செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..

|

இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது காதுகளைச் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் நிலைநிறுத்தி செவ்வாயின் நிலா அதிர்வுகளை அறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இன்சைட் லேண்டர் செவ்வாயின் மேற்பரப்பின் கீழ் மிகப்பெரிய நில அதிர்வு ஓசைகளைக் கேட்டு வந்துள்ளது. ஆனால், இது வரை இல்லாத அளவிற்கு நாசா ஆய்வு மையம் இப்போது செவ்வாய் கிரகத்தில் 4.2 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பயங்கர நிலநடுக்கமா?

செவ்வாய் கிரகத்தில் பயங்கர நிலநடுக்கமா?

இந்த செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கமானது நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், இந்த செவ்வாய் கிரகத்தின் நிலநடுக்கமானது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை இன்சைட் லேண்டர் உணர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் மார்ஸ்குவேக் என்று அழைக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் நீடித்த 'மார்ஸ்குவெக்' நிகழ்வு

தொடர்ச்சியாக ஒன்றரை மணி நேரம் நீடித்த 'மார்ஸ்குவெக்' நிகழ்வு

பூமியில் ஏற்படும் நிலநடுக்கத்தை நாம் 'எர்த்குவேக்' என்று குறிப்பிடுகிறோம். அதேபோல், செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விஞ்ஞானிகள் 'மார்ஸ்குவெக்' என்று அழைக்கின்றனர். செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த நிலநடுக்கம் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இன்சைட் லேண்டரால் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்க நிகழ்வு இதுவாகும். இதற்கு முன்பு, ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று இன்சைட் அதன் நில அதிர்வு அளவீட்டில் 4.1 ரிக்டர் மற்றும் 4.0 ரிக்டர் ஆகிய இரண்டு நிலநடுக்கங்களைக் கண்டறிந்தது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

செவ்வாயில் 4.2 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்

செவ்வாயில் 4.2 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்

செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழ்த்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முன்னர் பதிவு செய்யப்பட்ட பதிவுகளை விட ஐந்து மடங்கு சக்திவாய்ந்த ஆற்றலைக் கொண்டிருப்பதாக நாசா கூறியுள்ளது. இதற்கும் முன்பு, செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் 3.7 ரிக்டர் அளவில் கடத்த 2019 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுக் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நேரத்தில் இருந்து இப்போது வரை பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றலை நாசா கண்காணித்து வருகிறது.

லேண்டரில் இருந்து 8,500 கிலோமீட்டர் தொலைவில் தோன்றிய செவ்வாயின் மிகப்பெரிய நிலநடுக்கம்

லேண்டரில் இருந்து 8,500 கிலோமீட்டர் தொலைவில் தோன்றிய செவ்வாயின் மிகப்பெரிய நிலநடுக்கம்

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இன்சைட்டின் லேண்டர் இருக்கும் தற்போதைய இருப்பிடத்திலிருந்து சுமார் 8,500 கிலோமீட்டர் தொலைவில் தான் 4.2 ரிக்டர் அளவு நிலநடுக்க நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இதுவரை லேண்டர் கண்டறிந்த மிக தொலைதூர நிலநடுக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் இப்போது நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். இது இன்சைட் அதன் முந்தைய அனைத்து பெரிய பூகம்பங்களையும் கண்டறிந்த இடத்திலிருந்து தோன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்

செவ்வாய் கிரகத்தின் செர்பரஸ் ஃபோசே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு

செவ்வாய் கிரகத்தின் செர்பரஸ் ஃபோசே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பதிவு

முந்தைய நிலநடுக்கங்கள் சுமார் 1,609 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தின் செர்பரஸ் ஃபோசே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செர்பரஸ் ஃபோசே பகுதியில் கடந்த சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக எரிமலை பாய்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்சைட்டின் நில அதிர்வு மீட்டர் பொதுவாக இரவில் தான் நில அதிர்வுகளைக் கண்டுபிடிக்கும். செவ்வாய் கிரகம் இரவில் குளிர்ந்து காற்றுடன் குறைவாக இருக்கும் போது தான் இதுவரை நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ​​இந்த முறை இது அப்படி இல்லாமல் வித்தியாசமாக நிகழ்ந்துள்ளது.

இது வழக்கமான நிகழ்வு போல் இல்லாமல் விசித்திரமாக நிகழ்ந்ததா?

இது வழக்கமான நிகழ்வு போல் இல்லாமல் விசித்திரமாக நிகழ்ந்ததா?

நாசா வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், " இதற்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் இரவில் தோன்றியிருந்தாலும், அவற்றின் வேறுபாடுகள் இருந்துள்ளது, ஆகஸ்ட் பூகம்பங்களில் இரண்டு பூகம்பங்கள் பெரியதாக இருப்பதாகத் தவிர இவை இரண்டுமே பகலில் நிகழ்ந்தன என்பதே ஆச்சரியம் அளிக்கிறது, பகலில் செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் அளவு அதிகமாகவுள்ளது மற்றும் நில அதிர்வு அளவீடும் செவ்வாய் கிரகத்தில் அதிகமாக இருந்தது." என்று நாசா கூறியுள்ளது.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

செவ்வாய் கிரகத்தின் 'இன்னர் ஸ்பேஸ்' ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இன்சைட்

செவ்வாய் கிரகத்தின் 'இன்னர் ஸ்பேஸ்' ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இன்சைட்

கிட்டத்தட்ட நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ரெட் பிளானட்டை முழுமையான சோதனை செய்வதற்காக இன்சைட் லேண்டர் வடிவமைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் "இன்னர் ஸ்பேஸ்" மேலோடு, கவசம் மற்றும் மையம் ஆகிய ஆழமான தகவல்களை படிப்பதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்வெளி ரோபோ எக்ஸ்ப்ளோரர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லேண்டர் அதன் இலக்கை 2018 இல் அடைந்தது. ஆனால், இடையில் இந்த லேண்டர் செவ்வாய் தூசியால் மூடப்பட்டது.

ரோபோ கையைப் பயன்படுத்தி சோலார் பேனலில் மணல் அள்ளிய நாசா

ரோபோ கையைப் பயன்படுத்தி சோலார் பேனலில் மணல் அள்ளிய நாசா

செவ்வாய் காற்றில் இருந்த தூசியால் மூடப்பட்டிருந்த இன்சைட் லேண்டரின் அதன் சோலார் பேனல்களில் பொறியாளர்கள் ஹேக் செய்த பிறகு ரோவர் சமீபத்தில் அதன் மின் தேவையைக் காப்பாற்ற முடிந்தது. பொறியியலாளர்கள் ரோபோ கையைப் பயன்படுத்தி சோலார் பேனலில் மணல் அள்ள முடிந்தது, செவ்வாய் காற்று பலகையிலிருந்து எச்சங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தது. செவ்வாய் கிரகத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதை சூரியனில் இருந்து வெகு தொலைவில் சென்றதால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால் பூகம்பங்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம்.

செவ்வாய் பற்றிய கூடுதல் செய்தி

செவ்வாய் பற்றிய கூடுதல் செய்தி

"இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் விரைவாகச் செயல்படவில்லை என்றால், நாம் சில சிறந்த அறிவியலை இழந்திருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும், செவ்வாய் இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும் நமக்குப் புதியதைக் கொடுத்ததாகத் தெரிகிறது, அவை தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன" என்று இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ் பானெர்ட் ஒரு அறிக்கையில் கூறினார். செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை நாசா தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. செவ்வாய் கிரகம், பூமி, விண்வெளி போன்ற சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Mars Is Shaking Tremendously Nasa Lander Records Biggest 4 Magnitude Quake On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X