Home
News

ரூ.9,999 க்கு மார்ட்டியன் நோட்டிஃபயர் ஸ்மார்ட் வாட்ச், நீங்க வாங்கிட்டீங்களா

By Meganathan

அமெரிக்காவை சார்ந்த வாட்ச் நிறுவனம் மார்ட்டியன் இந்தியாவின் இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்பகார்ட்டுடன் இணைந்து மார்ட்டியன் நோட்டிஃபயர் ஸ்மார்ட் வாட்ச் வகைகளை இந்தியாவில் ரூ.9,999 க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ரூ.9,999 க்கு மார்ட்டியன் நோட்டிஃபயர் ஸ்மார்ட் வாட்ச்

ப்ளிப்கார்ட்டில் மார்ட்டியன் ஸ்மார்ட் வாட்ச்களின் முன்பதிவு துவங்கிய நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 4.0 வசதி கொண்டுள்ள மார்ட்டியன் நோட்டிஃபயர் ஸ்மார்ட் வாட்ச் ஏறதாழ 1000 ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் அபிளிகேஷன்களில் இருந்து நோட்டிஃபிக்கேஷன்களை பெற முடியும். இதில் பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஸ்கைப், வாட்ஸ் அப், லின்க்டு இன் மற்றும் பல அப்ளிகேஷன்களில் இருந்தும் நோட்டிஃபிகேஷன்களை பெறும்.

ஆப் நோட்டிஃபிக்கேஷன்களை ஸ்மார்ட் வாட்சின் 96*16 பிக்சல் கிராபிக் ஓஎல்ஈடி டிஸ்ப்ளேவில் பார்க்க முடியும். நோட்டிஃபிக்கேஷன்களை நிராகரிக்க மார்ட்டியன் ஸ்மார்ட் வாட்சின் கண்னாடியை தொட்டாலே போதுமானது. இது தவிர பயனாளர்கள் நோட்டிஃபிக்கேஷன் வரலாறையும் பார்க்க முடியும் என்பதோடு ஸ்மார்ட் வாட்சுடன் இணைக்கப்பட்ட போனின் கேமரா ஷட்டரை டைமர் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும். மேலும் இதில் அலாறம், அலெர்ட்கள் டிஜிட்டல் டைம் டிஸ்ப்ளே மற்றும் வானிலை அறிக்கைகளையும் அறிந்து கொள்ளலாம்.

எல்லா நோட்டிஃபிக்கேஷன்களையும் பார்ப்பதற்கு பதில் ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் வெவ்வேறு விதமான வைப்ரேஷன்களை மார்ட்டியன் நோட்டிஃபையர் ஆப் மூலம் வைத்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை ஆன்டிராய்டு, ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X