திரைப்படம் மாதிரி இருக்கு: செவ்வாய் கிரகத்தில் செயலிழந்து வரும் விண்கலம்- மீட்கப் போராடும் நாசா!

|

உலக நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்றும், அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி

செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி

1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு. அதன்படி தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்படித்து அனுப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்பட்ட ரோவர்

செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்பட்ட ரோவர்

செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்பட்ட ரோவர் உடன் சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் விண்கலம் ஈடுபட்டு வருகிறது. இந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி எனப்படும் சிறிய ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

அதிநவீன சிறிய ஹெலிகாப்டர்

அதிநவீன சிறிய ஹெலிகாப்டர்

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டது. மேலும் இன்ஜெனூட்டி என இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் அழைகப்படும். வரலாற்றில் முதல்முறையாத பூமிக்கு வெளியே ஹெலிகாப்டர் பறக்க வைக்கப்படுகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் வயிற்றுப்பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டர் பொருத்தப்பட்டிருந்தது. சிறியரக ஹெலிகாப்டர் முன்னதாகவே பறக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த திட்டத்தை நாசா ஒத்தி வைத்தது.

கடும் குளிரை சமாளிப்பதே சவால்

கடும் குளிரை சமாளிப்பதே சவால்

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், கடும் குளிரை சமாளிப்பதே இதன் அடுத்த இலக்காக இருக்கும் என கூறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் -90 டிகிரி வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

விண்கலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக தகவல்

விண்கலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருவதாக தகவல்

செவ்வாய் கிரகத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் மோசமான வானிலை காரணமாக அந்த விண்கலம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் ஏற்பட்டு வரும் புழுதிப்புயல் காரணமாக விண்கலத்தின் பல பகுதிகளில் தூசி நிறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் பேனல் சூரிய ஒளியை பெற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

சூரிய ஒளியை பெற முடியாத நிலை

சூரிய ஒளியை பெற முடியாத நிலை

சூரிய ஒளியை பெற முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டால் வரும் காலங்களில் லேண்டர் செயலற்று போகும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த நிலையை தடுக்கும் நடவடிக்கையாக பேட்டரி செயல்திறனை தக்க வைத்துக் கொள்ள நாசா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் ஒருபகுதியாக லேண்டரில் பல பகுதிகளை செயலற்ற நிலையில் வைக்க நாசா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

செயலிழக்க வைக்க நடவடிக்கை

செயலிழக்க வைக்க நடவடிக்கை

நாசா அனுப்பிய ரோவர் ஆனது எளிஸியம் பிளாண்டியா என்ற பகுதியில் தரையிறக்கப்பட்டது. இந்த பகுதியில் ஜூலை மாத இறுதியில் குளிர்காலம் நிறைவு பெறும் எனவும் அதன்பிறகே சூரிய ஒளியை லேண்டர் மீண்டும் பெற முடியும் என தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவு குறித்து பார்க்கையில், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செவ்வாய் கிரக நிகழ்வுகளை கணக்கிட முடியாது எனவும் அதன்பிறகு லேண்டர் செயலிழக்காமல் அதன் பணியை தொடரும் என கணிக்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Mars Unpredictable Weather: Rover Solar panels Covered with Dust

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X