மெய்ஸூ எம்எக்ஸ் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியானது..!

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மெய்ஸூ எம்எக்ஸ் 5 எனும் புதிய கருவியை சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டுள்ளது. இந்த கருவி எம்டச் 2.0 தொழில்நுட்பம் கொண்டிருப்பதோடு எம்பே அம்சத்தினையும் வழங்கும் என தெரிவித்திருக்கின்றது.

மெய்ஸூ எம்எக்ஸ் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியானது..!

மெய்ஸூ எம்எக்ஸ்5 மெட்டல் பாடி கொண்டிருப்பதால் பார்க்க அழகாக காட்சியளிக்கின்றது. 149 கிராம் எடை கொண்டிருக்கும் இந்த கருவியில் 5.5 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது.

இதோடு 64 பிட் மீடியாடெக் ஆக்டா கோர் பிராசஸர் பவர் விஆர் ஜி6200 ஜிபியு மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீ்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மெய்ஸூ எம்எக்ஸ் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியானது..!

கேமராவை பொருத்த வரை 20.7 எம்பி ப்ரைமரி கேமராவும் 2160 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதியும் 5 எம்பி முன்பக்க கேமராவும் 1080பி வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஈஸ ப்ளூடூத் 4.0, வை-பை மற்றும் பல அம்சங்களும் FlymeOS கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் 3150 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

Read more about:
English summary
The Chinese handset maker Meizu has launched the MX5 smartphone in an event at Beijing, China.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot