Just In
- 38 min ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 51 min ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 1 hr ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
- 2 hrs ago
53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?
Don't Miss
- News
கொஞ்சம் பொறுங்கள்.. ரேஷன் கடைகள் எல்லாம் மாடர்ன் கடைகளாக மாறும்..! அடித்து சொல்லும் ராதாகிருஷ்ணன்
- Movies
சூஃபி நடனத்தை வரைந்த பிரபல ஓவியர்.. புகைப்படத்தை திருப்பி பார்த்தால்.. ஓவியத்தை பகிர்ந்த இசைப்புயல்!
- Lifestyle
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- Automobiles
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
- Sports
தரமான சம்பவம் வெயிட்டிங்.. பாண்ட்யா கையில் கிடைத்த 2 பெரும் ஆயுதங்கள்.. அதிர்ந்த அயர்லாந்து அணி!
- Finance
மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. என்பிஎஸ் திட்டத்தில் எப்படி பெறுவது?
- Travel
மன்றோ தீவு ஏன் சமீபகாலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?
நீங்கள் வரலாற்றை நம்பும் பட்சத்தில், 1610-இல் தொலைநோக்கி மூலம் செவ்வாய் கிரகத்தை (Mars) முதன்முதலில் "கவனித்தவர்" கலிலியோ கலிலி ஆவார்.
ஒருவேளை நீங்கள் சோதிடம் மற்றும் அறிவியலை நம்பும் பட்சத்தில், செவ்வாய் கிரகம் அதற்கும் முன்பே கூட கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம்.

அதெப்படி?
இரவு நேர வானத்தில் மின்னும் அதன் "உடன்பிறப்புகளிலிருந்து" செவ்வாய் கிரகம் மட்டும் - சிவப்பு நிற சாயலில் - தனித்து நிற்பதால், அது மனிதர்களின் கவனத்தை "எப்போதோ" ஈர்த்து இருந்திருக்கலாம்; யாருக்கு தெரியும்!?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை - கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரையிலாக, செவ்வாய் கிரகம் மனிதர்களை ஒருபோதும் வசீகரிக்க தவறியதில்லை; தன்னை மேன்மேலும் ஆராயும் படி, நெருங்கி வரும்படி தூண்டத் தவறியதில்லை!

அதுபோன்றதொரு தூண்டலில் உருவானது தான் - மார்சிஸ்!
மார்சிஸ் (MARSIS), அதாவது மார்ஸ் அட்வான்ஸ்டு ரேடார் ஃபார் சப்சர்பேஸ் அன்ட் அயனோஸ்பிரிக் சவுண்டிங் (Mars Advanced Radar for Subsurface and Ionospheric Sounding) என்பதின் சுருக்கமே - மார்சிஸ் ஆகும். இந்த வார்த்தையின் விரிவாக்கமே உங்களுக்கு பாதி "மேட்டரை" புரிய வைத்து இருக்கும்.
ஆம்! செவ்வாய் கிரகத்தில் திரவ நீரின் அறிகுறிகளைத் தேடுவதற்கும், கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு ஆர்பிட்டர் தான் - மார்சிஸ்.
Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

19 ஆண்டுகளுக்கு பிறகு ஓஎஸ் அப்டேட்!
மார்சிஸ், இத்தாலியின் Istituto Nazionale di Astrofisica (INAF) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதற்கான முழுமையான நிதி, இத்தாலிய விண்வெளி ஏஜென்சி (ASI) மூலம் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தான், சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு, மார்சிஸ் ஆனது விண்டோஸ் 98 ஓஎஸ்-இல் இருந்து "விடுதலை" பெறுகிறது. அதாவது மார்சிஸ் புதிய ஓஎஸ் அப்டேட்டை பெறுகிறது.

அப்போ.. விண்டோஸ் 98-ஐ வச்சி தான் இவ்ளோ நாள் ஆராய்ச்சி செஞ்சாங்களா?
அப்படி பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. ஆனால், சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு மேம்பாட்டு சூழலை (development environment) பயன்படுத்தி தான் மார்சிஸ் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டது என்று கூறலாம்.
பல தசாப்தங்களாக பலனளிக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், செவ்வாய் கிரகத்தை பற்றிய நல்ல புரிதலுக்கும் வழிவகுத்த மார்சிஸ், 19 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக 2003 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

இந்த புதிய ஓஎஸ் அப்டேட், செவ்வாய் கிரக ஆராச்சியின் எல்லைகளை நீட்டிக்குமா?
கண்டிப்பாக! ஐஎன்ஏஎஃப் குழுவும், கார்லோவும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த புதிய சாப்ட்வெர் ஆனது பூமிக்கு அனுப்பப்படும் சயின்ஸ் டேட்டாவின் (Science data) அளவு மற்றும் தரத்தை அதிகரிக்க, சிக்னல் ரிசெப்ஷன் மற்றும் ஆன்-போர்டு டேட்டா ப்ராசஸிங்கை மேம்படுத்தும் தொடர்ச்சியான அப்டேட்களை வழங்கும்.
மேலும் இந்த ஓஎஸ் அப்டேட்டின் கீழ், ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தேவையில்லாத டேட்டாவை நிராகரிப்பதன் மூலம், மார்சிஸ்-ஐ கொண்டு முன்னெப்போனதை விடவும் மிகப்பெரிய பகுதியை கூட ஆராய முடியுமாம்.

மார்சிஸ் எப்படி வேலை? எப்படி செவ்வாய் கிரகத்தின் நீர் ஆதாரங்களை கண்டுபிடிக்கும்?
மார்சிஸ், அதன் 40-மீட்டர் நீளமான ஆண்டெனாவை பயன்படுத்தி லோ ப்ரீக்வென்சி ரேடியோ அலைகளை (low-frequency radio waves) செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பும்.
இந்த அலைகளில் பெரும்பாலானவை கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும், ஆனால் குறிப்பிடத்தக்க அளவிலான அலைகள், செவ்வாய் கிரகத்தின் மேலோடு (crust) வழியாக பயணித்து பனி, மண், பாறை மற்றும் நீர் உட்பட மேற்பரப்புக்கு கீழே உள்ள பல்வேறு பொருட்களின் அடுக்குகளுக்கு இடையே உள்ள எல்லைகளை பிரதிபலிக்கும்.

பிரதிபலிப்பும் அதன் வழியிலான ஆராய்ச்சியும்!
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழே இருந்து பிரதிபலித்த சமிக்ஞைகளை (signal) ஆய்வு செய்வதன் மூலம், விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள கட்டமைப்பை சில கிலோமீட்டர் ஆழத்திற்கு வரைபடமாக்கலாம்.
அதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் துருவ பனி முகடுகளின் (polar ice caps) தடிமன் மற்றும் கலவை, எரிமலை மற்றும் படிவு பாறை அடுக்குகளின் பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்யலாம்.
இப்படித்தான், மார்சிஸ் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை சுற்றி-சுற்றி மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறது; இன்னும் பணியாற்ற போகிறது!
Photo Courtesy: ESA (European Space Agency), Microsoft
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999