நாய்க்குட்டி சைசில் கண்டுபிடிக்கப்பட்ட கடல் வண்டு! ஆழ்கடலில் சிக்கிய புதிய உயிரினம் இது தான்!

|

கடலின் அடிப்பகுதியில் பல வகையான உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன, அவற்றில் கிரஸ்ட்டசான்ஸ் crustaceans பிரிவை சேர்ந்த ஒரு வகை உயிரினம் தான் இந்த கடல் வண்டு. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினத்தின் மிகப் பெரிய அளவிலான கடல் வண்டை அண்மையில் ஒரு மீனவர் இந்தோனேஷிய கடல் பகுதியில் பிடித்துள்ளார். இது ஒரு நாய்க்குட்டியைப் போன்று பெரியதாக இருந்துள்ளது. இதுவரை யாரும் கண்டிராத மிகப்பெரிய கடல் வண்டு இதுவாகும்.

ஆழ்கடலில் சிக்கிய ராட்சஸ கடல் வண்டு

ஆழ்கடலில் சிக்கிய ராட்சஸ கடல் வண்டு

ஓட்டு உடல் உடன் இருக்கும் கடல் வண்டுகளும் ஒரு வகையில் மீன்கள் போல தான் உயிர் வாழ்கின்றன, இவற்றை ஐசோபாட்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஐசோபாட் வரிசையின் கீழ் சுமார் 10,000திற்கும் அதிகமான இனங்கள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது. இவை நிலத்திலும் கடலிலும் மாறுபட்ட வாழ்விடங்களில் வாழ்கின்றன, மேலும் இவை ஒரு சில மில்லிமீட்டரிலிருந்து கிட்டத்தட்ட 20 அங்குலங்கள் (500 மிமீ) நீளம் வரை வளரக்கூடியவை.

பாத்தினோமஸ் ராக்சஸா

பாத்தினோமஸ் ராக்சஸா

கடலில் வசிக்கும் ஐசோபாட்களில், இவற்றை பாத்தினோமஸ் இனம் என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இதன் உண்மை பெயர் பாத்தினோமஸ் ராக்சஸா (Bathynomus raksasa) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவற்றிலும் மிகப்பெரிய இனங்கள் உள்ளன என்பது இப்பொழுது தான் தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் புதிய வகை ஐசோபாட் பாத்தினோமஸ் இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் நீளம் எவ்வளவு தெரியுமா?

இதன் நீளம் எவ்வளவு தெரியுமா?

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெரிய சைஸ் பாத்தினோமஸ் ராக்சஸாவின் நீளம் 13 அங்குலம் (330 மிமீ) ஆகும். இதன் பெயரில் உள்ள "raksasa" என்பது இந்தோனேஷியன் சொல்லாகும். இதற்குப் பொருள் "ஜெயிண்ட்" என்று கூறப்படுகிறது.

புதிய மாபெரும் ஐசோபாட்

புதிய மாபெரும் ஐசோபாட்

இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவரிக்கப்பட்ட முதல் புதிய மாபெரும் ஐசோபாட் இனங்கள் ஆகும், மேலும் இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள நீரில் காணப்படும் இந்த ஐசோபாட் பாத்தினோமஸ்களில் இதுவே முதல் ஜெயிண்ட் பாத்தினோமஸ் என்று விஞ்ஞானிகள் திகைப்புடன் தெரிவித்துள்ளனர்.

உடல் மற்றும் உருவம்

உடல் மற்றும் உருவம்

பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் பாத்தினோமஸ் அனைத்தும் நான்கு செட் தாடைகள், இரண்டு கலவை கண்கள், இரண்டு செட் ஆண்டெனாக்கள் மற்றும் ஏழு பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரிக்கப்பட்ட உடல், ஒவ்வொன்றும் அதன் சொந்த ஜோடி கால்களுடன் பல அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூப்பர்ஜெயிண்ட்ஸ் பாத்தினோமஸ்

சூப்பர்ஜெயிண்ட்ஸ் பாத்தினோமஸ்

முன்னர் விவரிக்கப்பட்ட 16 பாத்தினோமஸ் இனங்களில், ஏழு பாத்தினோமஸ் வகை "சூப்பர்ஜெயிண்ட்ஸ்" என்று கருதப்படுகின்றது. இவை 6 அங்குலங்கள் (150 மிமீ) நீளத்திலிருந்து முதிர்ச்சியடைந்து பின்னர் 12 அங்குலங்கள் (300 மிமீ) அல்லது அதற்கு மேற்பட்டதாக வளரும் என்று ஜூலை மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவு படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியை விட ஆபத்தானது ஆழ்கடல்

விண்வெளியை விட ஆபத்தானது ஆழ்கடல்

ஜாவாவின் தெற்கு கடற்கரையிலிருந்து 3,117 முதல் 4,134 அடி (950 மற்றும் 1,260 மீட்டர்) கடல் ஆழத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மனிதனுக்கு தெரியாத பல புதிய விஷயங்கள் மற்றும் மர்மங்கள் ஆழ்கடலில் ஒளிந்துள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். விண்வெளியை விட ஆபத்தானது ஆழ்கடல் தான் என்றும் கூறியுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Massive 'Darth Vader' Sea Bug Pulled From Waters Near Indonesia : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X