Home
News

Apple-ன் ஆட்டம் ஆரம்பம்.. புதுசு அறிமுகமான வேகத்தில் பழைய MacBook மாடல் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே, ஆப்பிள் (Apple) நிறுவனமானது அதன் உலகளாவிய டெவெலப்பர்கள் மாநாட்டின் (Worldwide Developers Conference - WWDC 2023) போது, புதிய 15-இன்ச் எம்2 மேக்புக் ஏர் (15-inch M2 MacBook Air) மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது.

புதிய மேக்புக் ஏர் மாடல் அறிமுகமான அதே நிகழ்வில், அப்பிளின் சற்றே பழைய 13 இன்ச் எம்2 மேக்புக் ஏர் (13-inch M2 MacBook Air) மாடலின் மீதான மிகப்பெரிய விலைக்குறைப்பும் (Massive PriceCut) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் 13 இன்ச் எம்1 மேக்புக் ஏர் (13-inch M1 MacBook Air) மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுசு அறிமுகமான வேகத்தில் பழைய Apple MacBook மீது விலைக்குறைப்பு!

ஆப்பிள் 13 இன்ச்எம் 2 மேக்புக் ஏர் மாடலின் புதிய விலை: ஆப்பிள் 13 இன்ச் எம்2 மேக்புக் ஏர் மாடலானது மொத்தம் 2 ஸ்டோரேஜ் வகைகளில் (Storage Options) வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இதன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் மீதுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5000 என்கிற விலை வீழ்ச்சிக்கு பின்னர், எம்2 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ. 1,14,900 ஆகவும், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,44,900 ஆகவும் குறைந்துள்ளது,

நினைவூட்டும் வண்ணம் முன்னதாக, இவற்றின் விலை நிர்ணயம் முறையே ரூ.1,19,900 மற்றும் ரூ.1,49,900 ஆக இருந்தது. மேலும், முன்னரே குறிப்பிட்டபடி. ஆப்பிள் மேக்புக் எம்1 மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய சந்தையில் இது தொடர்ந்து ரூ.99,900 க்கு விற்பனை செய்யப்படும்.

நாம் மேற்கண்ட பழைய விலைகள் மற்றும் புதிய விலைகள் எல்லாமே ஆப்பிளின் அதிகாரப்பூர்வ விலைகள் ஆகும். அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற இ-காமர்ஸ் தளங்களில் அல்லது சிறப்பு விற்பனை காலங்களின் (Special Sale Days) போது இவற்றின் விலைகள் இன்னும் குறைக்கப்படலாம்.

புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலின் விலை என்ன? இது உலகின் சிறந்த 15 இன்ச் லேப்டாப்களில் (Best 15-inch laptop in the world) ஒன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; மேலும் இது உலகின் மிக மெல்லிய 15 இன்ச் நோட்புக் (World's thinnest 15-inch notebook) மாடலும் கூட. இது அளவீட்டில் 11.5 மிமீ தடிமனும், எடையில் 1.49 கிலோவும் உள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலின் விலை ரூ.1,34,900 ஆகும்; இது ஜூன் 13 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். புதிய மேக்புக் ஏர் மாடலுடன் சேர்த்து இந்நிறுவனம் ஒரு புதிய மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் ப்ரோ (Mac Pro) மாடலையும் டபுள்யூடபுள்யூடிசி 2023 (WWDC 2023) நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Massive Price Cut on 13 inch M2 MacBook Air After Apple Launch New 15 inch M2 MacBook Air in WWDC 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X