Home
News

Flipkart வெளியிட்ட அசத்தலான மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் சாதனம்.. ரூ. 6,299 என்ற மலிவு விலையில் எப்போ வாங்கலாம்

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் ஃப்ளிப்கார்ட்டுக்குச் சொந்தமான பிராண்டிலிருந்து தொடங்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிறுவனம் முன்பு ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்பீக்கர்களை அதன் வரம்பில் அறிமுகப்படுத்தியது. மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் என்பது ஒரு பட்ஜெட் விலை சாதனம் ஆகும். இது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய சாதனத்தின் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் விற்பனை

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் விற்பனை

இந்த சாதனம் பல அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. இதில் கைரேகை ஸ்கேனர் இல்லை. இது ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மாதிரி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது இந்த புதிய மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வருகிறது மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி போர்ட் அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் விலை என்ன?

இந்தியாவில் மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் விலை என்ன?

புதிய மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் ஸ்மார்ட்போன் விலை நாங்கள் முன்பே சொன்னது போல மலிவு விலையில் அறிமுகமாகிறது. இதன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு ரூ. 7,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 6,299 விலையில் விற்கப்படும். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக இது விற்பனைக்கு வரும். மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

MarQ M3 ஸ்மார்ட் விவரக்குறிப்புகள்

MarQ M3 ஸ்மார்ட் விவரக்குறிப்புகள்

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.8' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,560 பிக்சல்கள் டிஸ்ப்ளே 2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இடம்பெறுகிறது. இது 2 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட 1.6GHz ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 256 ஜிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் கேமரா அம்சம்

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் கேமரா அம்சம்

மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் பொக்கே லென்ஸ் உள்ளது. கேமரா அம்சங்களில் நைட் மோட், பியூட்டி மோட், ஸ்லோ மோஷன், டைம் லாப்ஸ் மற்றும் பல அடங்கும். மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் அதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

பேட்டரி பயன் மற்றும் இணைப்பு அம்சம்

பேட்டரி பயன் மற்றும் இணைப்பு அம்சம்

இது சுமார் 24 மணிநேர இசை பின்னணி, 9 மணிநேர மூவி நேரம் மற்றும் சுமார் 42 மணிநேர அழைப்பு நேரத்தை வழங்குவதாகக் கூறுகிறது. இந்த சாதனம் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது. ஆனால், இதில் கைரேகை ஸ்கேனர் இல்லை. இணைப்பு விருப்பங்களில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டு, வைஃபை பி/ஜி/என், ப்ளூடூத் வி 4.2, ஜிபிஎஸ், 4 ஜி ஆதரவு மற்றும் பல உள்ளன. மார்க்யூ எம் 3 ஸ்மார்ட் 185 கிராம் எடை மற்றும் 148x70.9x10.75 மிமீ அளவிடும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
MarQ M3 Smart With 5000mAh Battery Launched In India Know Price And Specification : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X