பெண்ணை வசியம் செய்ய ஆந்தையை பலி கொடுத்த நபர்!
குற்றம்சாட்டப்பட்டுள்ள லாரி ஓட்டுநரான கன்ஹாயா என்ற பெயர் கொண்ட அந்த நபர், பறவையை பலி கொடுக்கும் செயல்முறையை யூடியூபில் பார்த்து தெரிந்துகொண்ட பின்னர் ஆந்தையை கொன்றுள்ளார்.
டெல்லி சுல்தான்புரியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் தனக்கு பிடித்த பெண்ணை வசியம் செய்வதற்காக கண்கட்டிவித்தை செய்து ஆந்தையை கொன்றதாக கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள லாரி ஓட்டுநரான கன்ஹாயா என்ற பெயர் கொண்ட அந்த நபர், பறவையை பலி கொடுக்கும் செயல்முறையை யூடியூபில் பார்த்து தெரிந்துகொண்ட பின்னர் ஆந்தையை கொன்றுள்ளார்.விரும்பும் நபரை வசியம் செய்வதற்கான மந்திர சடங்குகளின் செய்முறையை அந்த காணொளி விளக்குகிறது.

யூடியூப்
" அவர் ஒரு பெண்ணை விரும்பியதாகவும், அந்த பெண்ணும் தன்னை விரும்புவதற்காக, அந்த யூடியூப் காணொளியில் பார்த்து போன்று ஆந்தையை வைத்து சடங்குகள் செய்ததாகவும் கூறியுள்ளார். குற்றம்சாற்றப்பட்டுள்ள நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர். தீபாவளிக்கு பிறகு அந்த ஆந்தையை பலி கொடுப்பது அவரின் குடும்பத்திற்கும் தெரியும்" என்கிறார் காவல்துறை அதிகாரி.

ஆந்தை
ஆந்தையின் உடலில் ஏற்பட்டுள்ள பல துளைகள் மற்றும் காயங்களால் அது உயரிழத்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கத்தியை வைத்து நகங்களை வெட்டியுள்ளதாகவும், கல்லீரல் மற்றும் நுரையீரலில் பல ஊசிகளை குத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆந்தையை பில்லிசூனியத்திற்காக கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் காவல்துறை அதிகாரி.

நவம்பர் 11
இந்திய விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து இதுபற்றி தகவல் வந்ததை தொடர்ந்து கன்ஹாயா நவம்பர் 11 அன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து ஆந்தையின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மழுப்பலாகவும், சம்பந்தமில்லாமலும் பதிலளித்ததாக போலீசர் தெரிவித்தனர்.

தீபாவளி
கன்ஹாயாவின் தந்தை தீபாவளியின் போது இறந்ததால், அவரின் ஆன்மா சாந்தியடைய அல்லது கடவுளை வணங்குவதற்காக இந்த சடங்குகளை செய்தார் என தொடக்கத்தில் சந்தேகித்த நிலையில், விசாரணைக்கு பின்னர் தான் உண்மையான காரணம் வெளிவந்துள்ளது. அவரின் தந்தை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர்ச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளார்.
எப்படி ஆந்தை அவருக்கு கிடைத்தது என்பதற்கு மழுப்பலாகவே பதிலளிக்கிறார். காயமடைந்த நிலையில் கிடந்த ஆந்தையை வீட்டிற்கு எடுத்துவந்தாக கூறினார். ஆனால் இவரால் தான் காயங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரது உறவினர் ஆந்தையை கொடுத்ததாக கூறியுள்ளார். அதுவும் உறுதிபடுத்தப்படவில்லை.

மனைவி
துவக்கத்தில் அவரது மனைவி தான் இந்த மாயமந்திரங்களில் ஈடுபட்டதாக சந்தேகித்த நிலையில், பின்னர் கன்ஹாயா தான் செய்ததாக தெளிவாகியுள்ளது. ஆனால் போலீசர் அவரது குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications