மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

|

இந்த 2020 ஆம் ஆண்டு, இதைவிட மோசமாக இருக்காது என்று நினைத்தவர்கள் நம்மில் பலரும் இருப்பீர்கள், யாரும் இந்த வருடத்தை அவர்களின் வாழ்நாளில் மறந்திட முடியாது. இதுவரை நடந்த சம்பவங்களிலிருந்தே வெளிவர முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இன்னொரு நம்பமுடியாத செய்தி சமூக வலைத்தளங்களில் உருவெடுத்து, நெட்டிசன்ஸ்களை கிறுக்குப்பிடிக்க வைத்துள்ளது. உலகம் அதன் இறுதி நாளை எதிர்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்திலிருந்தவர்களுக்கு இந்த செய்தி கூடுதல் பீதியை உருவாக்கலாம்.

பாதி ஆண்டைக் கூட கடக்கவில்லை இவ்வளவு அழிவுகளா?

பாதி ஆண்டைக் கூட கடக்கவில்லை இவ்வளவு அழிவுகளா?

இந்த ஆண்டின் மோசமான சம்பவம் என்றால் முதலில் கொரோனா வைரஸை தான் குறிப்பிடுவோம். இது ஒரு புறம் இருக்க இந்த ஆண்டில் உள்நாட்டு அமைதியின்மை, பிறநாடுகளிடையே போர் உருவாகும் சூழல், பொருளாதார மந்த நிலை, வெட்டுக்கிளி தாக்குதல், எரிமலை வெடிப்பு, சூறாவளி அழிவு, பிரபலங்களின் மரணம் என உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

மனிதனின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

மனிதனின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

இந்த 2020 ஆம் ஆண்டு, உலக வரலாற்றில் மிகவும் மோசமான வருடமாக மாறியுள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் கொரோனா வைரசின் தொற்று எதிர்பார்த்திடாத புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. உலகப் போர் சமயத்தில் உருவான அழிவைவிட, இந்த நோய்ப் பாதிப்பால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மனிதனின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்? என்கிற மிகப்பெரிய கேள்வியை இந்த ஆண்டு உருவாக்கியுள்ளது.

பூமியின் இறுதி நாள் வந்துவிட்டதா?

பூமியின் இறுதி நாள் வந்துவிட்டதா?

இந்த கண்ணுக்குத் தெரியாத வைரசின் தாக்கம் எப்பொழுது குறையும், இதற்கு மாற்று மருந்து எப்பொழுது கிடைக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு மற்றொரு அழிவு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. இன்னும் நான்கு தினங்களில் மாயன் கணக்குப் படி உலகம் அழியப் போகிறது என்ற செய்தி உலகம் முழுதும் பரவி வருகிறது. பழைய மாயன் கணக்கு பொய்யானது, இதுவே சரியான கணக்கு என்று பாலோ டாகலோகின் (Paolo Tagaloguin) என்ற இளம் விஞ்ஞானி கூறியுள்ளார்.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

மாயன் காலண்டரை தவறாக கணித்துவிட்டோம்

மாயன் காலண்டரை தவறாக கணித்துவிட்டோம்

மாயன் காலண்டரை யாரும் மறந்திருக்க முடியாது, கடந்த 2012ம் ஆண்டில் டிசம்பர் 21ம் தேதி, உலகம் அழியும் என்று மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு, பெரும் பீதியை இந்த தகவல் அந்த ஆண்டில் உருவாக்கியது. ஆனால், மாயன் காலண்டரின் கணிப்புப் படி உலகில் எந்தவித பாதிப்பும் அப்பொழுது ஏற்படவில்லை. மாயன் காலண்டர் முற்றிலும் தவறு என்ற தகவல்கள் அதற்குப் பின் நம்பப்பட்டது. மாயன் காலண்டர் கணக்கை நாம் தான் தவறாகக் கணித்துவிட்டோம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சரியான கணக்குப்படி ஜீன் 21,2020 தான் இறுதி நாளா?

சரியான கணக்குப்படி ஜீன் 21,2020 தான் இறுதி நாளா?

தற்பொழுது வெளியாகியுள்ள மாயன் காலண்டரின் சரியான கணக்குப்படி கூறப்படுவது என்னவென்றால், வருகிற ஜூன் 21 ஆம் தேதியோடு உலகம் அழிந்துவிடும் என்று கூறியுள்ளனர். இதற்கு முன்பு ஜூலியன் காலண்டர் அடிப்படையில் மாயன் காலண்டரை கணக்கிட்டு 2012 ஆம் அண்டு டிசம்பர் 21ம் தேதியைப் பூமியின் இறுதி நாளாக அறிவித்தனர். ஆனால், தவறு நாம் ஜூலியன் (Julian) காலண்டரை பயன்படுத்தியதால் தான் உருவாகியுள்ளது என்று இப்பொழுது கூறியுள்ளனர்.

கிரிகோரியன் (Gregorian) காலண்டர் கூறும் தகவல் என்ன தெரியுமா?

கிரிகோரியன் (Gregorian) காலண்டர் கூறும் தகவல் என்ன தெரியுமா?

பூமி சூரியனைச் சுற்றுவதன் அடிப்படையில் கிரிகோரியன் (Gregorian) காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. கிரிகோரியன் காலண்டருக்கு முன்பு, ஜூலியன் காலண்டர் தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கிரிகோரியன் காலாண்டர் கணக்கின்படி, ஆண்டுகள் குறித்து தவறான கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 11 நாள் இழப்பு

ஒவ்வொரு ஆண்டும் 11 நாள் இழப்பு

இதனால், கிரிகோரியன் காலாண்டர் கணக்கின்படி ஒவ்வொரு ஆண்டு நாம் சுமார் 11 நாள்கள் வரை இழந்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் நாம் இழந்த 11 நாட்களைச் சேர்த்துக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த 2020ம் ஆண்டு தான் பூமியின் இறுதி ஆண்டாகக் கூறப்படுகிறது.

உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?உஷார்- அதிகரிக்கும் போலி இ-பாஸ்: போலி இ-பாஸில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி?

இழந்த 2948 நாட்களால் உருவான குழப்பம்

இழந்த 2948 நாட்களால் உருவான குழப்பம்

கணக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை என்றால் தெளிவாகக் கூறுகிறேன், ஜூலியன் காலண்டரை, கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் மாற்றம் செய்ததால் நாம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 நாட்களை இழந்துவிடுகிறோம். சரியாக 1752 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை, 268 ஆண்டுகளாக கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய கணக்குப்படி 268 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்துக்கும் 11 நாள்களைச் சேர்த்து பார்த்தால் 2948 நாட்கள் நமக்குக் கிடைக்கிறது.

அப்படினா 2020 ஆம் ஆண்டு தான் இறுதி ஆண்டா?

அப்படினா 2020 ஆம் ஆண்டு தான் இறுதி ஆண்டா?

கிரிகோரியன் காலண்டர் கணக்குப்படி நமக்குக் கிடைத்துள்ள 2948 நாட்களை / 365 நாட்களுடன் வகுத்தாள் = நமக்கு 8 வருடங்கள் கிடைக்கிறது. பழைய மாயன் காலண்டர் தகவலின்படி 2012 ஆம் ஆண்டில் பூமி அழிந்துவிடும் என்று கூறப்பட்ட வருத்தத்துடன் இந்த 8 வருடத்தைச் சேர்த்தால், நமக்கு நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் 2020 ஆம் ஆண்டு வருகிறது. ஆகையால், இந்த 2020 ஆம் ஆண்டு தான் பூமியின் அழிவு ஆண்டாக மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மாயன் கணக்கு படி 'இது' தான் இறுதி நாள்

மாயன் கணக்கு படி 'இது' தான் இறுதி நாள்

இந்நிலையில், இந்த புதிய கணக்குப்படி நாம் கணக்கிட்டால் வரும் ஜூன் 21, 2020 ஆம் தேதி தான் கடந்த வருடத்தில் தவறாக கூறப்பட்ட டிசம்பர் 21, 2012 ஆம் ஆண்டாக இருக்கக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின் இறுதி தினமாகக் கூறப்பட்ட டிசம்பர் 21, 2012, தற்பொழுது புதிய வடிவில் ஜுன் 21ம் தேதிக்கு மாறியுள்ளது. பூமியின் உண்மையான இறுதி நாள் இது தான் என்று கூறுகிறார்கள். பல துயர சம்பவங்களால் நொந்துபோய் உள்ள மக்களுக்கு இச்செய்தி கூடுதல் பீதியை உருவாக்கியுள்ளது.

நம்பமுடியாத மலிவு விலையில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?நம்பமுடியாத மலிவு விலையில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

புதிய கணக்கு, பழைய கணக்கு - அச்சம் வேண்டாம்

புதிய கணக்கு, பழைய கணக்கு - அச்சம் வேண்டாம்

இவர்கள் கூறும் புதிய கணக்கு, பழைய கணக்கு எல்லாம் உண்மை தானா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இருந்தாலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப காலத்தில் பூமிக்கு எதுவும் பேரழிவு வருகிறது என்றால் நாசா அல்லது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பார்கள்.

டெய்லி சீட் காலண்டர் தான் நம்பிக்கை

டெய்லி சீட் காலண்டர் தான் நம்பிக்கை

பூமியின் இறுதி நாள், டூம்ஸ்டே, பூமி அழியப்போகிறது போன்ற செய்திகளை எல்லாம் சற்று ஒதுக்கிவையுங்கள். எதுவும் ஆகாது என்ற நம்பிக்கையுடன் வீட்டில் இருக்கும் டெய்லி சீட் காலண்டரை மட்டும் நம்பி நாட்களைக் கடத்துவோம்.

Source: www.forbes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mayan Calendar New Calculations Says The Earth's Doomsday Is On 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X