5 மணி நேர விசாரணை; இந்திய தேர்தல் உட்பட மார்க் கூறிய உண்மைகள்.!

மார்க்கின் இந்த உறுதிப்படுத்தல் ஆனது - டேட்டா திருட்டு ஊழல் சார்ந்த விடயங்களை எண்ணியெண்ணி கவலைகொண்டிருந்த - வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் பயனர்களுக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது.

|

பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டா திருட்டு ஊழல் மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைப்பது சார்ந்த குறுக்கீடுகள் தொடர்பான விசாரணையின் சாட்சியளிப்பின் போது, "பேஸ்புக் சிஸ்டம்ஸ் ஆனது வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் செய்திகளின் உள்ளங்களை பார்க்கவில்லை" என்று மார்க் ஜுக்கர்பெர்க், செனட்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

5 மணி நேர விசாரணை; இந்திய தேர்தல் உட்பட மார்க் கூறிய உண்மைகள்.!

மார்க்கின் இந்த உறுதிப்படுத்தல் ஆனது - டேட்டா திருட்டு ஊழல் சார்ந்த விடயங்களை எண்ணியெண்ணி கவலைகொண்டிருந்த - வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் பயனர்களுக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது.

இந்திய தேர்தல்.!

இந்திய தேர்தல்.!

இதற்கு முன்னதாக, பேஸ்புக் நிறுவமானது, இந்தியா மற்றும் இதர நாடுகளில் நடக்கும் வாக்குப்பதிவுகளானது, மிகவும் நியாயமான முறையில் நடைபெற, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் நடத்தப்படும்.!

தேர்தல்கள் நடத்தப்படும்.!

அதாவது "2018-ஆம் ஆண்டு என்பது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான ஆண்டாகும். இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும். இந்தத் தேர்தல்கள் பாதுகாப்பாக நடைபெற்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் அனைத்தையும் செய்வோம் "என்று செனட் நீதித்துறை மற்றும் வணிகக் குழுக்களின் கூட்டு விசாரணை கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

நிகழ்த்தும் போலி செய்திகள் பரவியதற்காகவும்.!

நிகழ்த்தும் போலி செய்திகள் பரவியதற்காகவும்.!

உலகின் மிக பிரபலமான சமூக ஊடகத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன மார்க் ஜுக்கர்பெர்க், "பேஸ்புக் ஒரு பரந்த அளவிலான பார்வையை கொண்டிருக்கவில்லை என்பதற்காகவும், அதன் விளைவாக வெளிநாட்டு தேர்தல்களின் முடிவுகளில் குறுக்கீடுகள் நிகழ்த்தும் போலி செய்திகள் பரவியதற்காகவும், வருந்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஐந்து மணி நேர விசாரணை.!

ஐந்து மணி நேர விசாரணை.!

சுமார் ஐந்து மணி நேரம் இந்த விசாரணையில், 33 வயதுமிக்க பில்லியனர் ஆன மார்க், (2016-ல்) டொனால்ட் ட்ரம்ப்பை வெற்றி அடைய செய்யும் முனைப்பில் கீழ் நிகழ்த்தப்பட்ட, ரஷ்ய நடவடிக்கைகளை அடையாளம் காண்பதில் பேஸ்புக் மெதுவாக செயல்பட்டதற்காகவும் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.

தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.!

தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளது.!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கும் முனைப்பின்கீழ் செயல்பட்ட பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவிற்கு, சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டை தொடர்ந்தே, இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
மற்றொரு விசாரணை.!

மற்றொரு விசாரணை.!

நேற்று (செவ்வாயன்று) நடந்த விசாரணையை தவிர்த்து, இன்று (புதன்கிழமை) ஹவுஸ் எனர்ஜி மற்றும் காமர்ஸ் கமிட்டி முன்பாக, மார்க் மீதான மற்றொரு விசாரணை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg assures users, says Facebook systems do not see messages sent over WhatsApp. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X