பூமியை நோக்கி வரும் சூரிய புயல்.. ஜிபிஎஸ், மொபைல் சிக்னல் பாதிக்கும்.. நாசா எச்சரிக்கை..
நாசாவின் கூற்றுப்படி, பூமியை இன்று ஒரு சூரிய புயல் தாக்கவுள்ளது. இந்த சூரிய புயலானது மணிக்கு 1.6 மில்லியன் கிமீ வேகத்தில் பூமியை நோக்கிப் பயணிக்கிறது என்றும், மேலும் இதன் வேகம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று நாசா கூறியுள்ளது. இந்த சூரிய புயல் பூமியைத் தாக்கும் பொழுது ஜிபிஎஸ் மற்றும் மொபைல் சிக்னல்கள் பாதிக்கப்படும் என்று நாசா எச்சரிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெரிய சூரிய புயல் பூமியை நெருங்குகிறதா? நாசா என்ன சொல்கிறது?
சூரியனின் வளிமண்டலத்திலிருந்து தோன்றிய இந்த சூரிய புயல், பூமியின் காந்தப்புலத்தால் ஆதிக்கம் செலுத்தும் விண்வெளிப் பகுதியில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய சூரிய புயல் பூமியை நெருங்கி, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியை நோக்கி அதிவேகமாக நகரும் பெரிய சூரிய புயல்
ஜூலை 3 ஆம் தேதி ஒரு பெரிய சூரிய விரிவடைதல் நிகழ்வு கண்டறியப்பட்டது. இது பூமியின் வளிமண்டலத்தை நோக்கி அதிவேகமாக நகர்கிறது என்று நாசா கண்டுபிடித்தது.அமெரிக்காவின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, சூரிய ஒளியின் தாக்கம் பூமியின் துணை சூரிய ஒளி பக்கத்தில் இருக்கும் சூரிய புள்ளியை மையமாகக் கொண்ட இடங்களின் நேரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய புயலினால் பூமியில் பிளாக் அவுட் ஏற்படுமா?
தற்போதைய எக்ஸ்ரே ஃப்ளக்ஸ் தீவிரத்தைச் சார்ந்து இது இருக்கும் என்றும், உயர் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்பு சாதனங்களை இது பிளாக் அவுட் (blackout) செய்வதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது என்று நாசா கூறியுள்ளது. பிளாக் அவுட் என்றால் என்ன? பிளாக் அவுட் என்பது தற்காலிகமான செயலிழப்பு என்பது பொருள். சூரிய புயலினால் தகவல் தொடர்பு சாதனங்கள் தற்காலிக செயலிழப்பை சந்திக்கும்.

ஜிபிஎஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் சிக்னல்கள் பாதிப்படையுமா?
சமீபத்திய கணிப்பின்படி, இந்த சூரிய புகழ் விரிவடைதல் ஒரு மணிநேரத்திற்கு உயர் அதிர்வெண் வானொலி தகவல்தொடர்புகளின் பரந்த பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் ஜிபிஎஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் சிக்னல்கள் பிளாக் அவுட் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் X1 மட்டத்தில் சூரிய புயல் எரிப்புகளைக் குறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 1.6 மில்லியன் கிமீ வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கும் சூரிய புயல்
நாசாவின் கூற்றுப்படி, சூரிய புயல் மணிக்கு 1.6 மில்லியன் கிமீ வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. மேலும், இதன் வேகம் இன்னும் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது. பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள செயற்கைக்கோள்களும் உள் வரும் எரிப்புகளால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜி.பி.எஸ், மொபைல் போன் சிக்னல் மற்றும் செயற்கைக்கோள் டிவியை நேரடியாக பாதிக்கும்.

சூரிய புயலினால் ஏற்படும் ஒரே நல்ல நிகழ்வு இது தான்
சூரிய புயல் எரிப்பு காரணமாக சில இடங்களில் இது பவர் க்ரிடஸ்களான (Power Grids) மின் கட்டங்களையும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த தாக்குதலின் நேர்மறையான பக்கத்தில் இருந்து பார்த்தால், சூரிய புயல் காரணமாக வடக்கு அல்லது தென் துருவத்தில் அரோரா லைட்டின் பெருக்கப்பட்ட காட்சியை மக்கள் கண்டு ரசிக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.

சூரிய புயலினால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
துருவங்களுக்கு அருகில் வாழும் மக்கள் இந்த அற்புத கட்சியைக் கண்டு ரசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூரிய புயலினால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? நாசா வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த சூரிய புயலானது எக்ஸ் 1 அளவில் இருப்பதனால், மனிதர்களுக்குப் பெரிய அளவில் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று நம்பப்படுகிறது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதினால், பெரும்பாலான சூரிய புயல்கள் உண்மையில் மனித உடலில் அல்லது நம் வாழ்க்கையை எந்த வகையிலும் நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை.


Click it and Unblock the Notifications