Google Maps-க்கு போட்டியாக வந்த Mappls செயலியின் ஐந்து முக்கிய அம்சங்கள்: மிஸ் பண்ணாதீங்க..
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலி நாடு முழுவதும் அதிக பிரபலமாகி வருகிறது. அதுவும் கூகுள் மேப் (Google Maps) செயலிக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மேம்பட்ட வசதிகள் இந்த மேப்பிள்ஸ் செயலி உள்ளதால் தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
இதுதவிர அமெரிக்கா மற்றும் இந்திய இடையே வர்த்தக பிரச்சனை தொடங்கி நாள் முதல் இந்தியர்கள் அரட்டை, மேப்பிள்ஸ் போன்ற இந்திய செயலிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தினமும் இந்திய செயலிகளைத் தான் தற்போது ஏராளமானோர் டவுன்லோட் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

அரட்டை செயலி போன்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலியிலும் ஏராளமான சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இப்போது இந்த மேப்பிள்ஸ் செயலியில் உள்ள முக்கிய ஐந்து சிறப்பு வசதிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேப்பிள்ஸ் செயலியில் முக்கிய ஐந்து வசதிகள்:
1. இந்த மேப்பிள்ஸ் செயலியில் சுலபமாக அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்படி, மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சிக்கலான சந்திப்புகள், தெளிவான பாதைகளுடன் 3டி காட்சிகள் இடம்பெற்று உள்ளன. எனவே வாகன ஓட்டிகளுக்கு இது மிகவும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்
2. மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த மேப்பிள்ஸ் செயலியில் உள்ளன. அதுவும் இந்த செயலியில் இருக்கும் மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பம் மூலம் நெரிசல் குறைவான மாற்று வழிகளை உடனுக்குடன் உங்களுக்குப் பரிந்துரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சில முக்கிய நேரங்களில் இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
3.மேப்பிள்ஸ் செயலி ஆனது சாலையில் உள்ள வேகத் தடைகள், பள்ளங்கள், விபத்து அடிக்கடி நிகழும் மோசமான வளைவுகளின் போது பிரத்யேக எச்சரிக்கைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதுபோன்ற வசதிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
4. டோல் சேவிங் கால்குலேட்டர் (Toll saving calculator) வசதி இந்த மேப்பிள்ஸ் செயலியில் இருக்கிறது. அதுவும் இந்த வசதி நீங்கள் செல்லும் பாதையில் உள்ள மொத்தம் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறது. அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வசதி மிகக் குறைந்த செலவிலான மாற்று வழிகளையும் கணக்கிட்டு காட்டும். பின்பு டோல் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் செலவுகளை இது கணக்கிட்டுக் காட்டும் என்பதால், உங்களது மொத்த பயணச் செலவை முன்கூட்டியே திட்டமிடலாம்.

5. இந்த மேப்பிள்ஸ் செயலியில் இருப்பிடத்தைச் சொல்ல அல்லது முகவரியைச் சொல்ல அவசியம் இருக்காது. அதாவது இதில் உங்கள் இருப்பிடத்தை வெறும் 6 எழுத்துக்கள் அல்லது எண்களை கொண்டு பின் உருவாக்கிக் கொள்ளலாம். அதேபோல் ஹைப்பர் லோக்கல் நேவிகேஷன் இருப்பதால், தெருவில் உள்ள சரியான வீட்டையே, கட்டடத்தையோ தேடிச் சுற்ற அவசியம் இருக்காது. மிகவும் துல்லியமான இருப்பிடத்தை மேப்பிள்ஸ் செயலி காட்டிவிடும்.
மேலும் இந்த மேப்பிள்ஸ் செயலியில் கூகுள் மேப் செயலிக்கு போட்டி கொடுக்கும் வகையில் இன்னும் பிரத்யேக வசதிகள் உள்ளன. இதனால் கூகுள் மேப் செயலியை விட அதிக மக்கள் இந்த மேப்பிள்ஸ் செயலியைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்த மேப்பிள்ஸ் செயலியை டவுண்லோடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய செயலி இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








