அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

|

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் உங்களுக்கே புரியும். பெரும்பாலான நேரங்களில், ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில், அதன் டிஸ்பிளே, டிசைன், கேமராக்கள், பேட்டரி என எல்லாமே படுபயங்கரமாக விளம்பரம் செய்யப்படும். ஆனால் சிப்செட் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் பகிரப்படாது.

அதுபோன்ற சூழ்நிலைகளில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனில் ஒரு 'மொக்கையான' சிப்செட் தான் உட்பொதிக்கப்பட்டுள்ளது, அதை பூசிமொழுகும் நோக்கத்தின் கீழ் தான் அது குறித்த விவரங்கள் பெரிதும் பகிரப்படவில்லை - தேடி பார்த்தால் மட்டுமே கிடைக்கும் - என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சிப்செட் -  ஒரு ஸ்மார்ட்போனில் ஏன் மிகவும் முக்கியம்?

சிப்செட் - ஒரு ஸ்மார்ட்போனில் ஏன் மிகவும் முக்கியம்?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ராசஸர் ஆனது சிப்செட் என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் ஸ்மார்ட்போனில் நடக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மற்றும் எல்லாமே சரியாக செயல்படுவதை உறுதி செய்யும் மிக முக்கியமான ஒரு காம்போனென்ட் ஆகும்.

இன்னும் எளிமையாக கூற வேண்டுமென்றால், ஒரு ப்ராசஸர்-ஐ மனித உடலில் உள்ள மூளையுடன் நீங்கள் ஒப்பிடலாம். இப்போது உங்களுக்கு ஒரு சிப்செட்டின் முக்கியதுவம் என்ன என்பது புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

இப்படியான ஒரு முக்கியமான மேட்டரை பற்றி அதிகம் பேசாத ஒரு ஸ்மார்ட்போன் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

அடுத்தமுறை ஸ்மார்ட்போன் வாங்கும் போது.. அலெர்ட்!

அடுத்தமுறை ஸ்மார்ட்போன் வாங்கும் போது.. அலெர்ட்!

எனவே அடுத்த முறை நீங்களொரு புதிய ஸ்மார்ட்போனை பற்றி கேள்விப்படும் பட்சத்தில், அல்லது வாங்க வேண்டும் என்று திட்டமிடும் பட்சத்தில், சிப்செட் குறித்தும் நன்கு ஆராய வேண்டும். அதற்கு சந்தையில் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான சிப்செட்களை பற்றியும், அதன் "முன்னோடிகளை" பற்றியும், அதன் போட்டியாளர்களை பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அப்படியாக, சிப்செட் உலகின் ஒரு சமீபத்திய அறிமுகம் தான் - மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ (MediaTek Dimensity 9000+) சிப்செட் ஆகும். டைமன்சிட்டி 9000+ என்பது மீடியாடெக் நிறுவனத்தின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன டைமன்சிட்டி 9000-இன் மிட்-சைக்கிள் வாரிசு ஆகும்.

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

குவால்காம்-ஐ ஃபாலோ செய்யும் மீடியாடெக்; ஆனால்!

குவால்காம்-ஐ ஃபாலோ செய்யும் மீடியாடெக்; ஆனால்!

சமீபத்திய ஆண்டுகளில் குவால்காம் நிறுவனம் என்ன செய்து வருகிறதோ அதையே டைமென்சிட்டியும் பின்தொடர்கிறது; 9000 ஐப் பின்தொடர்கிறது 9000+ ஐ அறிமுகம் செய்துள்ளது. ஆனால் குவால்காம் நிறுவனத்தின் பாணியை போலல்லாமல், மீடியாடெக்கின் இந்த புதிய சிப்பில் பெரிய அளவிலான மேம்பாடுகள் சேர்க்கப்படவில்லை.

Dimensity 9000+ மற்றும் Dimensity 9000 ஆகியவற்றுக்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஹையர்-க்ளாக்டு ப்ரைம் கோர் (Higher-clocked prime core) மட்டுமே ஆகும். ஆனால் நிறுவனத்தின் கூற்றுப்படி, இதுவே செயல்திறனில் ஊக்கத்தை அளிக்குமாம்.

இது சின்ன மாற்றமா... இல்ல ஏமாற்றமா?

இது சின்ன மாற்றமா... இல்ல ஏமாற்றமா?

டைமன்சிட்டி 9000 இல் உள்ள 3GHz கார்டெக்ஸ் X2 கோர் உடன் ஒப்பிடும்போது 9000+ ஆனது ஒரு புதிய 3.2GHz கார்டெக்ஸ் X2 கோர்-ஐ பெறுகிறது. இதுதவிர்த்து பழைய சிப்புடன் ஒப்பிடும்போது புதிய சிப்செட்டில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்த இரண்டு சிப்செட்களுமே Arm Mali-G710 MC10 GPU உடன் வருகின்றன மற்றும் FHD+ ரெசல்யூஷனில் 180Hz மற்றும் WQHD+ ரெசல்யூஷனில் 144Hz வரை சப்போர்ட் செய்யும். உடன் 7500Mbps வரையிலான LPDDR5X ரேம்-க்கான ஆதரவும் உள்ளது மேலும் 5த் ஜென் 590 ஏஐ ப்ராசஸிங் யூனிட்டும் உள்ளது.

பெர்பார்மன்ஸில் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தால் பல்பு தான்!

பெர்பார்மன்ஸில் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தால் பல்பு தான்!

புதிய Dimensity 9000+ சிப்செட் ஆனது CPU செயல்திறனில் 5 சதவீத பூஸ்ட்-ஐயும், Dimensity 9000 உடன் ஒப்பிடும்போது GPU செயல்திறனில் 10 சதவீத முன்னேற்றத்தையும் வழங்கும் என்று மீடியாடெக் கூறுகிறது.

இது சிறிய மற்றும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் தான். எனவே பெரிய அளவிலான வேறுபாட்டை எதிர்பார்க்க வேண்டாம். மீறி எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அதாவது 9000 கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக 9000+ கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான செயல்திறன் மாற்றத்தை எதிர்பார்த்தால் - பல்பு தான்; மற்றபடி இந்த இரண்டுமே விலைக்கேற்ற நேர்மையான சிப்செட்கள் தான், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

9000+ சிப்செட்டை எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம்?

9000+ சிப்செட்டை எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம்?

மீடியாடெக் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த புதிய டைமன்சிட்டி 9000+ சிப்பை பேக் செய்யும் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2022 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் சந்தைக்கு வரும்.

ஆனால் குறிப்பிட்ட சிப்செட்டை எந்தெந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பயன்படுத்தும் என்பது குறித்த விவரங்கள் இல்லை.

மறுகையில், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8-சீரிஸ் சிப்செட்கள், பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் பிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு போன்களில் இன்னுமும் பிரபலமான சிப்செட்களாக இடம்பெற்று வருகின்றன. வரும் மாதங்களில் டைமென்சிட்டி 9000+ சிப்செட் அதை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Read more about:
English summary
MediaTek Launched Dimensity 9000+ chipset What is New Can we expect better performance than its predecessor Check the details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X