மீஸூ எம்6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
இந்த மீஸூ எம்6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீஸூ எம்6 ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் 20ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் கடந்த ஆண்டு மீஸூ எம்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மீஸூ எம்5 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.10,499ஆக உள்ளது, மேலும் இந்த மீஸூ எம்6 ஸ்மார்ட்போன் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. அதன்பின் மீடியாடெக் செயலியை கொண்டுள்ளது மீஸூ எம்6 ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இந்த மீஸூ எம்6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1080)பிக்சல் தீர்மானம்இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக்:
இக்கருவி பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எம்டச், கைரேகை ஸ்கேனர், அதன் முகப்பு பொத்தான் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3070எம்ஏஎச்:
மீஸூ எம்6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3070எம்ஏஎச் பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications