Home
News

வணக்கம்டி மாப்ள.. ஆளு யார்னு தெரியுதா.. WhatsApp Video Call-ல் 2 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த மார்க்!

வாட்ஸ்அப் (WhatsApp) பிளாட்ஃபார்மில், இளம் தலைமுறை (அதாவது ஜென்-ஸீ மற்றும் மில்லினியல்ஸ் என்று அழைக்கப்படும்) பயனர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் 2 புதிய வீடியோ கால் அம்சங்கள் (Video Call Features) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சுவாரசியமாக இவ்விரு அம்சங்களையும் மெட்டா (Meta) நிறுவனத்தின் சொந்தக்காரரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கே (Mark Zuckerberg) பரிசோதனை செய்து பார்த்து, அவைகளை அறிமுகம் செய்து உள்ளார். அதென்ன அம்சங்கள்? வாட்ஸ்அப்பில் இவைகளை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:

மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) வழியாக வெளியிட்ட ஒரு பதிவில், "சில புதிய ஃபில்டர்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பேக்கிரவுண்ட் (New Filters and backgrounds) வெளியிடுகிறேன். அவைகளை சோதித்து பார்க்க வேண்டியிருந்தது" என்று கூறி சில ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட் எபெக்ட்களை பகிர்ந்துகொண்டார்.

WhatsApp Video Call-ல் 2 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த மார்க்!

மெட்டாவின் கூற்றுப்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபில்டர்கள் மிகவும் விளையாட்டுத்தனமான சூழ்நிலையை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அது உங்கள் வீடியோவிற்கு வண்ணத்தை சேர்க்கும் அல்லது கலை உணர்வை உருவாக்கும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேக்கிரவுண்ட்களுடன் நீங்கள் உங்கள் சுற்றுப்புறங்களை ப்ரைவேட் ஆக வைத்து கொள்ளலாம்.

உதாரணத்திற்க்கு நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமல், ஒரு காபி ஷாப்பில் அல்லது ஒரு வசதியான அறையில் நீங்கள் இருப்பது போல் உங்களை காட்டிக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக உங்கள் வாட்ஸ்அப் வீடியோ கால்களை மெருகூட்டப்பட்ட தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலிக்கு வந்து உள்ள லேட்டஸ்ட் அப்டேட் வழியாக வார்ம் (Warm), கூல் (Cool), பிளாக் & ஒயிட் (Black & White), லைட் லீக் (Light Leak), ட்ரீமி (Dreamy), ப்ரிஸம் லைட் (Prism Light), ஃபிஷ்ஐ (Fisheye), விண்டேஜ் டிவி ( Vintage TV), ஃப்ரோஸ்டட் கிளாஸ் (Frosted Glass) மற்றும் டியோ டோன் (Duo Tone) போன்ற 10 ஃபில்டர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

கூடவே ப்ளர் (Blur), லிவிங் ரூம் (Living Room), ஆபீஸ் (Office), கஃபே (Cafe), பெபல்ஸ் (Pebbles), ஃபுடி (Foodie), ஸ்மூஷ் (Smoosh), பீச் ( Beach), சன்செட் ( Sunset), செலிப்ரேஷன் (Celebration) மற்றும் ஃபாரஸ்ட் (Forest) உள்ளிட்ட 10 புதிய பேக்கிரவுண்ட் விருப்பங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் பயனர்கள், தாங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ்அப் வீடியோ கால்களின் தரத்தை மேம்படுத்த டச்-அப் மற்றும் லோ-லைட் ஃபில்டர்களையும் பயன்படுத்தலாம்,

வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி? வாட்ஸ்அப் வழியாக ஒரு வீடியோ கால்-ஐ தொடங்கவும், இப்போது உங்கள் ஸ்மார்ட்போனின் மேல் வலது மூலையில் உள்ள எஃபெக்ட் ஐகானை தேர்ந்தெடுக்கவும், அங்கு நீங்கள் எபெக்ட்ஸ் மற்றும் பேக்கிரவுண்ட்களை தேர்வு செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்கள் ஆனது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் இன்னமும் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்களை பெறவில்லை என்றால், கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் ஒரு புதிய ஷார்ட்கட்டை சோதனை செய்து வருவதாகவும், இதன் மூலம் அனைத்து சாட்களிலும் உள்ள மெசேஜ்களையும் ஒரே நேரத்தில் படித்து விட்டதாக 'மார்க்' செய்ய முடியும் என்றும் ஒரு தகவல் வெளியானது. அனைத்து மெசேஜ்களையும் ரீட் செய்ததை குறிக்கும் விருப்பம் ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் இருந்தாலும் கூட, அதற்கு பல படிகள் தேவைப்படும் காரணத்தினால் அதை இன்னமும் விரைவாக அணுக இந்த ஷார்ட்கட் உருவாக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg Introduced 2 New WhatsApp Video Call Feature Custom Background Filters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X