Home
News

Rolex சூர்யா கையில் இருந்த அந்த Marshall ஸ்பீக்கர் இந்தியாவில் விற்பனை! விலை இவ்வளவு-ஆ?

கமல் ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ரோல்ஸ் என்ற கதாபாத்திரத்தின் கையில் கெத்தாக வளம் வரும் Marshall ப்ளூடூத் ஸ்பீக்கர், இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. ஆம், மக்களே.. Marshall Middleton ப்ளூடூத் ஸ்பீக்கரின் விற்பனை இந்தியாவில் துவங்கிவிட்டது.

மார்ஷல் நிறுவனம் இந்தியாவில் அதன் மார்ஷல் மிடில்டன் என்ற புதிய புளூடூத் போர்ட்டபிள் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Marshall Middleton ஸ்பீக்கர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்திய சந்தைக்கு வந்துள்ளது. இது IP67 மதிப்பிடப்பட்ட அம்சத்துடன் வருகிறது. இதில் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற அம்சமும் உள்ளது.

Rolex சூர்யா கையில் இருந்த அந்த Marshall ஸ்பீக்கர் இந்தியாவில் விற்பனை

மார்ஷலின் புதிய போர்ட்டபிள் Marshall Middleton ஸ்பீக்கரில் IP67 தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பு உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது 55% சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மென்மையான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. இதில் PVC இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீசைக்கிளிங் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டதால் இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக அமைகிறது. மியூசிக் பிளேபேக்கை கட்டுப்படுத்த ஸ்பீக்கர் மேல பட்டன்களை கொண்டுள்ளது.

Marshall Middleton ஸ்பீக்கர் கேரி ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதன் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த Marshall Middleton ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனம் இரண்டு 15W வூஃபர்கள், இரண்டு 10W ட்வீட்டர்கள் மற்றும் சரவுண்ட் சவுண்ட் விளைவுக்கான இரண்டு ரேடியேட்டர்கள் உள்ளிட்ட குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வால்யூம் அளவைப் பொறுத்து ஒலியின் தொனியை மாற்றும் டைனமிக் லவுட்னஸ் அம்சத்தைப் பெறுகிறது.

Marshall Middleton புளூடூத் ஸ்பீக்கர் ட்ரூ ஸ்டீரியோஃபோனிக் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது பல திசைகளில் சவுண்டை துல்லியமாக பரப்பும் ஸ்டீரியோ சவுண்ட் அம்சத்தின் வகையாகும். இது ஸ்பெட்டியல் ஆடியோ மற்றும் பைனரல் ஒலியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், ஸ்டாக் மோட் அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் ஒரு Marshall Middleton சாதனத்துடன் பல ப்ளூடூத் ஸ்பீக்கர்களை இணைக்கலாம்.

Rolex சூர்யா கையில் இருந்த அந்த Marshall ஸ்பீக்கர் இந்தியாவில் விற்பனை

இதன் மூலம் ஒரே இசையை அல்லது பாடலை பல சாதனங்களில் ஒன்றாக உயர்ந்த வால்யூம் உடன் கேட்டு மகிழலாம். மார்ஷல் மிடில்டன் 20 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் இது 20 நிமிட சார்ஜ் உடன் 2 மணிநேரம் வரை தடையில்லாமல் பிளே செய்யும் பிளே பேக் நேரத்தை கொண்டுள்ளதாம். முன்பே சொன்னது போல, இதில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளீடும் உள்ளது.

USB-C போர்ட் வழியாக மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யவும் இந்த ஸ்பீக்கரைப் பயன்படுத்தலாம். ஆம், பவர் பேங்க் சாதனம் போலவும் இந்த ஸ்பீக்கரை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மார்ஷல் மிடில்டன் புளூடூத் போர்ட்டபிள் ஸ்பீக்கரின் விலை ரூ.31,999 ஆகும். ஆம், அம்மாடி என்று வியக்கும் அளவில் தான் இதன் விலை அமைந்துள்ளது. இது பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Marshall Middleton Bluetooth Speaker launched in India At Rs 31999 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X