மனைவிக்காக தனது கைப்பட பரிசை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்! மனதை தொட்ட நிகழ்வு...

|

உங்கள் மனைவி ஒரு கடினமான நேரத்தை சந்திக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

மனைவிக்காக தனது கைப்பட பரிசை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்!

பெரும்பாலானோர் தங்கள் மனைவிக்கு பூக்களை வாங்கி கொடுப்பர் அல்லது வெளியே அழைத்துச்செல்வர். ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் தன்னுடைய பாசத்தை காட்ட வேறு திட்டங்களை வைத்திருந்தார். அவரது மனைவி பிரிசில்லா தான் சரியான தூக்கமில்லாமல் தவிப்பதுப் பற்றி புகார் கூறியபோது, ​​இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மார்க் அறிந்திருந்தார்.

ஏப்ரல் 28

ஏப்ரல் 28

கடந்த ஏப்ரல் 28 ஞாயிறன்று தனது இன்ஸாடாகிராம் இடுகையில், பேஸ்புக் நிறுவனர் தனது மனைவிக்காக தானே தயாரித்த ஒரு புதிய 'ஸ்லீப் பாக்ஸ்' என்ற சாதனத்தைப் பற்றி தெரிவித்திருந்தார்.

குழந்தைகள் பிறக்கும் போது தங்கள் தூக்கத்தின் தரம் எப்படி குறைகிறது என்பதை பகிர்ந்துகொண்டார்.

குழந்தைகள் பிறக்கும் போது தங்கள் தூக்கத்தின் தரம் எப்படி குறைகிறது என்பதை பகிர்ந்துகொண்டார்.

எல்லா புதிய பெற்றோர்களும் தொடர்புபடுத்த முடியும் என்பதால், குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும் போது தங்கள் தூக்கத்தின் தரம் எப்படி குறைகிறது என்பதை பகிர்ந்துகொண்டார். இரண்டு இளம் மகள்களுடன்,பிரிசில்லா மிகவும் மோசமாக தூக்கத்தைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் அவர் அடிக்கடி எழுந்து குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்.

 'ஸ்லீப் பாக்ஸ்'

'ஸ்லீப் பாக்ஸ்'

மார்க் ஜுக்கர்பெர்க்-ஆல் அவரது மனைவிக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது இந்த 'ஸ்லீப் பாக்ஸ்' மற்றும் இதைப்பற்றி அவர் விவரிக்கையில், "பிரிசில்லாவின் நைட் ஸ்டேன்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸ் காலை 6 மணி முதல் 7 மணிக்கு இடையே ஒரு மங்கலான வெளிச்சத்தை வெளியிடும். அவரது கண்ணுக்கு புலப்படும் வகையிலான இந்த ஒளியை பார்த்தவுடன், இருவரில் ஒருவர் குழந்தைகளை கவனித்த எழுந்துகொள்ள வேண்டும் என அறிந்துகொள்வார். ஆனால் அவர் இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தால் அந்த ஒளியால் அவரை எழுப்ப முடியாத அளவிற்கு மங்கலாக இருக்கும். " என்கிறார்.

யாராவது சவாலுக்கு தயாரா?

யாராவது சவாலுக்கு தயாரா?

இதன்மூலம் பிரிச்சில்லா நடுஇரவு நேரத்தில் எழுந்தால் கூட, நேரத்தை பார்க்காமல் மீண்டும் தூங்கச் செல்ல முடியும் என்பதை இந்த சாதனம் உறுதிசெய்கிறது.

பேஸ்புக் நிறுவனர் தனது புதிய படைப்புகளை தயாரித்து சந்தைப்படுத்த விரும்பும் வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறார். யாராவது சவாலுக்கு தயாரா?

 இது மார்க்கின் உண்மையான கண்டுபிடிப்பு இல்லை.

இது மார்க்கின் உண்மையான கண்டுபிடிப்பு இல்லை.

நிச்சயமாக நெட்டிசன்கள் நீண்டகாலமாக நிலவிவரும் இந்த பிரிச்சனைக்கு மார்க் அளித்த தனித்துவமான தீர்வால் ஈர்க்கப்பட்டு, இந்த தீர்வை உறவுகளின் இலக்கு என கொண்டாடுகின்றனர்.

இணையதளத்தில் வைரலான இந்த பதிவை பலரும் கொண்டாடிவரும் நிலையில், சிலர் இது மார்க்கின் உண்மையான கண்டுபிடிப்பு இல்லை. ஏற்கனவே இது புழக்கத்தில் உள்ளது என கருந்து தெரிவித்துவருகின்றனர்.

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

இது உண்மையே இல்லையோ, மார்க் ஜுக்கர்பெர்க்கின் அன்பின் உழைப்பை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவும் அன்னையர் தினம் கொண்டாடவுள்ள சமயத்தில் இந்த தகவல் வெளியாகயுள்ளது மேலும் சிறப்பு!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mark Zuckerberg's handmade gift to wife hits us in the feels : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X