobile This January 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X