நேரடியாக மார்க்கே அறிவித்தார்.. பரபரப்பை கிளப்பும் புது Privacy அம்சம்.. சைலன்ட் ஆகிப்போன WhatsApp பயனர்கள்!
கேட்கும் போதே பரபரப்பை கிளப்பும் புதிய ப்ரைவஸி அம்சம் (New Privacy Feature) வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ்அப்பில் WhatsApp) அறிமுகமான அம்சங்களில் இது மிகவும் முக்கியமான அம்சமாக இருப்பதால், மார்க் ஜுக்கர்பெர்க்கே (Mark Zuckerberg) இதை நேரடியாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ஃபேஸ்புக் (Facebook) என்று அழைக்கப்பட்ட மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்பில், சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ் (Silence Unknown Callers) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் பெயரை வைத்தே இதன் வேலை என்னவென்பதை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ் என்பது தெரியாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை சத்தமில்லாத அழைப்புகளாக (Silent Calls) மாற்றும் ஒரு அம்சமாகும். அதாவது தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒலிக்காது.
இருப்பினும், குறிப்பிட்ட அழைப்புகள் தொடர்பான விவரங்கள் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் உள்ள கால் லிஸ்டிலில் (Call List) சேகரிக்கப்படும். அதன் வழியாக தெரியாத எண்களில் இருந்து வந்து இருந்தாலும் கூட, அவைகளில் ஏதேனும் முக்கியமான அழைப்புகள் உள்ளதா என்பதையும் உங்களால் மதிப்பாய்வு செய்ய முடியும்.
ஒட்டுமொத்தமாக, சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ் அம்சமானது ஸ்பேம் (Spam), மோசடிகள் (Scams) மற்றும் அறியப்படாத அழைப்பாளர்களிடம் இருந்து உங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும். அதே சமயம் வாட்ஸ்அப் வழியாக உங்களுக்கு வரும் அழைப்புகளின் மீது அதிக கட்டுப்பாட்டையும் வழங்கும்.
வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய ப்ரைவஸி அம்சமானது, தெரியாத எண்களில் இருந்து அல்லது அறிமுகமில்லாத தொடர்புகளில் இருந்து வரும் தேவையற்ற அழைப்புகளை தானாகவே தடுக்கும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்த அம்சம் சில வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
மோசடி செய்பவர்கள் மட்டுமே அறியப்படாத எண்களில் இருந்து அழைக்க மாட்டார்கள் அல்லவா? எமெர்ஜென்சி நேரத்தில் அல்லது நல்ல நோக்கங்களுக்காக கூட புதிய எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மேற்கொள்ளப்படலாம் அல்லாவா? அதுபோன்ற நேரங்களில் "சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ்" அம்சமானது ஒரு முட்டுக்கட்டையாக செய்ல்படலாம் அல்லவா?
இருந்தாலும் கூட, பெரும்பான்மையான வாட்ஸ்அப் பயனர்களின் பக்கமிருந்து யோசித்து பார்த்தால், இந்த புதிய அம்சம் தேவையற்ற அழைப்புகளால் அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்பதிலும், வாட்ஸ்அப் வழியிலான மோசடிகள் மற்றும் ஸ்பேம்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
வாட்ஸ்அப் நிறுவனமானது ப்ரைவஸி செக்கப் (Privacy Checkup) என்கிற அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது வாட்ஸ்அப்பில் உள்ள அத்தியாவசியமான ப்ரைவஸி செட்டிங்ஸ்களை பற்றி பயனர்களுக்கு வழிகாட்டும் ஒரு அம்சமாகும். இது ப்ரைவஸி செட்டிங்ஸில் (Privacy settings) உள்ள ஸ்டார்ட் செக்கப் (Start checkup) என்கிற விருப்பத்தின் கீழ் அணுக கிடைக்கும்.
'ஸ்டார்ட் செக்கப்' என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் படிப்படியான செயல்முறையை அணுகலாம். வாட்ஸ்அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரைவஸி செக்கப் வழியாக பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான அளவிலான பாதுகாப்பை தேர்வுசெய்ய முடியும்.


Click it and Unblock the Notifications