Home
News

மிட்ரேஞ் மகாலட்சுமி.. 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. RGB ரிங் லைட்.. அலறவிடும் புது Meizu மொபைல்.. விலை என்ன?

அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஹை-டெக் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரித்தால் அது எப்படி இருக்கும்? அடேங்கப்பா.! சொல்லவா வேண்டும்? அடாவடியாக அதிரவிடும் அம்சங்கள் ஒரே போனில் போட்டு அமுக்கிவிடும் தானே. அத்தகைய வேலையை தான் மெய்சு (Meizu) செய்துள்ளது.

பிரபல ஹை-டெக் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மெய்சு (Meizu) பிராண்ட், சமீபத்தில் மெய்சு 21 (Meizu 21) என்ற ஸ்மார்ட்போன் மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, நிறுவனம் இப்போது இதே சீரிஸ் இன் கீழ் ப்ரோ வேரியண்ட் மாடலை வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

மிட்ரேஞ் மகாலட்சுமி.. 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. RGB ரிங் லைட்..

மெய்சு 21 ப்ரோ ஸ்மார்ட்போன் (Meizu 21 Pro Smartphone):

இதன் மெய்சு நிறுவனம் மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) என்ற பெயருடன் அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த புதிய மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை மெய்சு இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள லீக் தகவலின் படி, இந்த மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் 16GB ரேம் உடன் 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 50MP + 13MP +5MP கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வெளிவரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட்ரேஞ் மகாலட்சுமி.. 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. RGB ரிங் லைட்..

மெய்சு 21 ப்ரோ கேமரா அம்சம் (Meizu 21 Pro Camera):

ஆனால், நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மெய்சு 21 (Meizu 21) போனில் 200MP மெயின் கேமரா + 13MP அல்ட்ரா வைடு + 5MP சென்சார் உடன் RGB லைட் பின்பக்கத்தில் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருப்பது, ஒரு ப்ரோ வேரியண்ட் மாடல் என்பதனால், கேமரா அம்சத்தில் மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) சாதனம் 12GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் மாடலையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சத்தானம் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்ஸ் உடன், மெய்சுவுக்கு சொந்தமான FlymeOS 10.5 மற்றும் FlymeAuto 4.0 இணக்கத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

தெரியாதவர்களுக்கு, கீளி ஆட்டோமொபைல் (Geely Automobile) என்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பு ஜாம்பவான் கையாளும் நிறுவனம் தான் மெய்சு (Meizu) பிராண்ட். கீளி ஆட்டோமொபைல்ஸ் வோல்வோ (Volvo) கார்களுக்கான உரிமையை கொண்டுள்ளது. வோல்வோ கார்கள் சுவீடன் (Sweden) நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், இதன் உரிமையை சீனாவை (China) தலமாக கொண்ட கீளி ஆட்டோமொபைல்ஸ் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்ரேஞ் மகாலட்சுமி.. 200MP கேமரா.. 1TB ஸ்டோரேஜ்.. RGB ரிங் லைட்..

வோல்வோ கார்கள் மட்டுமின்றி, இந்த கீளி ஆட்டோமொபைல் நிறுவனம் உலகின் தலைசிறந்த எலெக்ட்ரிக் கார் பிராண்டுகளான லிங்க் & கோ 08 (Lynk & Co 08), ஸ்மார்ட் (Smart), போல்ஸ்டார் (Polestar), லோட்டஸ் (Lotus) போன்ற எலக்ட்ரிக் கார் பிராண்டுகளையும் சொந்தம் கொண்டாடுகிறது. Geely Lynk & Co 08 electric SUV கார்களில் இந்த FlymeOS 10.5 மற்றும் FlymeAuto 4.0 அம்சம் இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்சு 21 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விலை (Meizu 21 Pro Expecting Price):

இந்த மெய்சு 21 ப்ரோ (Meizu 21 Pro) விலை பற்றி பேசுகையில், இது இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.37,999 விலை முதல் ரூ.46,599 என்ற இடைப்பட்ட விலைக்கு நடுவே அறிமுகம் செய்யப்படும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meizu 21 Pro Expected To Launch With 200MP Triple Camera and 16GB RAM 1TB Storage Snapdragon 8 Gen 3 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X