பணத்தாசை காட்டி 8000 பேரிடம் ரூ.2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?

பிட்காயின்கள் முதன்முதலாக அறிமுகமானபோது, அதன் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தது அதன் பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.

|

பிட்காயின்கள் முதன்முதலாக அறிமுகமானபோது, அதன் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தது அதன் பிளாக்செயின் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பமானது துளிக்கூட பாதுகாப்பானது இல்லை என்று கருதப்படும் டிஜிட்டல் (மற்றும் ஆன்லைன்) உலகில், நாணயத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது. அதனாலாயே எந்தவிதமான டிஜிட்டல் (மற்றும் ஆன்லைன்) வர்த்தகத்தை விடவும் பிட்காயின் மேலான மோகம் அதிகரித்தது.

பணத்தாசை காட்டி 8000 பேரிடம் 2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?

அம்மாதிரியான மோகத்தின் விளைவாக தான் இந்தியர் ஒருவர் சுமார் 8,000 க்கும் அதிகமான மக்களை ஏமாற்றி, சுமார் 2,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, பாங்காக்கில் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். யார் இந்த அமித் பரத்வாஜ்.? தனது சொந்த பிட்கான் மைனிங் நடவடிக்கை வழியாக எவ்வாறு மோசடி செய்தார்.? இதுபோன்ற மோசடிகள் வேறெங்கெலாம் நடந்துள்ளது.?

முன்னாள் அரசாங்க ஊழியரான மகனான அமித் பரத்வாஜ், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சாப்ட்வேர் டெவலப்பரும் மற்றும் ஒரு ஸ்டார்க் புரோக்கரும் ஆவார். பிட்காயின் முதலீட்டில் இறங்கிய அமித் பரத்வாஜின் திட்டத்தின் கீழ், அவரிடம் ஒரு பிட்காயின் வாங்கும் ஒரு முதலீட்டாளர், அடுத்த ஒன்றரை ஆண்டிற்குள் 10 சதவிகித கூடுதல் மதிப்பை பெறுவர் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட 18 மாத காலத்தின் முடிவில், ஒரு முதலீட்டாளரின் வழியாக முதலீடு செய்யப்பட்ட மதிப்பானது கிட்டத்தட்ட இரு மடங்காக திரும்ப பெறப்படும் என்று அர்த்தம்.

ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை அமித் பாரத்வாஜ் காப்பாற்றவில்லை. பிட்காயின்களின் விலையேற்றம் உச்சத்தை தொட்டு, அது முதலீட்டாளர்களுக்கு மகத்தான வருவாயைப் கொடுக்கவும், பாரத்வாஜ் தனது மோசடி விளையாட்டை அரங்கேற்றினார். பிட்காயின்கள் பிரபலமடைந்தது, அவற்றின் மதிப்பு உச்சமடைந்தது, முதலீட்டாளர்களுக்கு 10 மடங்கு வருவாயை திரும்ப கொடுக்க வேண்டும் என்கிற நிலை உருவாகவும், அதை தவிர்த்து அமித் பாரத்வாஜ் பல முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார்.

பணத்தாசை காட்டி 8000 பேரிடம் 2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?

இதுபோன்ற க்ரிப்டோகரன்ஸி மோசடிகள் நடப்பதொன்றும் புதிதல்ல. பிட்காயின்களை ஹேக்கிங் செய்வது, பேமண்ட் ப்ராசஸிங் சிக்கல்கள், அரசாங்க விசாரணை, போலியான வங்கி, போலி ப்ராஜெக்ட் ஆன பிட்காயின் கோல்ட், போலி ஐசிஓ (இனிஷியல் காயின் ஆபரிங்) வழங்குவது, உட்பட உலகை உலுக்கிய பல மோசமான பிட்காயின் ஊழல்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Mastermind of 300 Mn dollars worth Bitcoin scam Amit Bhardwaj arrested in Bangkok . Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X