நொடியில் 25,000 யூனிட் விற்று தீர்த்த Meizu 21.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 512GB மெமரி.. விலை என்ன?
கார் தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பிராண்ட் ஆனா மெய்சு (Meizu), சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலன் மெய்சு 21 (Meizu 21) என்ற மாடலை அறிமுகம் செய்தது. இதன் விற்பனை துவங்கிய சில நொடியில் ஒட்டுமொத்தமாக 25,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
கீளி ஆட்டோமொபைல் (Geely Automobile) என்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பு ஜாம்பவான் கையாளும் நிறுவனம் தான் மெய்சு (Meizu) பிராண்ட். கீளி ஆட்டோமொபைல்ஸ் வோல்வோ (Volvo) கார்களுக்கான உரிமையை கொண்டுள்ளது. வோல்வோ கார்கள் சுவீடன் (Sweden) நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், இதன் உரிமையை சீனாவை (China) தலமாக கொண்ட கீளி ஆட்டோமொபைல்ஸ் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்வோ கார்கள் மட்டுமின்றி, இந்த கீளி ஆட்டோமொபைல் நிறுவனம் உலகின் தலைசிறந்த எலெக்ட்ரிக் கார் பிராண்டுகளான லிங்க் & கோ 08 (Lynk & Co 08), ஸ்மார்ட் (Smart), போல்ஸ்டார் (Polestar), லோட்டஸ் (Lotus) போன்ற எலக்ட்ரிக் கார் பிராண்டுகளையும் சொந்தம் கொண்டாடுகிறது. இத்தகைய பெரிய நிறுவனத்திடம் இருந்து வெளி வரும் ஸ்மார்ட்போனிற்கு டிமாண்ட் இருக்க தானே செய்யும்.
மெய்சு 21 (Meizu 21):
கீளி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் ஆன மெய்சு இப்போது மெய்சு 21 (Meizu 21) என்ற பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வெய்போ (Weibo) தளம் வழியாக விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்போன் சில நொடிகளில் மொத்தமாக விற்று முடிந்துள்ளது. உண்மையை சொல்ல போனால், சில நொடிகளில் 25,000 முதல் 29,000 வரையிலான யூனிட்களை மெய்சு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வருவதினால், இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக ஃபிளைமிஆட்டோ (FlymeAuto) அம்சம் இடம்பெற்றுள்ளது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போனை புதிய தலைமுறை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் பவர்புல் சாதனமாக மாற்றியுள்ளது. இதில் 200MP கேமராவும் இடம்பெற்றுள்ளது.

மெய்சு 21 சிறப்பம்சம் (Meizu 21 Specifications):
இந்த Meizu 21 ஸ்மார்ட்போன் 6.55' இன்ச் கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 1100 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த புதிய மெய்சு 21 ஆனது சாம்சங்கின் (Samsung) ISOCELL HP3 உடன் 200MP பிரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது 1/1.4 இன்ச் பெரிய சென்சார் ஆகும். இது OIS உடன் வருகிறது.
இதனுடன் 13MP அல்ட்ராவைடு மற்றும் 5MP டெப்த் சென்சார் உள்ளது. இந்த சாதனம் 80W வயர்டு சார்ஜிங் (wired charging) அம்சத்துடன் வருகிறது. இது 50W சூப்பர் வயர்லெஸ் எம்சார்ஜ் (mCharge) தொழில்நுட்பத்துடன் 4,800mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான ஃபிளைமி ஓஎஸ் 10.5 (FlymeOS 10.5) உடன் துவக்குகிறது. இது Meizu இன் ஃபிளைமி ஆட்டோவுக்கான (Flyme Auto) ஆதரவை வழங்குகிறது.
இந்த மெய்சு 21 (Meizu 21) ஸ்மார்ட்போன் சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்திய மதிப்பில் ரூ.39,999 என்ற விலை புள்ளியில் வருகிறது. அதேபோல், இதன் ஹை-எண்டு மாடலான 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.47,112 என்ற விலையில் வருகிறது. இந்த சாதனம் இப்போதைக்கு சீன ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது கிடைக்குமா என்பது சந்தேகம்.


Click it and Unblock the Notifications








