Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சுத்தப்படாது., நம்ம வாங்கிற வேண்டியது தான்- டுவிட்டரை வாங்கும் முயற்சியில் அமெரிக்க பிரபலம்: மஸ்க் பதில்!
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை மஸ்க் தற்காலிமாக ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் அமெரிக்க ராப் பாடகரான ஸ்னூப் டாக், தான் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா ராப் பாடகரான ஸ்னூப் டாக் இதுகுறித்து டுவிட்டரில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் "ஒருவேளை தற்போது டுவிட்டர் நிறுவனத்தை வாங்கலாம்" டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிவிட்டால் டுவிட்டரின் நிர்வாக இயக்கனரை மாற்றிவிடுவேன், விமானத்தில் இலவச வைஃபை சேவையை இலவசமாக வழங்க இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக டுவிட் செய்திருக்கிறார்.
|
ஒவ்வொருவருக்கும் ப்ளூ டிக் சரிபார்ப்பு
தற்போது டுவிட்டரை வாங்கலாம், ஒவ்வொருவருக்கும் ப்ளூ டிக் சரிபார்ப்பு சின்னம் வழங்கப்படும். முதல் தொழிலாக விமாங்களில் இலவச இணையம்!!! 1 மணிநேரத்திற்கு 29 டாலர்கள் என்பது முட்டாள்தனம் என ஸ்னூப் டாக் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஸ்னூப் டாக் டுவிட்டர் பதிவுக்கு எலான் மஸ்க் ரிப்ளை செய்திருக்கிறார். அதில் எலான் மஸ்க் இரண்டு ஃபயர் (நெருப்பு) இமோஜிகளை பதிவிட்டிருக்கிறார். வரவேற்கு விதமாக இந்த டுவிட் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைப்பு
திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்திவைக்கப்படுவதாக மஸ்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள் முறையாக வழங்கப்படாமல் இருக்கும் காரணத்தால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்திருக்கிறார். ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் 5 சதவீதத்துக்கும் குறைவான பயனர்களையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தகவல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால்
மறுபுறம் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், டுவிட்டரில் பணிபுரிந்து வந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எலான் மஸ்க் உலகளாவிய செய்தியடல் தளமான டுவிட்டரின் புதிய உரிமையாளராக ஆவதற்கு தயாராக இருப்பதால், பெரும்பாலான பணியமர்த்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. டுவிட்டரின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு தலைமை தாங்கும் பொது மேலாளரான கேவோன் பெய்க்பூர், தயாரிப்புகளின் தலைவர் ப்ரூஸ் பால்க் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து டுவிட்டர் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி இடம் தெரிவித்தார்.

டுவிட்டரை வேறு பாதைக்கு கொண்டு செல்ல விருப்பம்
இதுகுறித்து கேவோன் பெய்க்பூர் பதிவிட்ட தகவல் குறித்து பார்க்கையில், கடந்த 7 ஆண்டுகளாக டுவிட்டரில் பணியாற்றி இருக்கிறேன். டுவிட்டரை விட்டு வெளியேறுவேன் என்பதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த முடிவை நான் எடுக்கவில்லை, டுவிட்டரை வேறு பாதைக்கு கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்த பராக் என்னை டுவிட்டரில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். தற்போதுவரையிலான பயணத்தில் தன்னுடைய பங்களிப்பை நினைத்து மிகவும் பெருமை அடைந்து, இதுபோன்ற விஷயங்களில் ஆறுதல் அடைகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பணியில் இருந்து அகற்றப்பட்டதாக டுவிட்
இதை தொடர்ந்து ப்ரூஸ் ஃபலாக், தனது பணியில் இருந்து அகற்றப்பட்டதாக டுவிட் செய்திருந்தார். ஆனால் இதை தொடர்ந்து அந்த டுவிட்டை நீக்கினார். இவர் டுவிட்டை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை, இருப்பினும் அவர் தனது டுவிட்டர் கணக்கில் வேலையற்றவர் அதாவது unemployed என பதிவிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனம் இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரம் முதல் வணிக முக்கிய பதவிகளை தவிர அனைத்து பணியமரத்தளையும் இடை நிறுத்தி வைத்திருக்கிறது.டுவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. 44 பில்லியன் டாலர் செலவில் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்த கையகப்படுத்தல் ஒப்பந்தமானது 2022 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086