Home
News

ஸ்னாப்டிராகன்னுக்கு போட்டியாக களமிறங்கிய சக்தி வாய்ந்த சிப்செட்.. 2 மில்லியன் மார்க்கிங்குடன் அதிரடி..

குவால்காம் நிறுவனம் சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3 SoC) அறிமுகம் செய்தது. இது தான் இன்றைய காலத்தின் அதிசக்தி வாய்ந்த சிப்செட்டாகும். இதற்கு அடுத்தபடியாக மீடியாடெக் டிமென்சிட்டியின் புது சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மீடியாடெக் (MediaTek) இன் வரவிருக்கும் புதிய சிப்செட் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட் என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இன் திறன் மற்றும் பெர்பார்மென்ஸ் சோதனை குறித்த ஸ்கோரிங் விபரங்களை டெஸ்டிங் வலைத்தளமான AnTuTu வெளியிட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன்னுக்கு போட்டியாக களமிறங்கிய சக்தி வாய்ந்த சிப்செட்..

மீடியாடெக் டிமென்சிட்டி 9300 ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக AnTuTu மதிப்பெண்கள் குறிப்பிடுகிறது. MediaTek இன்னும் புதிய Dimensity சிப்செட்டை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், அது விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 9300 சிப்செட் மதிப்பெண் பற்றி பேசுகையில், இது முதல் முறையாக 2 மில்லியன் மதிப்பெண்களை பெற்றுள்ளது.

MediaTek Dimensity 9300 சிப்செட் தொடர்பான AnTuTu மதிப்பெண்கள் Weibo இல் பகிரப்பட்டன, இங்கு MediaTek Dimensity 9300 ஆனது 2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அந்த வலைத்தள பக்கம் தெரிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கான புதிய சாதனை ஸ்கோரிங் ஆகும். இதேபோல், Snapdragon 8 Gen 3 சிப்செட் 2 மில்லியனைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.

MediaTek Dimensity 9300 என்பது நான்கு Cortex-X4 கோர்கள் மற்றும் நான்கு Cortex-A720 கோர்கள் கொண்ட ஆக்டா-கோர் சிப்செட் ஆகும். வரவிருக்கும் மீடியாடெக் சிப்செட் இம்மார்டலிஸ்-ஜி720 ஜிபியுவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீடியாடெக் டிமென்சிட்டி 9300 சிப்செட் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது.

AnTuTu பட்டியல் சிப்செட் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தையும் ஆதரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த புதிய சக்தி வாய்ந்த சிப்செட் எந்த சாதனம் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இது விவோ எக்ஸ்100 (Vivo X100) தொடரைப் பரிந்துரைக்கும் அறிக்கைகள் உள்ளன. மறுபுறம், இது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 (OPPO Find X7) ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த சிப்செட்டுடன் விவோ X100 தொடரின் எந்த மாடலில் இடம்பெறும் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய முக்கிய விவரங்களை வெளிப்படுத்தும் தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. விவோ எக்ஸ்100 (Vivo X100) சீரிஸ் போன்கள் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், கர்வுடு டிஸ்பிளே உடன் பஞ்ச்-ஹோல் கேமராவுடன் AMOLED டிஸ்ப்ளேவாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மீடியாடெக் டிமென்சிட்டி 9300 (MediaTek Dimensity 9300) சிப்செட், விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) இயக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) மாடல் பெ0ரும்பாலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட்டுடன் வரும். இது 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவை கொண்டிருக்கும்.

Vivo X100 Pro+க்கு 200MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் விவோ X100 Pro-க்கு 64MP 100mm பெரிஸ்கோப் கேமராவை கொண்டிருக்கும். இதில் புதிய சோனி LYT800 சென்சார் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது, இது குறிப்பாக X100 தொடருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Vivo X100 Pro ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
MediaTek Dimensity 9300 Chipset Scores 2 Million Benchmark Scorings In AnTuTu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X