Home
News

அடேங்கப்பா இந்த வாட்ச் இத்தனை கோடியா? உலகத்தில மொத்தமே 20 வாட்ச் தான் இருக்கு.. விலை என்ன தெரியுமா?

உலக பணக்காரர் பட்டியலில் 202 பில்லியன் சொத்து மதிப்புடன், 4வது இடத்தில் இடம்பிடித்துள்ள மெட்டா (Meta) நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கையில் உலகத்தின் காஸ்ட்லீ கைக்கடிகாரம் (world's costly watch) காணப்பட்டுள்ள சம்பவம் சமூக (social media viral) வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவர் கையில் காணப்பட்ட வாட்ச் உலகத்தின் மிகவும் ஸ்லிம்மான வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒட்டுமொத்த அண்டத்தில் இந்த வாட்சை வெறும் 20 பேர் மட்டுமே வைத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இதன் விலையை கேட்டால் வாய்பிளப்பீர்கள்.

ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp), மெஸ்சேன்ஜ்ர் (Messenger), அக்குலஸ் விஆர் (Oculus VR), கிப்பி (Giphy) மற்றும் லைவ்ரயில் (Liverail) போன்ற பிரபலமான நிறுவனங்களை மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயக்கி வருகிறார். நமக்கு தெரிந்த இந்த பிரபலமான சேவைகளுடன் மெட்டா நிறுவனம் மொத்தம் 94 நிறுவனங்களை உலகளவில் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா இந்த வாட்ச் இத்தனை கோடியா? உலகத்தில 20 வாட்ச் தான் இருக்கு

அடேங்கப்ப இந்த வாட்ச் இத்தனை கோடியா? Mark Zuckerberg கையில் இருக்கா வாட்சை கவனிசீங்களா?

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) இன் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு கணக்கின் படி, 202 பில்லியன் டாலரை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வழியாக ஒரு லைவ் வீடியோவில் மக்களுடன் மெட்டாவின் புதிய ஏஐ (AI) பற்றி விளக்கமளித்தார்.

அப்போது அந்த வீடியோவில் மார்க் ஜுக்கர்பெர்க் உலகத்தின் மிகவும் ஸ்லிம்மான கைக்கடிகாரத்தை அவரது கையில் அணிந்திருப்பது வீடியோவில் காணப்பட்டது. இந்த வாட்ச் அவரது கையில் ஏதோ பென்சிலால் வரையப்பட்ட ஒரு கொடு போல காட்சியளித்தது. மார்க் ஜுக்கர்பெர்க் வீடியோவில் அணிந்திருக்கும் வாட்ச் என்ன மாடல் என்று சிலர் பேச்சு துவங்க, அதை பற்றி சிலர் ஆராய துவங்கி இறுதியில் அது BVLGARI Octo Finissimo Ultra COSC வாட்ச் என்று அடையாளம் காணப்பட்டது.

BVLGARI Octo Finissimo Ultra COSC வாட்ச்.. மொத்த அண்டத்திலும் 20 வாட்ச் தான் இருக்கு:

இந்த வாட்ச் பற்றி ஆராய்ந்த பொழுது, இது BVLGARI என்ற பிராண்டில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு ஸ்லிம் மாடல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச் என்பது தெரியவந்தது. இது முழுக்க-முழுக்க டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட வாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சாண்ட்பிளாஸ்ட்டட் டைட்டானியம் கேஸ் 1.70 mm தடிமன் கொண்டது. இந்த வாட்சின் பிரேஸ்லெட் 1.50 mm தடிமனுடன் உலகத்தின் மிக - மிக ஸ்லிம்மான வாட்ச் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த அக்டோ பினிஸ்சிமோ அல்ட்ரா காஸ்க் (Octo Finissimo Ultra COSC) வாட்சை ஒரு ஸ்பெஷல் எடிஷன் வாட்சாக வருகிறது. BVLGARI நிறுவனம் மொத்தமாகவே வெறும் 20 எண்ணிக்கையிலான Octo Finissimo Ultra COSC வாட்சை மட்டுமே உருவாக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஒட்டுமொத்த உலகத்தில் இந்த வாட்ச் வெறும் 20 பேரிடம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஜுக்கர்பெர்க் கையில் இருக்கும் வாட்ச்சின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மார்க் ஜுக்கர்பெர்க் கையில் காணப்பட்ட இந்த காஸ்ட்லீ வாட்சின் விலை பற்றி இணையத்தில் தேடிய பொழுது, இதன் விலை சுமார் 5,29,000 டாலர்கள் என்பது தெரியவந்தது. அதாவது, இந்திய மதிப்பில் இதன் விலை வெறும் ரூ. 4,48,63,699 ஆகும். அதாவது, நான்கு கோடியே நாற்பத்தெட்டு லட்சத்து அறுபத்து மூவாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது ரூபாய் மற்றும் பூஜ்ஜிய பைசா மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg BVLGARI Octo Finissimo Ultra COSC World's Slimmest Watch Costs More Than Rs 4 Crore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X