பூமியை தாக்கும் அதீத சூரிய புயல்- செயற்கைக்கோள், இணையம் பாதிக்கும்?- மனிதர்களுக்கு ஆபத்து இருக்கா?

|

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வலுவான சூரிய ஒளியால் ஏற்படும் மிகப்பெரிய புவிகாந்த புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய ஒளியானது மின் தொடர்புகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள்களை பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நியூயார்க்கின் வடக்கு பகுதியில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியை தாக்கும் சூரியப் புயல்

பூமியை தாக்கும் சூரியப் புயல்

பூமியை தாக்கும் சூரியப் புயல் பெரும் இடையூறை ஏற்படுத்தக்கூடும். நிபுணர்கள் தகவலின்படி, 93 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சூரியனின் பிரகாசம் அதிகரித்ததன் காரணமாக திடீர் ஃப்ளாஷின் சாத்தியமான விளைவுகளை பூமியில் இருந்து உணர முடியும். இது ஆபத்தானதா என கேள்விகள் வரும் பட்சத்தில் இதுகுறித்து நாசாவின் கருத்துப்படி, சூரிய கதிர்கள் சிக்கல், மறுசீரமைப்பிற்கு அருகில் உள்ள காந்தப்புல கோடுகளையும் தாண்டி தீவிர கதிர்வீச்சுகள் உடன் வரும்.

சிஎம்இ என குறிப்பிடப்படுகிறது

இதை சுருக்குமாக சிஎம்இ என குறிப்பிடப்படுகிறது. சிஎம்இ-கள் என்பது சூரியனில் இருந்து வரும் பெரிய கதிர்வீச்சு மற்றும் துகள்களை குறிக்கிறது. சூரியனின் காந்தப்புலக் கோடுகள் திடீரென மறுசீரமைக்கப்படும் போது மிக அதிவேகத்தில் விண்வெளியில் தாக்கம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்கம் பூமியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

அதிக கதிர்வீச்சுகள் வெளியிடும் சூரிய ஒளிகள்

அதிக கதிர்வீச்சுகள் வெளியிடும் சூரிய ஒளிகள்

சூரிய ஒளிகள் அதிக கதிர்வீச்சுகள் வெளியிடும் என்றாலும் இந்த நிகழ்வின் மூலம் பூமியின் மேற்பரப்பில் மனிதர்களுக்கு ஆபத்தானதாக இருக்கிறது என கூறப்படுகிறது. புவிகாந்த புயலால் செயற்கைக்கோள்கள் தொழில்நுட்ப தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இருப்பினும் மனிதர்களுக்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. முன்னதாக 1989 ஆம் ஆண்டில், ஒரு வலுவான சூரிய வெடிப்பாக இருந்தது கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஒன்பது மணிநேரம் மின்சாரம் இழக்கச் செய்தது.

ஏ, பி, சி, எம் அல்லது எக்ஸ் என வகைப்படுத்தப்படும் பிரகாசம்

ஏ, பி, சி, எம் அல்லது எக்ஸ் என வகைப்படுத்தப்படும் பிரகாசம்

சூரிய வெளிச்சங்கள் அவற்றின் எக்ஸ்ரே பிரகாசத்தின் அடிப்படையில் ஏ, பி, சி, எம் அல்லது எக்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. ஏ என்பது சிறியது எக்ஸ் என்பது மிகப் பெரியதாக வகைப்படுத்தப்படுகிறது. தற்போது சூரிய ஒளியை குறிப்பிட்ட நேரத்தை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் இது இன்று மாலை வரை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி இது தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பூமியைத் தாக்கும் போது ஏற்படும் விபத்துகள்

பூமியைத் தாக்கும் போது ஏற்படும் விபத்துகள்

முன்னதாக சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஜிபிஎஸ் மற்றும் மொபைல் சிக்னல்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. சூரியனின் வளிமண்டலத்திலிருந்து தோன்றிய இந்த சூரிய புயல், பூமியின் காந்தப்புலத்தால் ஆதிக்கம் செலுத்தும் விண்வெளிப் பகுதியில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பெரிய சூரிய புயல் பூமியை நெருங்கி, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிளாக் அவுட் என்பது தற்காலிகமான செயலிழப்பு

பிளாக் அவுட் என்பது தற்காலிகமான செயலிழப்பு

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி அதிவேகமாக நகர்கிறது என்று நாசா கண்டுபிடித்தது. அமெரிக்காவின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, சூரிய ஒளியின் தாக்கம் பூமியின் துணை சூரிய ஒளி பக்கத்தில் இருக்கும் சூரிய புள்ளியை மையமாகக் கொண்ட இடங்களின் நேரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. உயர் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்பு சாதனங்களை இது பிளாக் அவுட் (blackout) செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பிளாக் அவுட் என்பது தற்காலிகமான செயலிழப்பு என்பது பொருள். சூரிய புயலினால் தகவல் தொடர்பு சாதனங்கள் தற்காலிக செயலிழப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது.

மின் கட்டங்களையும் பாதிக்க அதிக வாய்ப்பு

மின் கட்டங்களையும் பாதிக்க அதிக வாய்ப்பு

சூரிய புயல் எரிப்பு காரணமாக சில இடங்களில் இது பவர் க்ரிடஸ்களான (Power Grids) மின் கட்டங்களையும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதினால், பெரும்பாலான சூரிய புயல்கள் உண்மையில் மனித உடலில் அல்லது நம் வாழ்க்கையை எந்த வகையிலும் நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை.

Best Mobiles in India

English summary
Massive Solar Storm Hits Earth: Damage on Spacecraft or Earth Based Communications Systems

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X