செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் ரோபோட்டிக் ரோவர்: முக்கிய பங்கு வகித்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி.!
நாசா அமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட ரோபோட்டிக் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரங்கியது. அதாவது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைப்பு செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள்
குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது. சரியாக 7 மாத பயணத்தை அடுத்து வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்தது. மேலும் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரா பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது.

அதேபோல் விண்கலத்தில் இருந்து ரோவர் ஆனது 7 நிமிடங்கள் வரை தரையிரங்கியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர். அதன்பிறகு செவ்வாயை படம்பிடித்து, முதல் புகைப்படத்தை நாசா அமைப்பிற்கு அனுப்பிவைத்தது.

குறிப்பாக செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும். அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் இந்தவிண்கலம் அனுப்பப்பட்டது. பின்பு இந்த வரலாற்கு சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவேதாமோகனுக்கு மிகப் பெரிய பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகன்
அதாவது இந்த திட்டம் 2013-ல் தொடங்கியது முதலில் இருந்தே ஈடுபட்டு வந்தார் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகன். வெளிவந்த தகவலின்படி, ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக சுவாதி இருந்தார். பின்னர் ரோவர் வாகனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

பெங்களூரில் பிறந்த சுவாதி தனது ஒன்றாவது வயதில் அமெரிக்கா சென்றார். பின்னர் பள்ளியில் படிக்கும்போது குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்த அவருக்கு ஸ்டார் டிரெக் டிவி நிகழ்ச்சியைப் பார்த்தால் புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என ஆர்வம் ஏறப்பட்டுள்ளது.

அதன்பின்னர் விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். பின்பு நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம் நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications