ஆரம்பிக்கலாங்கலா., இனி டுவிட்டர் பயன்படுத்த கட்டணம்- எலான் மஸ்க் போட்ட டுவிட்!

|

டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்திய வாங்கிய எலான் மஸ்க் குறித்த தகவல் தொடர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது. அதன்படி நேற்று (மே 3) எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்று நிறுவனங்களில் நிறுவனரான எலான் மஸ்க், சமீபத்தில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

மஸ்க் பதிவிட்ட டுவிட்

இதைதொடர்ந்து நேற்று மஸ்க் பதிவிட்ட டுவிட்டில், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் அதற்கு டுவிட்டர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம்

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம்

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ள இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே எலான் மஸ்க், டுவிட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், ஐ லவ் டுவிட்டர் என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் இந்த பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர் ரிப்ளை செய்திருந்தார். அதில் பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், விலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஐந்தாண்டுக்கு முன்பு எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் தற்போது வைரலானது.

44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்கிய மஸ்க்

44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்கிய மஸ்க்

டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதை தன் வசமாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். டுவிட்டருக்கு டிமான்ட் வைத்து அதை வாங்கத் தயார் என மஸ்க் கூறினார். அதன்படி மஸ்க்கிற்கு டுவிட்ரை விற்க இயக்குனர் குழு ஒப்புக் கொண்டது. எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்க டுவிட்டர் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதன்பின் டுவிட்டரின் உரிமையாளராக தனது டுவீட்டை மஸ்க் பதிவிட்டார்.

மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள்

மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள்

அதில், எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன் ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் என மஸ்க் டுவிட் செய்தார்.டுவிட்டரை வாங்க முயற்சிக்கும் போதே மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதேபோல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதம் செய்யப்படுகின்றன, புதிய அம்சங்களுடன் டுவிட்டர் மேம்படுத்தப்படும், இதன்மூலம் டுவிட்டர் எப்போதும் இல்லாததைவிட மிகவும் சிறந்ததாக இருக்கும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல் நிறுத்தப்பட்டு சிறந்ததாக்க விரும்புகிறேன் என டுவிட் செய்திருந்தார்.

முன்னதாகவே டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய மஸ்க்

முன்னதாகவே டுவிட்டரின் பெரும் பங்குகளை வாங்கிய மஸ்க்

மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2% டுவிட்டர் பங்குகளை வாங்கி பெரும் பங்குதாரராக மாறினார். டுவிட்டர் நிறுவன தலைவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய கடிதத்தில், உலகளாவிய சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டுவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்தே முதலீடு செய்தேன், பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் முழு பங்குகளையும் வாங்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியானது, தொடர்ந்து மஸ்க் I Made an Offer என டுவிட் செய்திருந்தார்.

புதிய அம்சங்களுடன் இயங்குதளத்தை மேம்படுத்த திட்டம்

புதிய அம்சங்களுடன் இயங்குதளத்தை மேம்படுத்த திட்டம்

தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதத்தில் வாங்க தயார் எனவும் விற்பனை தொகையை பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலான் மஸ்க், புதிய அம்சங்களுடன் இயங்குதளத்தை மேம்படுத்த விரும்புவதாகவும், நம்பிக்கை அதிகரிக்கவும், ஸ்பேம் போட்களை தோற்கடிக்கவும் நம்பகமான தளமாக டுவிட்டரை மாற்ற விரும்புவதாக மஸ்க் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
May Be Slight Cost For these Twitter Users: Elon Musk Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X