சொத்து மதிப்பு : $200 பில்லியன்; வருட சம்பளம் : 1 டாலர்..!
முதலில் எல்லாம் தூங்கி எழும்போது அம்மா அப்பா முகத்தில் அல்லது ராசியானவர்களின் முகத்தில் முழிப்போம். இப்போதெல்லாம் நம்ம முகத்தில் தான் முழிக்கிறோம், அதாவது ஃபேஸ்புக்ல முழிக்கிறோம். அதுல உங்க ப்ரொஃபைல் பிக்சர் தானே இருக்கும், அப்போ உங்க முகத்துல தான முழிக்கிறீங்க..?!

அப்படியாக, நம்ம வாழ்க்கையோட ரொம்ப ஊறிப்போன ஃபேஸ்புக்கை நமக்கு தந்த மார்க் ஸுக்கர்பெர்க் பற்றி நம்மில் பெரும்பாலானோர்களுக்கு நன்றாகவேத் தெரியும். சரி, அதெல்லாம் இருக்கட்டும் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று உங்களுக்கு தெரியுமா..?!
ஆணும் பெண்ணும் சமம் - "ஆமாம் சாமி" சொன்ன ஃபேஸ்புக்..!
ஃபேஸ்புக்கின் மொத்த மதிப்பு 200 டாலர் பில்லியனுக்கும் மேல், அப்போ அதன் சிஇஓ எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்று தானே யோசிக்கிறீகள்..?! ரொம்ப யோசிக்க வேண்டாம் - அவர் சம்பளம் 1 டாலர், அதுவும் வருட சம்பளம்..!
உங்களை 'அன்ஃப்ரெண்ட்' பண்ணவங்க லிஸ்ட் வேணுமா..!?
ஆம்.. நிஜமாகத்தான், அவர் தனக்கு தானே கொடுத்துக் கொள்ளும் வருட சம்பளம் 1 டாலர் மட்டுமே..! அதற்கு அவர் கூறும் விளக்கம் இன்னும் சுவாரசியமானது, "போதுமான பணம் என்னிடம் இருக்கிறது. இனி அதைக் கொண்டு சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதில் தான் என் கவனம் இருக்கிறது..!"

"ஃபேஸ்புக்கை தவிர்த்து உடல் நலத்தில் கவனம் செலுத்து செலுத்துகிறேன், பலர் தனக்கான அங்கீகாரம் பெறாமலேயே இறந்து போகின்றனர். உலகில் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த வாய்ப்பை பெறுவது என் அதிர்ஷ்டம்..!" என்கிறார் மார்க் ஸுக்கர்பெர்க்..! - சின்ன வயசு ஆனால் பெரிய மனசு..!


Click it and Unblock the Notifications