பிஞ்சு வயதிலேயே உலகின் தலைசிறந்த ஹேக்கர்களான சுட்டிக்கள் டாப் 10 பட்டியல்

கம்ப்யூட்டர்களை தரமான மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் கொண்டு பாதுகாக்க முடியும். தரமான மென்பொருள் இருப்பின், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் சார்ந்த அச்சுறுத்தல்களை தடுக்க முடியும்.

|

கம்ப்யூட்டர்களை தரமான மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் கொண்டு பாதுகாக்க முடியும். தரமான மென்பொருள் இருப்பின், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் சார்ந்த அச்சுறுத்தல்களை தடுக்க முடியும். எனினும் தரமான ஹேக்கர்களால் எவ்வித மென்பொருள்களையும் கடந்து அதன் அம்சங்களை மிக எளிமையாக இயக்க முடியும்.

டாப் 10 ஆபத்தான குழந்தை ஹேக்கர்கள்.!

சமீப காலங்களில் ஹேக்கிங் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஹேக்கர்கள் உருவாக பல்வேறு காரணங்கள் உள்ளன, லாபம், போராட்டம், சவால், பொழுதுபோக்கு என ஒவ்வொரு ஹேக்கர் உருவாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் இதுபோன்ற காரணங்களில் ஒன்றை மனதில் கொண்டு ஹேக்கிங் துறையை தேர்வு செய்து, இணைய உலகை கலக்கும் டாப் 10 குழந்தை ஹேக்கர்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

க்ரிஸ்டோஃபர் வொன் ஹாசெல் (5 வயது)

க்ரிஸ்டோஃபர் வொன் ஹாசெல் (5 வயது)

க்ரிஸ்டோஃபர் வொன் ஹாசொல் உலகின் மிகவும் குறைந்த வயது ஹேக்கராக அறியப்படுகிறார். மைக்ரோசாஃப்ட் பாதுகாப்பு தொழில்நுட்ப மையம் மூலம் இளம் வயது ஹேக்கராக இவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆத்தென்டிகேஷன் திரையை முறியடிக்கக்கூடிய திறன் பெற்றிருக்கும் க்ரிஸ்டோஃபர் கேம்களை இயங்க விடாமல் தடுக்கும் திறன் பெற்றிருக்கிறார்.

மேலும் பிபிசி வெளியிட்டிருக்கும் தகவல்களில் க்ரிஸ்டோஃபர் எவ்வித பாஸ்வேர்டுகளையும் திருடாமல், பாஸ்வேர்டு வெரிஃபிகேஷன் ஆப்ஷனில், தொடர்ச்சியாக பாஸ்வேர்டை பதிவிட்டு என்ட்டர் பட்டனை க்ளிகி செய்து தனது தந்தையின் கணக்கில் சைன்-இன் செய்து கேம்களை விளையாடியிருக்கிறார், என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூபென் பால் (9 வயது)

ரூபென் பால் (9 வயது)

ஏற்கனவே எத்திக்கல் ஹேக்கர் என அறியப்படும் 9 வயதான ரூபென் பால், ஆன்ட்ராய்டு போனில் உள்ள தகவல்களை வெறும் 15 நிமிடங்களில் எவ்வாறு திருட முடிந்தது என விளக்கமளித்தார்.

தற்சமயம் ரூபென் பால் ப்ரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் கேம்களை உருவாக்கி வருகிறது. இவரது படைப்புகள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

பெட்சி டேவிஸ் (7 வயது)

பெட்சி டேவிஸ் (7 வயது)

பெட்சி டேவிஸ், ஏழு வயது ப்ரிட்டனை சேர்ந்த பெண் குழந்தை, ஓபன் வைபை நெட்வொர்க்-ஐ எவ்வாறு ஹேக் செய்ய வேண்டும் என விளக்கமளித்திருந்தார். சேனல் 5 செய்திகள் மற்றும் விர்ச்சுவல் நெட்வொர்க் வழங்கும் ஹைட்மைஆஸ் வலைத்தளம் நடத்திய ஆய்வில் டேவிஸ் வைபை நெட்வொர்க்-ஐ 10 நிமிடங்கள் 54 நொடிகளில் ஹேக் செய்து அசத்தினார்.

பெயர் அறியப்படாத கனடா நாட்டு ஹேக்கர் (12 வயது)

பெயர் அறியப்படாத கனடா நாட்டு ஹேக்கர் (12 வயது)

டொரோன்டோ சன் எனும் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மான்ட்ரியலை சேர்ந்த ஐந்தாம் கிரேடு மாணவர் காவல் துறை மற்றும் பல்வேறு இதர அரசு வலைத்தளங்களில் டெனியல் ஆஃப் சர்வீஸ் தகவலுடன், தளங்களை முடக்க காரணமாக இருந்ததாக தெரிவித்திருந்தது. இந்த ஹேக்கர் செய்த காரியத்தால் 60,000 டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பிரபல ஹேக்கிங் தாக்குதலில் இந்த குழந்தைக்கு பங்கு இருப்பதாக அறியப்படுகிறது. எனினும் இவற்றை மாணவர் மட்டும் தனியாக செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்ட்ரிய ஹேக்கர் (ACK! 3STX) (15 வயது)

ஆஸ்ட்ரிய ஹேக்கர் (ACK! 3STX) (15 வயது)

"ACK! 3STX" என்ற அடையாளம் கொண்ட 15 வயதான ஆஸ்த்ரிய ஹேக்கர் மிக குறுகிய காலக்கட்டத்தில் தலைசிறந்த ஹேக்கராக உருவெடுத்திருக்கிறார். மூன்றே மாதங்களில் சுமார் 259-க்கும் அதிக நிறுவனங்களின் வலைத்தளங்களை இவர் ஹேக் செய்திருக்கிறார். எனினும் இவரது நடவடிக்கைகளை டிராக் செய்து காவல் துறையினர் இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேத்யூ வெய்க்மேன்

மேத்யூ வெய்க்மேன்

மேத்யூ மெய்க்மேன் எனும் 14 வயதான ஹேக்கர் தொலைபேசி ஆப்பரேட்டர் சேவைகளை ஹேக் செய்திருக்கிறார். மிகவும் ஆபத்தான ஹேக்கராக அறியப்படும் இவரை பல்வேரு காரணங்களுக்காக 18 வயதிலேயே கைது செய்யப்பட்டார்.

பெயர் அறியப்படாத கனடா நாட்டு ஹேக்கர்

பெயர் அறியப்படாத கனடா நாட்டு ஹேக்கர்

2014-ம் ஆண்டு 11 வயதான ஹேக்கர் கனடா நாட்டு அரசு வலைத்தளங்களை டிடாஸ் தாக்குதல்களை மூலம் ஹேக் செய்தார். இந்த குழந்தை அரசு வலைத்தளங்களின் ஹோம்பக்கத்தை மாற்றியமைத்து, இரண்டு நாட்களுக்கு முடக்கி வைத்திருந்தார். இந்த இரண்டு நாட்களில் கனடா நாட்டு அரசாங்கத்திற்கு 260 ஆயிரம் டாலர்கள் அளவு இழப்பு ஏற்பட்டது.

சைஃபை (CyFi)

சைஃபை (CyFi)

பத்து வயதான சைஃபை (CyFi) பல்வேறு ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு கேம்களை ஹேக் செய்து ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கேம்களை விளையாடும் போது அவற்றில் பிழைகளை கண்டறிந்ததாக இவர் தெரிவித்திருக்கிறார். கேம்களை விளையாடும் போது போரடித்தாதல் அவற்றை வேகமாக முடிக்க ஹேக் செய்ய துவங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மைக்கேல் கால்ஸ்

மைக்கேல் கால்ஸ்

15 வயதான மைக்கோல் கால்ஸ் ரிவோல்டா எனும் டினையல் ஆஃப் சர்வீஸ் மென்பொருளை உருவாக்கி, ஈபே, அமேசான், டெல் போன்ற பல்வேறு வலைத்தளங்களை ஹேக் செய்திருக்கிறார். இவரது நடவடிக்கைகளால் 7.5 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜொனாதன் ஜேம்ஸ்

ஜொனாதன் ஜேம்ஸ்

ஹேக்கர் உலகின் காம்ரேட் என அழைக்கப்படும் ஜொனாதன் ஜேம்ஸ் தனது 16 வயகில் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு துறை வலைத்தளத்தை ஹேக் செய்து, சும்மா விளையாட்டுக்கு செய்தேன் என கூலாக தெரிவித்தார். இவர் சார்ந்த பல்வேறு தகவல்களில் இவர் தகவல்களை திருடி தனது நடவடிக்கைகளை ட்விட்டரில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவர் எவ்வித நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Meet The World’s 10 Most Dangerous Child Hackers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X