Home
News

ஹவாயில் ராஜ வாழ்க்கை.. 1400 ஏக்கர் தீவு.. 5000 சதுர அடி பங்கர்.. மார்க் ஜூக்கர்பெர்க்கின் ஹாலிடே!

பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹவாய் (Hawaii) தீவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) கட்டியெழுப்பிய 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அண்டர் கிரவுண்ட் பங்கரில் (Underground Bunker) என்னென்ன வசதிகள் இருக்கின்றன தெரியுமா? இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்வோம்.

இந்தியாவில் இருந்து விடுமுறையை கொண்டாட "மாலத்தீவுக்கு செல்லலாமா? இல்லை லட்சத்தீவுக்கு செல்லலாமா?" என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் பட்டிமன்றமே நடத்த தொடங்கி விட்டனர். அதேபோல "கொடைக்கானல் போகவே, இங்க காசு இல்ல, இதுல மாலத்தீவாம், லட்சத்தீவாம்" என்று மீம்ஸ்களும் பின்னி எடுக்கின்றன.

ஹவாயில் ராஜ வாழ்க்கை.. 1400 ஏக்கர் தீவு.. 5000 சதுர அடி பங்கர்!

ஆனால், இதே விடுமுறைக்காக 1,400 ஏக்கர் பரப்பளவில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதில் 5,000 சதுர அடியில் அண்டர் கிரவுண்ட் பங்கரை கட்டிய பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்களின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்கின் பில்லியனர் வாழ்க்கை நம்மை ஒரு கணம் வியக்க வைத்துள்ளது.

பசுபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் ஹவாய் தீவுக்கூட்டத்தில் கவாய் (Kauai) என்னும் தனித்தீவில் சுமார் 1200 ஏக்கரை மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் இருவரும் வாங்கி இருக்கின்றனர். 2014ஆம் ஆண்டிலேயே வாங்கப்பட்ட இந்த தீவில் மாட்டுப்பண்ணை, பழத் தோட்டங்கள், அண்டர் கிரவுண்ட் பங்கர் போன்றவற்றை உருவாக்கினர்.

இதுவரை இதுகுறித்த செய்திகள் மட்டுமே வெளியாகி வந்தன. ஆனால், இப்போது மனைவி பிரிசில்லா சான் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட ஹவாய் சென்றிருக்கும், மார்க் ஜூக்கர்பெர்க் அதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அண்டர் கிரவுண்ட் பங்கரில் கேம் விளையாடும்படியான சமீபத்திய வீடியோ மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஹவாயில் ராஜ வாழ்க்கை.. 1400 ஏக்கர் தீவு.. 5000 சதுர அடி பங்கர்!

இந்த அண்டர் கிரவுண்ட் பங்கரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? இந்த பங்கர் 270 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. 5000 சதுரடி பரப்பளவில் இருப்பதால், அத்தியாவசியமாக தேவைப்படும் உணவு மற்றும் மின்சாரம் போன்றவற்றை உள்ளிருந்தபடியே உற்பத்தி செய்யும் விதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களுக்கு ஏற்றபடி இருக்கிறது.

அதோடு 30 பெட்ரூம்கள், 30 பாத்ரூம்கள், மினி தியேட்டர், லிவ்விங் ரூம்கள் போன்றவையும் இருக்கின்றன. அதேபோல கிச்சன், கால்நடை வளர்ப்பு கட்டடம் போன்றவையும் உள்ளன. இந்த பங்கரில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது விடுமுறை சமீப நாட்களாக கழித்து வருகிறார். இதற்கிடையில், அதில் உள்ள மினி தியேட்டரில் வீடியோ கேம் விளையாடும்படியான வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பிறகே அவரது பங்கர் குறித்த விவரங்கள் உலகளவில் டிரெண்ட்டாகி வருகின்றன. மேற்கூறிய விவரங்களும் கசிந்தவையே. முன்னதாக, தனது தீவில் உலகின் மிக விலையுயர்ந்த வாக்யு (Wagyu) மற்றும் அங்கஸ் (Angus) ரக கால்நடைகளை வளர்த்து வருவதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். அதேபோல மக்காடமியா (Macadamia) நட்ஸ் தோட்டங்களையும் உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பண்ணைகளையும், தோட்டங்களையும் பராமரிக்க அவரது மகள்கள் உதவி வருவதாகும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தனது விடுமுறை நேரத்தை குடும்பத்துடன் செலவிடுகிறார். ஆனால், அதே விடுமுறையை அவரது யூசர்களில் பலரும் பேஸ்புக்கில் மட்டுமே கழிப்பதை பார்க்க முடிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg Enjoying Video Games in His Kualoa Ranch Underground Bunker in Hawaii
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X