இந்த 10 பேரில் ஒருவன் தான் ரான்சம்வேர் சைபர் தாக்குதலுக்கு காரணம்.!?

இவனுங்க முகத்த பார்த்தா அதுக்குலாம் சரிபட்டு வர மாட்டானுங்க என்பது போல தெரியும். ஆனால், ஜகஜால கில்லாடிகள்..!

|

வன்னா க்ரை ரான்சம்வேர் (Wanna Cry ransomware) சைபர் தாக்குதலில் இதுவரை மொத்தம் 104-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியாவின் பெயரை குறிப்பிடுகிறது அமெரிக்க என்எஸ்ஏ (NSA) விமர்சனங்கள்.

இந்த ரான்சம்வேர் சைபர் தாக்குதலுக்கு பின்னால் யார் செயல்படுகிறார்கள் என்பது கேள்வி குறியாகவே இருக்கும் நிலைப்பாட்டில் இதை இவர்கள் செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உலகின் மிக ஆபத்தான ஹேக்கர்களான இவர்கள் ஊள்ளூர் பணக்காரனின் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி உலக நாடுகளின் அதிபயங்கர ரகசியங்கள் என எலாவற்றையும் பாரபட்சம் பார்க்காமல் புகுந்து விளையாடும் திறன் கொண்டவர்கள்.

#10 கேரி மெக்கின்னான் (Gary McKinnon) :

#10 கேரி மெக்கின்னான் (Gary McKinnon) :

நாசாவின் ரகசியங்களையே ஹாக் செய்து கிளப்பி விட்ட கணினி அமைப்பு நிர்வாகி..!

#09  மைக்கேல் பேவன் மற்றும் ரிசார்ட் ப்யைஸ் (Michael Bevan and Richard Pryce) :

#09 மைக்கேல் பேவன் மற்றும் ரிசார்ட் ப்யைஸ் (Michael Bevan and Richard Pryce) :

சட்டவிரோதமாக, அமெரிக்க விமானப்படை , நாசாவின் நேட்டோ சேர்ந்த அணுகல் கணினிகளை ஹாக் செய்து உலகை அதிரவிட்ட இரட்டையர்கள்.!

#08 கெவின் மிட்னிக் (Kevin Mitnick) :

#08 கெவின் மிட்னிக் (Kevin Mitnick) :

பல வகையான கணினி அமைப்புகள் மற்றும் சர்வர்களை பல ஆண்டுகளாக ஹாக் செய்து மிரட்டி கொண்டிருக்கும் எவர்கிரீன் கில்லாடி இவர்.

#07 விளாதிமிர் லெவின் (Vladimir Levin) :

#07 விளாதிமிர் லெவின் (Vladimir Levin) :

1994-ல் சிட்டி வங்கி பிணைய அணுகலை ஹாக் செய்து வங்கி கணக்குகளில் இருந்து 10 மில்லியன் டாலர்கள் வரை திருடி மாபெரும் ஹாக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர்.

#06 மைக்கேல் கல்சே (Michael Calce) :

#06 மைக்கேல் கல்சே (Michael Calce) :

இவருக்கு மாபீயா பாய் என்றொரு செல்லப்பெயரும் உண்டு. பள்ளி காலங்களில் இருந்தே மிரட்டலான பல ஹாக் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்.

#05 ஜீன்சன் ஜேம்ஸ் (Jeanson James Ancheta) :

#05 ஜீன்சன் ஜேம்ஸ் (Jeanson James Ancheta) :

சுமார் 50 ஆயிரம் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வைத்து ஒரு ஹாக் சாம்பிராஜ்யதையே நடத்திய இவரை அமெரிக்காவின் எப்பிஐ-யை தான் கைதி செய்யப்பட்டார்.

#04 அட்ரைன் லாமோ (Adrian Lamo) :

#04 அட்ரைன் லாமோ (Adrian Lamo) :

இவர் ஒரு மொபைல் ஹாக்கர் ஆவர், அதாவது ஒரு நடமாடும் ஹேக்கர் ஆவார். சின்ன சின்ன இணைய கஃபேக்கள், நூலகங்கள், இன்டர்நெட் கடைகளில் அமர்ந்து கொண்டு பெரிய பெரிய ஹாக் சம்பவங்களை நிகழ்த்துபவர்.

#03 ஓவன் வால்க்ர் (Owen Walker) :

#03 ஓவன் வால்க்ர் (Owen Walker) :

பல ஆண்டுகளாக பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஹாக் செய்து தள்ளிக் கொண்டிருக்கும் இவரைஏகில் (AKILL) என்று பிரபலமாக அழைக்கின்றனர்.

#02 ஆல்பர்ட் கோன்சலெஸ் (Albert Gonzalez) :

#02 ஆல்பர்ட் கோன்சலெஸ் (Albert Gonzalez) :

2005 - 2007 வரையிலாக நடந்த பல வகையான கிரெடிட் கார்ட் மற்றும் ஏடிஎம் எண்கள் திருட்டுக்கு இவர் தான் பொறுப்பு..!

#01 அஸ்த்ரா (Astra) :

#01 அஸ்த்ரா (Astra) :

இவரின் நிஜ பெயர் என்ன..? இவர் பார்க்க எப்படி இருப்பார் என்ற எந்தவிதமான விவரமும் கிடையாது. ஆனால் உலகின் ஆபத்தான நம்பர் ஒன் ஹாக்கர் ஆன இவர் ஒரு 58 வயதுமிக்கவர் என்ற தகவல் மட்டும் உள்ளது..!

Best Mobiles in India

Read more about:
English summary
May one of these 10 Dangerous Hackers responsible for WannaCry ransomware attack . Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X